நாணய மாற்று வீதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
==கேள்விகள்==
நாணய மாற்று முறைமையில் விலைக்கான கேள்வி கொடுக்கும்போது, ஓர் அலகு [[மூல நாணயம்|மூல நாணயத்துக்காகக்]] கொடுக்க விரும்பும் [[கேள்வி நாணயம்|கேள்வி நாணய]] அலகுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, நாணய மாற்றுக் கேள்வியொன்றில் EURUSD நாணய மாற்று வீதம் 1.432 (ஒரு யூரோவுக்கு 1.432 அமெரிக்க டாலர்கள்) எனக் குறிப்பிடப்பட்டால் கேள்வி நானயம் அமெரிக்க டாலரும், மூல நாணயம் யூரோவும் ஆகும்.
 
 
மூல நாணயம் எது எனத் தீர்மானிப்பதற்கு உலகின் பெரும்பாலான நாணய மாற்றுச் சந்தைகளில் மரபு ஒன்று உள்ளது. இதன்படி மூல நாணயமாக இருப்பதற்குரிய தெரிவொழுங்கு: யூரோ - ஐக்கிய இராச்சிய பவுண்டு - ஆசுத்திரேலிய டாலர் - நியூசிலாந்து டாலர் - அமெரிக்க டாலர் - பிற நாணயங்கள் என அமைகின்றது. எனவே யூரோவில் இருந்து ஆசுத்திரேலிய டாலருக்கு நாணய மாற்றுச் செய்யும்போது யூரோவே மூல நாணயமாக இருக்கும். இதன் அடிப்படையில் குறிப்பிடப்படும் நாணய மாற்று வீதம் ஒரு யூரோவைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவு ஆசுத்திரேலிய டாலர்கள் கொடுக்கவேண்டும் என்பதைக் காட்டும்.
 
[[பகுப்பு:நாணயம்]]
"https://ta.wikipedia.org/wiki/நாணய_மாற்று_வீதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது