நாணய மாற்று வீதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
மூல நாணயம் எது எனத் தீர்மானிப்பதற்கு உலகின் பெரும்பாலான நாணய மாற்றுச் சந்தைகளில் மரபு ஒன்று உள்ளது. இதன்படி மூல நாணயமாக இருப்பதற்குரிய தெரிவொழுங்கு: [[யூரோ]] - [[பெரிய பிரித்தானிய பவுண்டு]] - [[ஆசுத்திரேலிய டாலர்]] - [[நியூசிலாந்து டாலர்]] - அமெரிக்க டாலர் - பிற நாணயங்கள் என அமைகின்றது. எனவே யூரோவில் இருந்து ஆசுத்திரேலிய டாலருக்கு நாணய மாற்றுச் செய்யும்போது யூரோவே மூல நாணயமாக இருக்கும். இதன் அடிப்படையில் குறிப்பிடப்படும் நாணய மாற்று வீதம் ஒரு யூரோவைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவு ஆசுத்திரேலிய டாலர்கள் கொடுக்கவேண்டும் என்பதைக் காட்டும். ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், ஐக்கிய இராச்சியத்தின் தொழில்முறை சாராச் சந்தைகளிலும், பெரிய பிரித்தானிய பவுண்டையே மூல நாணயமாகப் பயன்படுத்துகின்றனர். நாணய மாற்றுச் செய்யவேண்டிய இரண்டு நாணயங்களுமே மேற்காட்டிய பட்டியலில் இல்லாதிருந்தால், எது 1.000 இலும் கூடிய நாணய மாற்று வீதத்தைக் கொடுக்குமோ அதையே மூல நாணயமாகக் கொள்வது வழக்கு. இந்த விதிக்கு விலக்குகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, சப்பானியர்கள் எப்போதும் [[சப்பானிய யென்]] நாணயத்தையே மூல நாணயமாகக் கொள்வர்.
 
ஒரு நாட்டின் உள்நாட்டு நாணயத்தை விலை நாணயமகப் பயன்படுத்தும் கேள்விகள் (எகா., யூரோ 0.63 = ஐ.அ.டா 1.00) நேரடிக் கேள்விகள் அல்லது விலைக் கேள்விகள் எனப்படுகின்றன. இதுவே பல நாடுகளிலும் கைக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் நாணயத்தை அலகு நாணயமாகப் பயன்படுத்தும் கேள்விகள் (எகா., யூரோ 1.00 = ஐ.அ.டா 1.58) மறைமுகக் கேள்விகள் அல்லது கணியக் கேள்விகள் எனப்படுகின்றன. பிரித்தானியச் செய்தித்தாள்கள் இதனைப் பயன்படுத்துகின்றன. ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் [[யூரோவலயம்|யூரோவலயத்திலும்]] இது பொதுவாகப் பயன்படுகிறது.
 
* நேரடிக் கேள்வி: 1 வெளிநாட்டு நாணய அலகு = X உள்நாட்டு நாணய அலகுகள்
* மறைமுகக் கேள்வி: 1 உள்நாட்டு நாணய அலகு = X வெளிநாட்டு நாணய அலகுகள்
 
[[பகுப்பு:நாணயம்]]
"https://ta.wikipedia.org/wiki/நாணய_மாற்று_வீதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது