"தொற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி (Quick-adding category "நோய்கள்" (using HotCat))
[[சுவாசத்தொகுதி|சுவாசத்தொகுதியில்]] ஏற்படும் தொற்றுநோய்கள், மற்றும் மூளைக்காய்ச்சல் (meningitis) என்பன பொதுவாக காற்றுச் சிறுதுளிகளால் பரவுகின்றன. இக்காற்றுச் சிறுதுளிகள் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது, முத்தமிடும்போது ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு கடத்தப்படுகிறது. இரைப்பைகுடல் தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள் பொதுவாக அசுத்தமடைந்த (அதாவது நோய்க்கரணிகளைக் கொண்ட) உணவு, நீர் போன்றவற்றால் ஏற்படுகின்றன. பாலின தொற்றுநோய்கள், பொதுவாக பாலியல் ஈடுபாடுகளின்போது, உடல் திரவங்கள் மூலம் கடத்தப்படுகின்றன.
[[Image:CulexNil.jpg|thumb|220px|left|Culex mosquitos (''[[Culex quinquefasciatus]]'' shown) are biological vectors that transmit [[West Nile Virus]].]]
பல தொற்றுநோய்கள் [[நோய்க்காவி|நோய்க்காவியினாலும்]] கடத்தப்படுகின்றது. இந்தக் கடத்தலின்போது, நோய்க்காரணியானது காவியின் உடலினுள் உட்செல்லாமல், காவியின் வெளியுடலில் ஒட்டிக்கொண்டு சென்று கடத்தப்படுமாயின் அதை பொறிமுறைக் கடத்தல் (mechanical) என்று அழைக்கலாம். உதாரணமாக ஈயானது மாட்டுச்சாணத்தில் உட்காரும்போது, அதன் உடலில் [[நோய்க்காரணி|நோய்க்காரணிகள்]] ஒட்டிக்கொண்டு சென்று, மீண்டும் அவை உணவுப் பொருட்களின் மேல் உட்காரும்போது, உணவுப் பொருளை அசுத்தமடையச் செய்கின்றது. இதனால், அந்த உணவை உட்கொள்ளும் உயிரினத்திற்கு [[நோய்க்காரணி]] கடத்தப்பட்டு, அங்கு நோயை ஏற்படுத்துகின்றது. மாறாக உயிரியல் [[நோய்க்காவி|நோய்க்காவிகள்]] எனப்படுபவை இயக்க நிலையிலிருந்து, [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]] தன் உடலினுள்ளே எடுத்துச் சென்று, வேறொரு உயிரினத்தினுள் செலுத்தி, அங்கே [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]] கடத்துகிறது. உதாரணமாக, நுளம்பானது ஒருவரிலிருந்து தான் பெறும் குருதியில் இருக்கும் [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]], வேறொரு நபரை கடிக்கும்போது, அவரது உடலினுள் செலுத்துவதன் மூலம் கடத்துகிறது. பொதுவாக தீவிரமான குருதியிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களான [[மலேரியா]], [[ஆனைக்கால்]] [[நோய்]] போன்றவை இப்படியான காவிகளாலேயே ஏற்படுகின்றது. வேறு [[உயிரினம்|உயிரினங்களும்]] [[உயிரியல்]] [[நோய்க்காவி|நோய்க்காவிகளாக]] இருக்கின்றதாயினும், பொதுவானவை நுளம்பு, ஈ, தெள்ளு, பேன் போன்ற ஆத்ரோபோடா வகையைச் சார்ந்த [[உயிரினம்|உயிரினங்களாகும்]]. இப்படியான [[நோய்க்காவி|நோய்க்காவிகள்]] [[நோய்க்காரணி|நோய்க்காரணியின்]] வாழ்க்கைவட்டத்தின் குறிப்பிட்ட நிலைக்கு அவசியமாக இருப்பதனால், [[நோய்க்காவி|நோய்க்காவியை]] அழிப்பதன்மூலம் நோய்க்கடத்தலையும், நோய்பரவலையும் தடுக்கலாம்.
 
==நோய்க்கடத்தலை தடுத்தல்==
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/455252" இருந்து மீள்விக்கப்பட்டது