விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஃ பயன்பாடு
வரிசை 115:
:செல்வா, இது குறித்து விவாதிக்கத் தொடங்கி குறிப்பிடத்த்க்க நேரம் கழிந்தும், பெரும்பான்மை பயனர்களின் மனமொத்த ஆதரவை இப்பரிந்துரை பெறாத காரணத்தால், விக்கிபீடியா முழுமைக்கும் இத நடைமுறைப்படுத்துவது கடினம். தங்கள் பரிந்துரை சரியாகவே இருப்பினும், தங்கள் கட்டுரைகளில் மட்டும் கூட இவற்றை பயன்படுத்துவது விக்கிபீடியாவின் ஒழுங்குத் தன்மை கொள்கைக்கு (consitancy) ஏற்புடையதாக இருக்காது. எனவே இக்குறியீடை மேற்கொண்டும் கட்டுரைகளில் பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே இக்குறியீடு உள்ள இடங்களில் அவற்றை நீங்களோ மற்ற பயனர்களோ நீக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:51, 6 ஜூலை 2006 (UTC)
 
== ஃ பயன்பாடு ==
 
செல்வா, தாங்கள் பரிந்துரைத்துள்ளபடி ஃஇந்தி, ஃஇட்லர் என்பது போன்ற எழுத்துக்கூட்டல் முறைகளைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. பொது வழக்கில் உள்ளது போல இந்தி, இட்லர் (அல்லது ஹிட்லர்) எனப் பயன்படுத்தவே விழைகிறேன். சொல்லின் முதலில் ஃ வருவது தமிழ் இலக்கணப் படி சரியல்ல. சொல்லின் முதலில் ஓசையை கொண்டு வருவதற்காக சில இடங்களில் ஃ பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதையும் விக்கியில் குறைவாகவே செய்ய முனைகிறோம். (எ.கா - ஃபிரான்சுக்குப் பதிலாக பிரான்ஸ்). ஃஇந்தி, ஃஇட்லர் போன்ற எழுத்துக்கூட்டல்கள் விக்கி பயனர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் (எ.கா - சூரசம்ஹாரத்திற்கு பதில் சூரசம்ஃஆரம்?). பொதுப் பயன்பாட்டில் உள்ள எழுத்துக்கூட்டல்களையே விக்கியில் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:59, 6 ஜூலை 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".