விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
-ஃப் எதிர் ஃவ்?
வரிசை 118:
 
செல்வா, தாங்கள் பரிந்துரைத்துள்ளபடி ஃஇந்தி, ஃஇட்லர் என்பது போன்ற எழுத்துக்கூட்டல் முறைகளைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. பொது வழக்கில் உள்ளது போல இந்தி, இட்லர் (அல்லது ஹிட்லர்) எனப் பயன்படுத்தவே விழைகிறேன். சொல்லின் முதலில் ஃ வருவது தமிழ் இலக்கணப் படி சரியல்ல. சொல்லின் முதலில் ஓசையை கொண்டு வருவதற்காக சில இடங்களில் ஃ பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதையும் விக்கியில் குறைவாகவே செய்ய முனைகிறோம். (எ.கா - ஃபிரான்சுக்குப் பதிலாக பிரான்ஸ்). ஃஇந்தி, ஃஇட்லர் போன்ற எழுத்துக்கூட்டல்கள் விக்கி பயனர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் (எ.கா - சூரசம்ஹாரத்திற்கு பதில் சூரசம்ஃஆரம்?). பொதுப் பயன்பாட்டில் உள்ள எழுத்துக்கூட்டல்களையே விக்கியில் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:59, 6 ஜூலை 2006 (UTC)
 
== -ஃப் எதிர் ஃவ்? ==
 
செல்வா, தாங்கள் விளக்கிக் கூறியதிலிருந்து ஃப்-ஐ விட ஃவ் பயன்பாடுத்துவதற்கான மொழியியல் ரீதியான நியாயங்களை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அண்மையில் செர்மானிய மொழி உச்சரிப்புகளுடன் எனக்கு ஏற்பட்டு வரும் பரிச்சயமும் இதற்கு ஒரு காரம். பயனர்கள் விரும்பும் இடங்களில் ஃப் அல்லது ஃவ் பயன்படுத்தலாம் என்றும், குழப்பத்தைத் தவிர்க்க அடைப்புக்குறிகளுக்குள் மாற்று எழுத்துக் கூட்டல்களை தரலாம் என்றும் பரிந்துரைக்கிறேன். கட்டுரைத் தலைப்புகளுக்கு மாற்று எழுத்துக்கூட்டல்களிலிருந்து வழி மாற்றுப் பக்கங்களை உருவாக்கலாம். எனினும், வேற்று மொழி உச்சரிப்புகள், எழுத்துக்கூட்டல்கள் ஆகியவற்றுக்கு இது தான் சரி, பிழை என்று தீர்க்கமான நிலைப்பாடுகள் எடுக்க முடியாது, எடுக்கக் கூடாது என்பது தான் என் கருத்து--[[பயனர்:Ravidreams|ரவி]] 09:07, 6 ஜூலை 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".