விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 124:
 
:ரவி, நீங்கள் அனைவரும் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நல்ல பயனுடைய கருத்துக்களை, போதிய சித்திப்பு இல்லாமல் மறுக்கிறீர்கள் என்பது என் துணிந்த கணிப்பு. நான் முன் வைத்ததால் இப்படிக் கருதுகிறேன் என்று அருள்கூர்ந்து எண்ணாதீர்கள். பயன் - இடர் சீர் தூகிப் பாருங்கள். மயூரநாதன் The Lord of the rings என்னும் த.வி கட்டுரைக்கு த லோட் ஒவ் த ரிங்ஸ் என்று கட்டுரை எழுதியுள்ளார். அதில் of என்னும் சொல்லுக்கு வகரத்தைத்தான் ஆண்டுள்ளார். புகழ் பெற்ற மயிலை சீனி வேங்கடசாமி (1930களில் புத்தகங்கள் எழுதியவர்) அவர்கள் Jao-de Faria என்பவரை வாரீயா என்று குறிப்பிட்டுள்ளார். வாரீயா அவர்கள் 1578ல் தமிழில் அச்சு எழுத்துக்களைக் கோர்தவர் என்று தம் புத்தகங்களில் குறிக்கிறார். Fa என்பதற்கு ஃவ என்பது பொருத்தமான மாற்றம். 'வ என்பது இன்னும் பொருத்தமான மாற்றம் என்பது என் துணிபு. விக்கியில் உள்ள பல மொழிகளைப் பாருங்கள். அவர்கள் எப்படி diacritic குறியீடுகளை அவர்கள் மொழியில் ஆளுகின்றார்கள் என்று. Diacritic என்னும் ஆங்கில விக்கி கட்டுரையைப் பார்த்தீர்களா? தமிழ் எழுத்துரு வரலாற்றை அறிந்தீர்களானால், எப்படி குறிலைக் குறிக்க மேற்புள்ளி ஒருகாலத்தில் இருந்தது என்றும் நெடிலைக் குறிக்க அதை நீக்கி எழுதினர்கள் என்றும் அறியலாம். வீரமாமுனிவர் பயனுடன் ஆக்கிய இரட்டைச்சுழிக் கொம்பு இப்பொழுது நெடில் ஏகார ஓகார உயிர்மெய் எழுத்துக்களை குறிக்கின்றது. நான் கூறும் முறையைக் கையாண்டால் ஏறத்தாழ ஆங்கிலம் போலவே எல்லாச் சொற்களையும், தமிழில் ஒலித்திரிபு குறைவாக வருமாறு எழுத முடியும். புது தமிழ் எழுத்துருக்கள் ஏதும் தேவை இல்லை. Whole passages of English can be rendered in Tamil letters with minimal variations. ஒரு பெரிய அகராதி, கலைக்களஞ்சியம் போன்ற பணிகளில், தேவைக்கேற்ப சில குறியீடுகளை ஆளுவது ஏதும் புதிதல்ல. எந்த பெரிய நூலை வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கவும். அவர்கள் தம் நூலுக்கென தனி முறைகளும் குறியீடுகளும் கொடுத்திருப்பர். தமிழ் ஒலியொழுங்குடன் எழுதப்படும் மொழியாகையால், எழுத்து ஒருவகையாகவும், ஒலிப்பு வேறுவகையாகவும் இருக்கலாது. இங்கே இலக்கணம் பற்றி பேசுவது பொருந்தாது. நான் சொல்லுவதெல்லாம், பிறமொழிச் சொற்களுக்கு. இலக்கணம் பார்த்தால், ஜ, ஷ முதலிய எழுத்துக்கள் வரலாகாது. ரகரம் றகரம் போன்ற எழுத்துக்களில் சொற்கள் தொடங்கலாகாது. Goodall என்பதை குட்டால் (kuttaal) என்று எழுதுவது தேவையா? 'கு'ட்டால் என்று எழுதினால் ஓரளவிற்கேனும் ஒலித்திரிபுகளைக் காட்டலாமே? ஏன் வேண்டாம் என கூறுகிறீர்கள் என்பது விளங்க வில்லை. தேடு பொறிகளில் இடையூறாக இருக்கும் என்பதை ஏற்கிறேன். அப்படியாயின், பிறமொழிகள் பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தும்போது, அவர்கள் என்ன முறையை ஆளுகிறார்களோ அதனையே ஏன் நாமும் ஆளலாகாது. முற்காலத்திற்கும் இக்காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. விரைந்து நல்லவற்றை ஏற்கவேண்டும். பிறமொழிச்சொற்களை பரவலாக ஆளவேண்டிய கட்டாயம் இப்பொழுது அதிகம். எனவே அதிக ஒலித்திரிபு இல்லாமல் ஒலிக்க ஒரு வகை வேண்டும். இதற்காக புதிய எழுத்துகளை உருவாக்குவது, பல வழிகளிலும் கேடு தரும். தமிழ் எழுத்துக்களை 12+18+1 என்பதோடு உயிர்மெய் எழுத்துக்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் ஒலிகளை நம் முன்னோர்கள் எவ்வாறு தேர்ந்து எழுத்து அமைத்தார்கள் என்பது ஒரு செப்பம்மிகு புகழ்வரலாறு ஆகும். இது பற்றி தனியாக எழுதவேண்டும். இதே போல தமிழில் இசைச் சுரங்கள் அமைத்ததும் ஒரு பெரும் சாதனை. Fa என்னும் ஒலிப்பு வட இந்திய மொழிகளிலும் கிடையாது, ஆனால் ப என்னும் தேவநாகரி எழுத்துக்குக் கீழே ஒரு புள்ளி இட்டு குறிக்கிறார்கள். மிக எளிய முறைகளிலே ஏறத்தாழ எல்லா ஒலிப்புகளையும் 2-3 குறியீடுகளை மட்டும் காட்ட முடியும். இது ஒரு அரும் வாய்ப்பு. வேண்டாம் எனில் கூட்டு முடிவை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் எழுதும் புத்தகங்களில் இம்முறையைத்தான் கையாள எண்ணியுள்ளேன்.--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 15:29, 6 ஜூலை 2006 (UTC)செல்வா
 
 
செல்வா, சில விதயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
 
தாங்கள் பரிந்துரைக்கும் சீர்திருத்தங்கள் மிக அடிப்படையானவை. இது தற்போது விக்கிபீடியாவில் உள்ள நான்கு பேர் கூடி பேசி முடிவெடுத்து காலத்துக்கும் செயற்படுத்தும் விஷயம் இல்லை. குறைந்தபட்சம், இது சரியா தவறா என சீர்தூக்கி பார்க்கும் மொழியியல் அறிவு எனக்கு கிடையாது. ஆனால், நடைமுறை காரணங்களுக்காக இதை ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை வலியுறுத்தும் உரிமை உண்டு. தற்பொழுது உங்கள் சீர்திருத்தங்களை எற்றுக்கொண்டாலும், நாளை வரும் ஒவ்வொரு பயனருக்கும் இம்முறையை விளக்குவதோ, அனைத்துக் கட்டுரைகளையும் இம்முறைக்கு மாற்றுவதோ, இம்முறையை பின்பற்றாதோரை விலக்குவதோ நடைமுறைச்சாத்தியமற்றது. இம்முறையை விளங்கிக் கொள்வது ஒரு சவால் என்றால் இம்முறையில் பங்களிப்பாளர்களை எழுதத் தூண்டுவது இன்னொரு சவால். தமிழ் விக்கிபீடியா ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் அல்லவே? இம்முறை சரியெனத் தாங்கள் கருதும் பட்சத்தில் தாராளமாக உங்கள் புத்தகங்களில் பயன்படுத்தலாம். அவற்றை படிக்கும் போது நானும் விளங்கிக் கொள்ள முயல்வேன். விலங்கிக் கொள்ள இயலாவிட்டால், புத்தகத்தை மூடி வைத்து விட்டுப் போய் விடுவேன். நம் தளம் போன்ற இலவசக் கூட்டு முயற்சிகளில், இவ்வாறு நாம் சொல்ல வருவதை விளங்கிக் கொள்ள இயலாமல் ஒரு பயனர் விலகிச் சென்றாலும், நம் உழைப்பு நட்டமே.
 
எல்லாரும் இம்முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும், இம்முறையில் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதைச் செயற்படுத்தவோ தொடங்கவோ விக்கிபீடியா ஒரு சரியான களம் அல்ல என்பது தான் என் கருத்து. சுந்தர் பரிந்துரைத்த படி, மொழிச்சீர்திருத்த மாநாடுகளில் நீங்கள் இவற்றை முன் வைக்கலாம். அரசு ஆணை பிறப்பித்து இக்குறியீட்டு முறை பொதுப் பயன்பாட்டுக்கு வந்தால் ஒழிய, என் தமிழ் ஆசிரியர் எனக்கு எவ்வாறு எழுதச் சொல்லித் தந்தாரோ அப்படித் தான் நான் எழுத உத்தேசம். அம்முறையை பின்பற்றாத கட்டுரைகளை திருத்தி எழுதவும் விக்கி சுதந்திரம் உண்டு.
 
இதற்கு மேல் இவ்விதயத்தில் நான் தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை. அதற்கு விருப்பமும் இல்லை.--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:56, 7 ஜூலை 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".