விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 135:
 
:செல்வா, தங்கள் எழுத்துச் சீர்திருத்த முயற்சி மிகவும் பயனுள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதனை அறிமுகப்படுத்துவதற்கு விக்கிப்பீடியாவை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? வி்க்கிப்பீடியா ஒரு தகவற் களஞ்சியம் மட்டுமே. ஏற்கனவே நடைமுறையில் இருப்பதைத்தான் இங்கு தரலாம் என்று தான் நான் விக்கிப்பீடியாவைப் புரிந்து வைத்துள்ளேன். (தவறானால் திருத்தவும்). தங்களின் முடிவுகளை ஏதாவது ஆராய்ச்சி மன்றுகளில் சமர்ப்பித்தீர்களா? எப்படி வரவேற்பு இருந்தது அறிய ஆவலாயுள்ளேன். இன்றுள்ள மின்னஞ்சல் குழுமங்களில் தமிழ் ஆராய்ச்சி (http://groups.yahoo.com/group/tamil_araichchi/) என்னும் யாஹூ குழுமத்தில் தமிழ் எழுத்துச் சீர்மை குறித்து பல தமிழாராய்ச்சி நிபுணர்கள் எழுதியுள்ளனர். இன்னமும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இவை போன்றவற்றில் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தீர்களா? பரவலாக உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்திய பின்னர் விக்கிப்பீடியாவில் அறிமுகப்படுத்துவது நல்லது என்பதே எனது தாழ்மையான கருத்து. அப்போதுதான் விக்கிப்பீடியா கட்டுரைகள் பலருக்கும் பயனளிக்கும்.--[[பயனர்:Kanags|Kanags]] 09:03, 7 ஜூலை 2006 (UTC)
 
::ரவி, கனகு:
*முதலில் ரவியிக்கு மறு மொழி. நான் இத்தலைப்பில் சொல்வதை ரவி அவர்கள் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என்றுதான் நினைக்கிறேன். எனினும் முன்வைப்பது என் கடமை என்பதால் எழுதுகிறேன். முதலாவது இது மொழி சீர்திருத்தம் இல்லை. சொல்லப்போனால் மொழியின் தூய்மையை காக்கவே என் முன்வைப்பு. பாபு என்று தமிழில் எழுதினால் தமிழ் முறைப்படி paabu என்று ஒலிப்பதற்கு பதிலாக baabu என்று ஒலிப்பதால் தமிழ் கெடுகின்றது. இதனை நன்கு உணர வேண்டும். எழுத்தொலிப்பாங்குடைய (phonetic) தமிழ், ஆங்கிலம் போன்று ஒழுங்கு குன்றிவிடக்கூடும். 'பாபு என்று எழுதுவதோ அல்லது அதனைப் புரிந்துகொள்வதோ அவ்வளவு கடினமானதா?! காந்தி என்பதை 'காந்தி என்று எழுதினால் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதா?! தமிழ் விக்கி பள்ளிக்கூடம் அல்ல என்று நீங்கள் சுட்டிக்காட்டினமைக்கு நன்றி, ரவி, ஆனால் இதனை ஒரு பள்ளிக்கூடம் என்று நான் ஏதும் எண்ணி மயங்க வில்லை.
*கனகு, பயனுடையது என்று நீங்கள் நினைப்பது கண்டு மகிழ்ச்சி. இதனை ஒரு பெரும் படைப்பாகவோ, ஆய்வு மன்றங்களிலே ஆய்வுரையாய் தரும் அளவுக்கு இதில் ஏதும் பெரிதாக இருப்பதாக நான் எண்ணவில்லை. எண்ணியிருந்தால் INFITT நடத்திய கருத்தரங்குகளிலாவது படித்திருப்பேன். அத்தகு நிறுவனங்களில் உள்ளவர்கள் பலரை எனக்கு நன்றாகத்தெரியும். யாஹூ (யாஃகூ), அகத்தியர் போன்ற குழுக்களிலே இது பற்றி எழுதியுள்ளேன். கணேசன், மணிவண்ணன் போன்ற பலரும் பாராட்டி எழுதியுள்ளார்கள். நீங்கள் குறிப்பிட்ட யாஹூ (யாஃகூ) தமிழ்-ஆராய்ச்சி குழுவிலும் என் கட்டுரைகள் 33 உள்ளன (எல்லாம் இது பற்றி இல்லை). வ.செ. குழைந்தைச்சாமி அவர்களையும், அவர்போன்று சீர்த்திருத்தக்காரர்கள் பலரையும் நான் நேரடியாக அறிவேன் அவர்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். TVU ல் காணும் கலைச்சொற்கள் மிகப்பலவும், 35-37 ஆண்டுகளுக்கு முன்னர் நானும், முனைவர் பொன்னவைக்கோ, முனைவர் செந்தமிழ்க்கோதை, முனைவர் வேந்தன், முனைவர் ரா'சாராம், முனைவர் நக்கீரன் ஆகியோர் ஆக்கித்தொகுத்து என் தலைமையில் வெளியிட்டதே. முதன் முதல் 5000 பொறியியற் சொற்களை ஆக்கி வெளியிட்டோம். எடுத்து்க்காட்டாக transistor என்பதற்கு திரிதடையம் என்னும் சொல் 37 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஆக்கிய சொல், அது இன்று த.வியிலும் ஆளப்படுகின்றது. தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலருடன் 40 ஆண்டுகளுக்கு மேலாக பழகி வந்துள்ளேன். உலகளாவிய ரீதியில் பரவிய பின் இச்சிறு மாற்றத்தை ஏற்பீர்கள் என்று கூறுகிறீகள், ஏறத்தாழ எல்லாமே ஓரிடத்தில் ஆளப்பட்டு பரவுவதே. இங்கு தேவை அதிக இருப்பதால், அதற்கான சூழல் (context) இருப்பதால், இங்கே ஆளுவது சிறப்புடையது. ஏதோ கருத்தியலாக வெற்றுக் கொள்கைகளாக எங்கும் முன்வைப்பதால் பயன் ஏதும் இல்லை. செயல்படுத்திக் காட்டுவது சிறந்தது. இரண்டொருவரைத் தவிர பிறர் ஏதும் சொல்லவும் இல்லை. --[[பயனர்:72.140.138.83|72.140.138.83]] 13:32, 7 ஜூலை 2006 (UTC)செல்வா
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".