விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎-ஃப் எதிர் ஃவ்?: தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்
வரிசை 140:
*கனகு, பயனுடையது என்று நீங்கள் நினைப்பது கண்டு மகிழ்ச்சி. இதனை ஒரு பெரும் படைப்பாகவோ, ஆய்வு மன்றங்களிலே ஆய்வுரையாய் தரும் அளவுக்கு இதில் ஏதும் பெரிதாக இருப்பதாக நான் எண்ணவில்லை. எண்ணியிருந்தால் INFITT நடத்திய கருத்தரங்குகளிலாவது படித்திருப்பேன். அத்தகு நிறுவனங்களில் உள்ளவர்கள் பலரை எனக்கு நன்றாகத்தெரியும். யாஹூ (யாஃகூ), அகத்தியர் போன்ற குழுக்களிலே இது பற்றி எழுதியுள்ளேன். கணேசன், மணிவண்ணன் போன்ற பலரும் பாராட்டி எழுதியுள்ளார்கள். நீங்கள் குறிப்பிட்ட யாஹூ (யாஃகூ) தமிழ்-ஆராய்ச்சி குழுவிலும் என் கட்டுரைகள் 33 உள்ளன (எல்லாம் இது பற்றி இல்லை). வ.செ. குழைந்தைச்சாமி அவர்களையும், அவர்போன்று சீர்த்திருத்தக்காரர்கள் பலரையும் நான் நேரடியாக அறிவேன் அவர்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். TVU ல் காணும் கலைச்சொற்கள் மிகப்பலவும், 35-37 ஆண்டுகளுக்கு முன்னர் நானும், முனைவர் பொன்னவைக்கோ, முனைவர் செந்தமிழ்க்கோதை, முனைவர் வேந்தன், முனைவர் ரா'சாராம், முனைவர் நக்கீரன் ஆகியோர் ஆக்கித்தொகுத்து என் தலைமையில் வெளியிட்டதே. முதன் முதல் 5000 பொறியியற் சொற்களை ஆக்கி வெளியிட்டோம். எடுத்து்க்காட்டாக transistor என்பதற்கு திரிதடையம் என்னும் சொல் 37 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஆக்கிய சொல், அது இன்று த.வியிலும் ஆளப்படுகின்றது. தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலருடன் 40 ஆண்டுகளுக்கு மேலாக பழகி வந்துள்ளேன். உலகளாவிய ரீதியில் பரவிய பின் இச்சிறு மாற்றத்தை ஏற்பீர்கள் என்று கூறுகிறீகள், ஏறத்தாழ எல்லாமே ஓரிடத்தில் ஆளப்பட்டு பரவுவதே. இங்கு தேவை அதிக இருப்பதால், அதற்கான சூழல் (context) இருப்பதால், இங்கே ஆளுவது சிறப்புடையது. ஏதோ கருத்தியலாக வெற்றுக் கொள்கைகளாக எங்கும் முன்வைப்பதால் பயன் ஏதும் இல்லை. செயல்படுத்திக் காட்டுவது சிறந்தது. இரண்டொருவரைத் தவிர பிறர் ஏதும் சொல்லவும் இல்லை. --[[பயனர்:72.140.138.83|72.140.138.83]] 13:32, 7 ஜூலை 2006 (UTC)செல்வா
நான் புகுபதிகை செய்திருந்தும் இடைவிட்டு எழுதியதால் வெளிவந்துவிட்டது. மேலே எழுதியது நான் தான்.--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 13:39, 7 ஜூலை 2006 (UTC)செல்வா
:ரவியோ செல்வாவோ இச்சிக்கலைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இருவரும் நல்லெண்ணத்துடன் தான் கருத்து வெளியிட்டுள்ளீர்கள். இருப்பினும், முகம் பார்க்காத ஊடகம் என்பதால் கருத்துவேறுபாடுகள் சில நேரங்களில் தவறாகக் கொள்ளப்பட்டுவிடுகின்றன. இந்த பயன்பாட்டின் நன்று-தீது என்ற அளவில் அல்லாமல் இதன் நடைமுறைச் சிக்கலையே அனைவரும் அஞ்சுகிறோம். மேலும், இத்தகைய பரிந்துரைகளுக்கு சரியான இடம் தமிழ் இணைய மாநாடு போன்றவை அல்ல என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படி இல்லை - அது சரியான களமே. மணிவண்ணன் போன்றோர்கூட வருகின்றனரே?
:மற்றபடி இது உங்களுடைய பரிந்துரை என்பதால் உள்ளத்தில் காயம் கொள்ளாதீர்கள். உங்கள் தமிழறிவும் நுட்ப அறிவும் இங்கு நாங்கள் அறிந்துள்ளோம். அதனால்தான் உங்களிடம் பல அறிவுரைகள் கேட்கப் படுகின்றன. இந்த விடயத்தில் உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்தை நடுநிலையோடு பாருங்கள். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 13:56, 7 ஜூலை 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".