இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மு.மயூரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
|||
வரிசை 1:
'''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்''' என்பது [[சோசலிசம்|சோசலிச]], [[மார்க்சியம்|மார்க்சிய]] வேலைத்திட்டத்தினடிப்படையில் [[இலங்கை]] எழுத்தாளர்களை நிறுவனப்படுத்தும் நோக்குடன் உருவான அமைப்பே ஆகும். இவ்வமைப்பும் இயக்கமும் [[சோசலிச யதார்த்தவாதம்| சோசலிச யதார்த்தவாதத்தை]] தமது செயற்பாடுகளின் இறுதி இலக்காக பிரகடனப்படுத்தியிருந்தது.
==தோற்றம் ==
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்னரே இலங்கையில் பல்வேறு எழுத்தாளர் குழுக்களும் அமைப்புக்களும் இருந்துள்ளன. அவற்றுள் யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு இயங்கிய [[ஈழகேசரி]] (அமைப்பாக இல்லாவிட்டாலும் இப்பத்திரிகையைச்சூழ எழுத்தாளர்கள் பலர் இயங்கிக்கொண்டிருந்தனர்), [[மறுமலர்ச்சி (இதழ்)|மறுமலர்ச்சி]], [[இலங்கை எழுத்தாளர் சங்கம்]] ஆகியன பற்றிய தகவல்கள் கிடைப்பிலுள்ளன.
[[இரண்டாம் உலகப் போர்]] முடிவடைந்ததை உடனடுத்த காலப்பகுதிகளில் எழுந்த சோசலிச அலை காரணமாக இலங்கையில் சோசலிச இலட்சியங்களைக்கொண்ட பல எழுத்தாளர்கள் தோன்றினர். அவர்கள் முன்னர் தனித்தனியாக இயங்கிவந்தபோதும் காலப்போக்கில் நிறுவனமயமாகவேண்டிய தேவை வலுவாக உணரப்பட்டது.
இதன் விளைவாக [[கொழும்பு]] விவேகானந்தா மண்டபத்தில் [[இளங்கீரன்]], [[அ. ராகவன்]], [[எம். பி. பாரதி]], [[எம். ஏ. அப்பாஸ்]] ஆகியோர் நடத்திய இலக்கிய கூட்டத்தில் இதற்கு அத்திவாரமிடப்பட்டது. அடுத்தவாரம் [[1954]] [[ஜூன் 27]] ஆம் நாள் கொழும்பு [[மருதானை]] வீரரத்ன மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் '''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்''' தொடக்கி வைக்கப்பட்டது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டதும் தனது இலட்சியங்களையும் நோக்கங்களையும் வேலைத்திட்டங்களையும் இலக்கிய உலகுக்கும் நாட்டுக்கும் 1954 ஒக்டோபர் 25ம் திகதி ஒரு பிரசுரத்தின் மூலம் பிரகடனப்படுத்தியது.
== வளர்ச்சி ==
1955 இல் [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[கண்டி]], [[திருக்கோணமலை]] போன்ற ஊர்களில் கிளைகள் அமையப்பெற்றன. இதனைத்தொடர்ந்து [[மட்டக்களப்பு]] தெற்கிலும் ([[அக்கரைப்பற்று]]) பூண்டுலோயாவிலும் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன.
[[பகுப்பு:இலங்கைத் தமிழர் அமைப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து இலக்கியம்]]
|