முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

236 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:srk.jpg|right|thumb|framed|ராஜ ஸ்ரீகாந்தன்]]
 
'''ராஜ ஸ்ரீகாந்தன்''' ([[ஜூன் 30.06.]], [[1948]] - [[ஏப்ரல் 20.04.2004]], [[2004]]) [[வதிரி]], [[யாழ்ப்பாணம்]]) எழுபதுகளின்[[1970கள்|எழுபது]]களின் ஆரம்பத்தில் [[விவேகி (சஞ்சிகை)|விவேகி சஞ்சிகை]]யில் வெளிவந்த முதலாவது கவிதை மூலம் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமானார். இவருடைய சிறப்பான சிறுகதைகள் தேசிய, விதேசிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவற்றுள் சில [[ஆங்கிலம்]], [[ரஷ்ய மொழி|ரஷ்ய]], உக்ரேனிய, [[சிங்களம்|சிங்கள]] மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
1987இல் [[கொழும்பு பல்கலைக்கழகம்|கொழும்புப் பல்கலைக்கழகத்தில்]] பத்திரிகைத்துறைப் பாடநெறியைக் கற்றுத் தேர்ந்த இவர் [[சோவியத் நாடு (சஞ்சிகை)|சோவியத் நாடு]], "சோஷலிசம் - தத்துவமும் நடைமுறையும்", "புதிய உலகம்" ஆகிய சஞ்சிகைகளிலும் [[சக்தி (பத்திரிகை)|சக்தி]] பத்திரிகையினதும் ஆசிரிய பீடங்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். [[தினகரன்]] தேசிய நாளிதழின் பிரதம ஆசிரியராக பணியாற்றிய காலம் (1997-2002) தினகரனின் "மறுமலர்ச்சிக் காலம்" எனலாம்.
 
ராஜ ஸ்ரீகாந்தன் மொழிபெயர்ப்புத் துறையிலும் தனது ஆற்றல்களை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார். [[சோவியத் யூனியன்|சோவியத்]] இலக்கியகர்த்தாக்கள், கலீல் ஜிப்ரான் போன்றவர்களின் அற்புதமான ஆக்கங்கள் இவருடைய மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைத்துள்ளன. தனது சமகாலத்தில் வாழ்ந்த ஆங்கில இலக்கிய மேதை [[அழகு சுப்பிரமணியம்|அழகு சுப்பிரமணியத்தின்]] இதுவரை வெளிவந்த அனைத்துச் சிறுகதைகளையும் (நீதிபதியின் மகன்), வெளிவராத 'மிஸ்ரர் மூன்' நாவலையும் தமிழுக்குத் தந்துள்ளார். "நீதிபதியின் மகன்", மற்றும் "காலச் சாகரம்" ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதுகளைப் பெற்றன.
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
1,09,102

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/465320" இருந்து மீள்விக்கப்பட்டது