ராம. அழகப்பச் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,868 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கிமாற்றல்: en:R. M. Alagappa Chettiar)
==இளமையும் கல்வியும்==
தமிழ்நாட்டின் [[சிவகங்கை]] மாவட்டத்தில் கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 06,1909ஆம் ஆண்டு பிறந்தார். காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்து பின்னர் தமது 21ஆவது வயதில் [[மாநிலக் கல்லூரி, சென்னை|சென்னை மாகாணக் கல்லூரி]]யில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.அப்போது பின்னாளில் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரான]] [[சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்| ராதாகிருஷ்ணனுடன்]] தோழமை கொண்டிருந்தார்.சட்டம் பயில இங்கிலாந்து சென்று சார்ட்டட் வங்கி,[[லண்டன்|லண்டனில்]] பயிற்சி பெறும் முதல் இந்தியராக விளங்கினார்.மிடில் டெம்பிள் வழக்கறிஞர் அவை(bar)யில் தேர்வானார். அவரது துடிப்பான இயல்பால் லண்டன் கிரயோடனில் உள்ள பநிற்சிக்களத்தில் விமான ஓட்டி உரிமம் பெற்றார்.
 
==பணிவாழ்வு==
தமது தொழில் முயற்சியை துணி தயாரிப்பில் கொச்சி டெக்ஸ்டைல்ஸ் என்று 1937ஆம் ஆண்டு துவக்கினார். பின்னர் அழகப்பா டெக்ஸ்டைல்ஸ் ஆலையை [[கேரளம்|கேரளாவில்]] [[திருச்சூர்]] அருகே புதுக்காடு என்ற இடத்தில் துவக்கினார்.அங்குள்ள பணியாளர் குடியிருப்பு அழகப்பா நகர் என அழைக்கப்படலாயிற்று.
 
தமது வணிகத்தை விரைவாக விரிவாக்கி மலாயாவில் தேயிலைத் தோட்டங்கள்,பர்மாவில் ஈய சுரங்கங்கள்,கேரளத்தில் துணியாலைகள்,கொல்கத்தாவில் காப்பீடு நிறுவனம்,மும்பை|பம்பாயில் உணவுவிடுதிகள்,சென்னையில் திரைப்பட கொட்டகைகள் என பல்வேறு துறைகளில் தடம் பதித்தார்.பங்கு வணிக நிறுவனம் ஒன்றும் திறம்பட நடந்து வந்தது.தனி விமானசேவையும் நடத்தினார்.
 
இருப்பினும் கல்விப்பணியில் நாட்டம் கொண்டு தமது குவியத்தை மாற்றிக் கொண்டார்.
 
 
 
{{குறுங்கட்டுரை}}
29,830

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/466736" இருந்து மீள்விக்கப்பட்டது