ஆர். கே. சண்முகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

06:54, 6 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

சர் ஆர். கே. சண்முகம் செட்டி (1892 – 1953) ஓர் இந்திய பொருளாதார நிபுணர்.1947ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமை உடையவர். நாட்டு பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர்.கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் பிறந்தவர்.சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். இந்திய வணிக மற்றும் தொழில் சங்கத்தின் கோவை கிளையின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தவர்.


சர் ஆர்.கே.சண்முகம் செட்டி 1931ஆம் ஆண்டிலிருந்து 1945 வரை கொச்சி அரசின் திவானாக பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப் படுத்தப்பட்டது. 1938ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டது. துறைமுக மேம்பாடு திட்டங்கள் திறம்பட நிறைவேற்றப்பட்டன.1929ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டார்.1923ஆம் ஆண்டிலிருந்து 1929 வரை மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார்.அந்த அவையின் துணைத்தலைவராக 1931-33 ஆண்டுகளிலும் தலைவராக 1933-34 ஆண்டுகளிலும் பதவியில் இருந்தார்.1938ஆம் ஆண்டு ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க (League of Nations)கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார். 1944ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.1945 ஆம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார்.இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.

அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். அவர் நீதிக்கட்சியில் சிலகாலம் உறுப்பினராக இருந்தார்.பின்னர் சுதந்திராக் கட்சியின் முதன்மை கொறடாவாகவும் இருந்தார்.

இந்திய விடுதலையின்போது "உலக நிகழ்வுகளின் முதன்மைக் காரணத்தாலும், இதுவரை ஆட்சி புரிந்தவர்களின் பெருந்தன்மையான விட்டுக்கொடுத்தலினாலும் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் " என்று கூறியுள்ளார்.

இவர் காங்கிரஸ் மற்றும் விடுதலைப் போராட்ட வீரராக இல்லாதபோதும் இவரது திறமைகளின் அடிப்படையில் இந்திய அரசின் முதல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமது முதல் நிதிநிலை அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இருப்பினும் இவரது அமைச்சின் அதிகாரி ஒருவரின் விதிமீறல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை துறந்தார். இவரை யடுத்து பதவியேற்ற ஜான் மத்தாய் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அவர் தவறு செய்யவில்லை;தவறிழைக்கப்பட்டார் ("he is more sinned against than sinning.") எனக் கூறினார்.

1952ஆம் ஆண்டு சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உசாத்துணைகள்

மேலும் படிக்க

  • Business Legends by Gita Piramal (1998) - Published by Viking Penguin India.
  • T. Praskasam by P. Rajeswara Rao under National Biography Series published by the National Book Trust, India (1972).
முன்னர்
லியாகத் அலி கான்
இந்தியாவின் நிதியமைச்சர்
1947–1949
பின்னர்
ஜான் மத்தாய்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._சண்முகம்&oldid=468388" இலிருந்து மீள்விக்கப்பட்டது