தி. த. கிருஷ்ணமாச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 39:
கிருஷ்ணமாச்சாரி ஓர் தொழில் முனைவராகத் தம் வாழ்வைத் துவங்கினார். பின்னாளில் [[டிடிகே குழுமம்]] என வளர்ச்சியுற்ற டிடி கிருஷ்ணமாச்சாரி & கோ என்ற தம் வணிக நிறுவனத்தை 1928ஆம் ஆண்டு நிறுவினார்.நிறுவனம் ஓரளவு நிலைபெற்ற பின்னர் 30களில் அரசியலில் ஈடுபட்டார். சென்னை சட்டமன்ற மக்களவைக்கு சுயேட்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இணைந்து 1946ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டமன்றத்தின் உறுப்பினரானார்.
 
அவர் நிதியமைச்சராக இருந்தபோது தொழில் வளர்ச்சிக்காக ஐடிபிஐ,ஐசிஐசிஐ,யூனிட் டிரஸ்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் மூலதனம் மற்றும் இயக்கநிதி தேவைகளுக்கு அமைப்புகளை ஏற்படுத்தினார்.மூன்று எஃகு ஆலைகள் அமையவும்,நெய்வேலி நிலக்கரி நிறுவனம்,தாமோதர் பள்ளத்தாக்கு திட்டங்கள் போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு அடிகோலினார்.
 
இவர் ஹரிதாஸ் முந்த்ரா என்ற பெரிய வர்த்தகர், தனி நிறுவனங்களின் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ( LIC ) விற்பனை செய்ததில் நடந்த ஊழலுக்குத் துணை போனார் என்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று, பின்னர் டி.டி.கே. மீது விசாரணை நடத்திட நீதிபதி எம்.சி.சாக்ளா கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில் டி.டி.கே. அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தி._த._கிருஷ்ணமாச்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது