மார்க்கண்டு சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
வேதமோதிய குலாலனான பிரமதேவன் முளைத்ததையும் கண்ட எங்கள் ஆசான் மார்க்கண்டு சுவாமிகளைத் தமது அனுபவ சித்தாந்தத்தைக் காட்டி நிற்றற்குரிய துருவனாகவே வார்த்தெடுத்தார் எனல் சாலப் பொருந்துவதாகும். எங்கள் ஆசான் அருள்மொழிகள் நூலில் முதலாவதாக உள்ளதும், மார்க்கண்டு சுவாமிகளுக்கு அருளிய அருள் மொழிகளில் முதலாவதாக உள்ளதுமான மொழி “வடதிசைகாட்டும் கருவி போன்றிருத்தல் வேண்டும்.” என்பதே. இவ்வாறிருத்தற்கேற்ற வண்ணமே மார்க்கண்டு சுவாமிகளை எங்கள் ஆசான் வளர்த்தெடுத்தார். அவருக்கு அருளிய முடிவான அருள்மொழிகளில் ஒன்று:
“சும்மா சும்மா இருக்கும் சூட்சம் நீ
சும்மா இருக்கும் சூட்சம் நான்
சும்மா இருக்கும் சூட்சமே எல்லாம்.
 
என்பது. இது எல்லாம் நன்மோன நிறைவாயிருப்பதைக் காட்டி மார்க்கண்டு சுவாமிகளையூம் சும்மா இருக்கும் சூட்சத்தில் மாட்டிவைத்தற்காகக் கூறிய முடிந்த உபதேசம். இடையிலுள்ள அருள்மொழிகளெல்லாம் இந்த முடிந்த நிலையை எய்துவதற்கான படிகளைத் தாண்டுதற்காக அருளப்பட்டன. மார்க்கண்டு சுவாமிகள் அந்நாளில் வாழ்ந்த நல்லார்கள் பலரையும் போலவே தாமும் மகாத்மாகாந்தியின் சுயராச்சிய இயக்கத்தால் கவரப்பட்டிருந்தார். எங்கள் ஆசான் அவருக்கு ஏற்பட்ட இக்கவர்ச்சியை அகமுகமாகத் திருப்பிவிட்டார். “எங்களுக்குள்ளேதான் சுயராச்சியம்; எவ்வளவு போர்புரிய வேண்டும்” என்பது ஆசான் அருள்மொழி. அந்நாட்களிலே சுவாமிகளது அடியவர்கள் சிலர் ‘மது ஒழிப்புப்போராட்டத்தில்’ ஈடுபட்டிருந்தனர். சுவாமிகளும் அதற்கு ஊக்கமளித்தார் போலவே தோன்றியது. ஆனால் மார்க்கண்டு சுவாமிகளிடம்
 
“மதுபானம்மதுபானம் வேண்டாம். விபசாரம் வேண்டாம். அதுவேண்டாம் இதுவேண்டாம் என்று சொல்லிக்கொண்டு திரியாதே. எல்லாம் அவன் செயலால் நடக்கும். உலகத்தைத் திருத்த யாரால் முடியும்”முடியும்.
 
என அருளினார். மார்க்கண்டு சுவாமிகளது தனிப்பட்ட வாழ்வில் அவரது பிரமச்சரிய விரதத்துக்கு ஊக்கமளித்தார். உயர்ந்த சம்பளம், உத்தியோக உயர்வு ஆகிய நாட்டங்களின்றி இருக்கச்செய்தார். ஆன்ம சாதனைகளில் அவருக்குக் காட்டிய வழிமுறைகளும் அகமுறையானவையே. “படிக்கப்படிக்க மனம் விருத்தியடையும், படித்தறிந்ததுபோதும்” என்ற வண்ணம் சாத்திரமருளில் உழலாமல் தடுத்தார். “தன்னைத் திருத்தாது யாத்திரைக்குப் போவதனாலென்ன?” எனக் கேட்டு அங்கிங்கலைவதை விட்டுத் தன்னைப் பரிசோதித்துச் செம்மைப்படுத்தும் காரியத்தில் ஈடுபட வழிப்படுத்தினார். திருவடியடைய மனம் பரிசுத்தமாயிருந்தால் போதும் என்று மனச்சுத்தத்தையே அடுத்தடுத்து வற்புறுத்தினார். மனத்தை அடக்குவதற்கான பல பயிற்சிகளை அவருக்குப் பயிற்றியது எல்லாம் ஆரம்பப் படிகளிலேயே. “மேற்படியில் மனத்தை அடக்கென்றுகூடச் சொல்லவில்லை. மனம் தானாகச் சும்மா ஓய்ந்திருக்கும் காலமும் வரும்.” என்றருளினார். இதற்கும் மேல் “சும்மா இருக்கப்பழகு; மனத்தைத் தடுக்கத் தேவையில்லை; எங்கே போகிறாய் என்று கேட்டுக்கொண்டு இருக்கும் ஆசனத்தை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்” என அருளியதும் உண்டு. “தியானம் செய்தால் அதுவும் ஒரு வேலை சும்மா பத்து நிமிடத்துக்கு இருக்கப்பழகு” என்பதே சுவாமிகள் அவருக்குக் காட்டிவைத்த சாதனை. எங்கள் சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளுக்குக் காட்டிய சாதனையும் மோனம். அவரை மாட்டி வைத்த போதமும் மோனம். மார்க்கண்டுசுவாமிகள் சிவதொண்டர்க்கெல்லாம் திசைகாட்டியாகக் காட்டிக் கொண்டிருப்பதும் மோனம். “சொல்லெலாம் மோனம்;
“சொல்லெலாம் சொல்லெலாம் மோனம்;
தொழிலாதியும் மோனம்
எல்லாம் நன்மோன நிறைவே.
 
குறிப்பு: இக்கட்டுரை திசைகாட்டி என்னும் தலைப்பில் சிவதொண்டன் மாசிகையில் <ref>சிவதொண்டன் (2009) மலர் 73 இதழ் 4-6. </ref>வெளியான கட்டுரையாகும். சிவதொண்டனின் அனுமதியுடன் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மார்க்கண்டு_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது