மார்க்கண்டு சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
“அவரை உங்களுக்கெல்லாம் திசைகாட்டியாக வைத்திருக்கிறேன்”. -யோகசுவாமிகள்-
[[படிமம்:Markandu Swamy.jpg]]
 
யோகசுவாமிகள் திருவடிக்கலப்புறுதற்குச் சில நாள்களுக்கு முன்னர் மேல் வருமாறு கூறினார். “வந்தகாரியம் முடிந்தது. ஒரு குறையும் வைக்கவில்லை”. சுவாமிகள் வந்தகாரியம் ஒன்றே. அது தன்னை அறியும் வித்தையைப் பயிற்றல். அதனை அவர் நிறைவுறச் செய்தார். தன்னை அறிய நாடுவார்க்கு வேண்டும் ஞானவாசகங்களைப் பாட்டிலும் வசனத்திலும் அருளிச் செய்தார். நற்சிந்தனையும், நால்வர் பாடலும், இன்னும் பற்பல இனிய கட்டுரைகளும் ஏந்தி, திங்கள் தோறும் அன்பர்கள் இல்லம் செல்லும் சிவதொண்டன் என்னும் ஆண்டகையை வளர்த்தெடுத்தார். தன்னையறியத் தவமியற்றுவார்க்குத் தக்க தவச்சாலைகள் இரண்டைச் சிவதொண்டன் நிலையம் என்னும் பெயரில் நிறுவினார். இத் தவச்சாலைகளில் சாதனைக்கு வேண்டும் நியமங்களையும் இந்நியமங்களைச் செம்மையாகப் பேணக்கூடிய நடைமுறைகளையூம் காட்டி வைத்தார். தன்னையறியச் சாதனை புரிவோர்க்கு வேண்டும் வசதிகளைச் செய்து கொடுக்கவல்ல சிவதொண்டர்களையும், போதுமளவவு பொருளீயும் செல்வச் சிவனடியார் களையும் சேர்த்து வைத்தார். தாம் பயிற்றிய வித்தையின் பெறுபேற்றுக்குச் சாட்சியான ஒருவரையும் அமர்த்திவைத்தார். நன்மோன நிறைவிற்கு ஒளிவு மறைவற்ற விளக்க மாய்க் கைதடி ஆச்சிரமத்தில் வீற்றிருந்த மார்க்கண்டு சுவாமிகளே அவர். அவர் தமது ஞானத்தந்தை பயிற்றிய வித்தையானது அவ்வித்தையைச் சிரத்தையோடு பயில்வாரை எல்லாம் தப்பாமல் தன்னையறிந்த தாபத ராக்கும் என்பதை எடுத்துக்காட்டிக் கொண்டி ருந்தார். சுவாமிகளோடு கூடிவாழ்ந்து, சுவாமிகள் பயிற்றிய வித்தையில் தேர்ந்து, சந்ததம் மோன நிலை தவறாதிருக்கும் பேற்றுக்கு ஆளான இன்னும் சில பாக்கியவான்களும் இருந்தனர். அவர்கள் தாம் தொடக்குண்டிருந்த ‘தொண்டு’ என்னும் போர்வையால் அச்சாந்தபத இயற்கையை மூடி மறைத்திருந்தனர். மார்க்கண்டு சுவாமிகளிடம் அத்தகைய மறைப்பெதுவவுமிருக்கவில்லை. திசையறி கருவியைப் பார்த்த மாத்திரத்தே வடதிசை சரிநேராய்த் தெரிவது போல மார்க்கண்டு சுவாமிகளது சந்நிதானத்திலே பிரமசொரூபத்தையே பார்த்திருக்கும் தண்ணென்ற சாந்தபத இயற்கை விளக்கமாய்த் தெரிந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/மார்க்கண்டு_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது