திலாப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
உலகில் சுமார் 50 திலாப்பியா மீன் இனங்கள் (species) உள்ளன. அவற்றை மூன்று தொகுதிகளாக (genus) பிரிக்கலாம்:
 
1. '''ஓரியோக்ரோமிஸ் (''Oreochromis'') தொகுதி:''' இந்தத் திலேப்பியா மீன்களில் தாய் மீன்கள் குஞ்சுகளைக் கவனித்துக் கொள்ளும். கருவுற்ற முட்டைகளை வாயில் வைத்து குஞ்சு பொரிக்க செய்து, பின்னர் குஞ்சுகளையும் வாயில் வைத்துக் காக்கும் (கோழிகள் செட்டைகளில் குஞ்சுகளைக் காப்பது போல).
 
2. '''சாராத்தெரடான் (''Sarotherodon'') தொகுதி:''' இந்தத் திலேப்பியா மீன்களில் தந்தை மீன்கள் தனியாகவோ, அல்லது தாய் மீனுடன் சேர்ந்தோ குஞ்சுகளைக் கவனித்துக் கொள்ளும். கருவுற்ற முட்டைகளை வாயில் வைத்து குஞ்சு பொரிக்க செய்து, பின்னர் குஞ்சுகளையும் வாயில் வைத்துக் காக்கும்.
3. '''திலாப்பியா (''Tilapia'') தொகுதி:''' இந்தத் திலேப்பியா மீன்கள் வாயில் முட்டைகளைப் பொரிப்பதில்லை. மாறாக, நீர்நிலையில் தரையில் சிறு பள்ளம் தோண்டி, அதில் முட்டைகளையிட்டு தமது மார்புத் துடுப்புகளினால் விசிறி குஞ்சு பொரிக்க வைக்கின்றன.
 
மீன் வளர்ப்பில் ஓரியோக்ரோமிஸ் தொகுதியைச் சேர்ந்த திலாப்பியாக்களே பெரிதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதுகுச் செட்டையின் மேல் அமைந்த செம்மை மற்றும் நீல நிறம் இவற்றை அடையாளம் காட்டுகின்றன. இத் திலாப்பியாக்களில் முக்கியமானவை கீழ்க்கண்டவையாகும்:
வரிசை 36:
பொதுவான பெயர் - நீல திலாப்பியா. இதன் இளங்கரிய மற்றும் வெள்ளி நிறக் கலவையில், நீல நிறம் சற்று தூக்கி நிற்கும். இது மற்ற திலாப்பியாக்களைக் காட்டிலும் குளிரை அதிகமாகத் தாங்க வல்லது.
 
இவற்றில் நைல் திலாப்பியா பெருமளவில் வளர்க்கப்படும் திலாப்பியா ஆகும். நீல திலாப்பியா x நைல் திலாப்பியா கலப்பினமும் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட மொசாம்பிகு திலாப்பியா (''ஓரியோக்ரோமிஸ் மொசாம்பிகஸ், Oreochromis mossambicus'') உவர் நீரிலும், தரம் குறைந்த நீரிலும் வாழவும், வளரவும் வல்லது. ஆனால் இதன் அட்டைக் கரி நிறமும், மந்த வளர்ச்சியும் இது வளர்ப்பு மீனாக ஏற்றுக் கொள்ளப்பட தடையாகி விட்டன. ஆனால், மொசாம்பிகு திலாப்பியா சில முக்கியமான கலப்பினங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. குறிப்பாக, மொசாம்பிகு திலாப்பியா x நைல் திலாப்பியா மற்றும் மொசாம்பிகு திலாப்பியா x நீல திலேப்பியா கலப்பினங்களில் தானாகவே தோன்றிய சிவப்புத் தோல் கொண்ட சில மீன்களை தலைமுறை, தலைமுறையாக உள்கலப்பு (inbreeding) செய்து உருவாக்கப்பட்டதே செந்திலாப்பியா (red tilapia). இந்த செந்திலாப்பியாவும் பரவலாக வளர்க்கப்படும் இனமாகும்.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திலாப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது