திலாப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 75:
 
திலாப்பியாவில் ஆண் பெண்ணைக் காட்டிலும் பெரிதான அளவில் வளரும். பருவமடைந்த பிறகு இந்த மாற்றம் நடக்கும்.
 
== திலாப்பியா வளர்ப்பு ==
 
விரைவாக பருவமடைந்து, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, குஞ்சுகள் பெருகுவது திலாப்பியா வளர்ப்பில் பிரச்சினையாக இருந்து வந்தது. ஏனென்றால் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் பொழுது அவற்றின் வளர்ச்சி குன்றுகிறது. மேலும், தொடர்ந்து குஞ்சுகள் பலுகிப் பெருகும் போது உணவுப் பற்றாக்குறையும், நீரின் தரக் குறைவும் ஏற்பட்டு வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப் படுகிறது. எனவே, இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல வழிகள் ஆராயப்பட்டன.
 
ஒரு வழி, வளருகின்ற மீன்களில் ஆண் மீன்களைப் பிரித்தெடுத்து அவற்றை மட்டும் வளர்ப்பது (ஆண் திலாப்பியா, பெண் திலாப்பியாவைவிட விரைவாக வளரும்). இந்த முறையை நடைமுறையில் செயல்படுத்துவது கடினம் என்பதால் இது பரவலாக உபயோகப்படுத்தப்படுவதில்லை.
 
இன்னொரு வழி, திலாப்பியா குஞ்சுகளை உண்டு வாழும் விரால், கெழுத்தி, கொடுவா போன்ற மீன்களையும் நீர் நிலையில் விட்டு, குஞ்சுகளைக் கட்டுப்படுத்துவது. இந்த முறையும் நடைமுறையில் பயன் தருவது கிடையாது.
 
மற்றொரு வழி சில கலப்பினங்கள் 90%க்கும் மேற்பட்ட ஆண் குஞ்சுகளை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக நைல் திலாப்பியா x நீல திலாப்பியா கலப்பினம் பெரும்பாலும் ஆணாகவே இருக்கும். இந்த முறைதான் உலகத்தின் மிகப் பெரிய திலாப்பியா உற்பத்தியாளரான சீனா கடைப்பிடிப்பது.
 
கரு முட்டையிலிருந்து குஞ்சு பொரித்த சில தினங்களுக்குள் குஞ்சுகளுக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோனை உணவோடு அளித்தால் அவை ஆணாகி விடும். 17-ஆல்பா மொதில் டெஸ்டோஸ்டீரான் என்னும் செயற்கை ஹார்மோனை தீவனத்தில் 60 ppm என்ற கணக்கில் குஞ்சு பொரித்த பின் முதல் 21 நாட்களுக்கு வழங்க வேண்டும். இந்த ஹார்மோன் மீன் குஞ்சாக இருக்கும் போது மட்டுமே சிறிய அளவில் வழங்கப்படுவதால், 3-4 மாதங்கள் கழித்து அவை உணவிற்கான அளவை எய்தும் போது, அவற்றைச் சாப்பிடுவதில் அபாயம் ஏதும் கிடையாது. ஆனால் ஆண்ட்ரோஜனைக் கையாளும் நபர், கையுறை, முகமூடி முதலியவற்றை அணிந்து கொள்ளவில்லை என்றால், ஹார்மோனால் அவருக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திலாப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது