திலாப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 95:
 
சிறு கண் கொண்ட வலையால் சிறு செவ்வகத் தொட்டிகளைச் (உதாரணமாக 1.2 மீ நீளம், 0.8 மீ அகலம், 0.5 மீ ஆழம்) செய்து, அவற்றை குளத்தில் கட்டி, அவற்றினுள்ளும் ஆண், பெண் திலாப்பியாவை இருப்பு செய்யலாம். இவ் வகைத் தொட்டி ஹாப்பா என்று அழைக்கப்படுகிறது. இப்படிச் செய்வதன் அனுகூலம் என்னவென்றால், திலாப்பியாவை 4-5க்கு ஒரு நாள் பிடித்து, வாயைத் திறந்து முட்டைகளையும், புதிதாகப் பொரித்திருக்கும் குஞ்சுகளையும் அறுவடை செய்து விடலாம். இந்த முட்டைகளையும், குஞ்சுகளையும் தனியாகப் பராமரித்து அவற்றை வளர்க்கலாம். எப்படி கோழியின் முட்டையை நாம் எடுத்து விடுவதால், அது அடைகாக்கப் போகாமல் மறுபடியும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு முட்டைகளை இடுகிறதோ, அப்படியே வாயிலிருந்து முட்டைகளும், குஞ்சுகளும் எடுக்கப்படும் போது, பெண் திலாப்பியாவும் மீண்டும் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும். எனவே, இம் முறையில் உற்பத்தி பெருகுகிறது.
 
== திலாப்பியா வளர்ப்பு முறைகள் ==
 
உலகத்தில் பெரும்பாலான திலாப்பியா வளர்ப்பு குளங்களில்தான் நிகழ்கிறது. மண்ணில் தோண்டிய குளங்களில் நீரை நிரப்பி, அவற்றிற்கு உரமிட்டு, திலாப்பியா குஞ்சுகளை இருப்பு செய்து வளர்ப்பதே இம் முறையாகும். உரமிடுவதன் மூலமாக நீரில் சிறு மிதவை தாவரங்கள், அவற்றை உண்ணும் சிறு மிதவை விலங்குகள் முதலானவை பெருகுகின்றன. இவை திலாப்பியாவிற்கு இரையாகின்றன. குளத்தினடியில் இருக்கும் மக்கிய தாவரப் பொருட்கள், அவற்றினூடே வளரும் பலவித நுண்ணுயிர்களும் திலாப்பியாவிற்கு உணவாகின்றன. இது தவிர அவற்றிற்கு வளர்ப்பவர்களால் இரையும் அளிக்கப்படுகின்றது. தவிடுகள், புண்ணாக்குகள், மாவுகள் போன்றவை மிகுந்த இந்த இரையும், திலாப்பியாக்கள் நீரிலிருந்து பெறும் பல்வகையான உணவுப் பொருட்களும் திலாப்பியா விரைந்து வளர உதவுகின்றன. குளத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 4-5 என்ற கணக்கில் அடர்த்தி செய்யப்படும் சுமார் 2-3 கிராமுள்ள குஞ்சுகள் 5-6 மாதங்களில் 500 கிராமை எட்டும். பத்து மாதங்களில் ஒரு கிலோ அளவிற்கு வளர்ந்து விடும். எனவே, தகுந்த தட்பவெப்பத்தில், சரியான மேலாண்மையில் ஒரு ஹெக்டேர் (10,000 சதுர மீட்டர்) பரப்பளவுள்ள ஒரு குளத்தில் பத்து மாதங்களில் 3-4 டன் திலாப்பியா அறுவடை செய்ய இயலும்.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திலாப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது