கூழங்கைச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான [[யாழ்ப்பாண வைபவமாலை]]யின்படி, '''யாழ்ப்பாண இராச்சியத்தை''' ஆண்ட [[ஆரியச்சக்கரவர்த்திகள்]] வம்சத்தின் முதலாவது மன்னன் '''கூழங்கைச் சக்கரவர்த்தி'''யாவான். [[வையாபாடல்]] இப் பெயரின் வடமொழியாக்கமான '''கோளுறு கரத்துக் குரிசில்''' என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும். இவன் கை ஊனமுற்று இருந்த காரணத்தால், "கூழங்கையன்" என அழைக்கப்பட்டுப் பின்னர் "கூழங்கைச் சக்கரவர்த்தி" அல்லது "கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி" எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
 
"மணற்றிடர்" என்று அன்று அழைக்கப்பட்ட [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]]ப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணனே, இந்தியாவிலிருந்து, தசரதன் மைத்துனனான குலக்கேது என்பவனின் மகனான கூழங்கைச் சக்கரவர்த்தியைக் கூட்டிவந்து முடிசூட்டினான் என [[வையாபாடல்]] கூற, சோழ வம்சத்தில் வந்த திசையுக்கிர சோழனுடைய மருமகனான சிங்ககேது என்பவனுடைய மகனே இவனெனவும், யாழ்பாடியின் பின் அரசனில்லாதிருந்த யாழ்ப்பாணத்தை ஆள இந்தியாவிலிருந்து இவனைப் பாண்டிமழவன் என்னும் ஒருவன் அழைத்து வந்ததாகவும் [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறும். வையா பாடலின்படி இவனுடைய ஆட்சித் தொடக்கம் [[கலியுக ஆண்டு]] 3000 (கி.மு. 101) ஆகும். தற்கால ஆய்வாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கூழங்கைச்_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது