ஓப்பெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: oc:Organizacion dels païses exportadors de petròli
new picture
வரிசை 28:
 
== வரலாறு ==
[[படிமம்:OPEC01OPEC-building-01.jpg|right|thumb|250px|வியன்னாவில் இருக்கும் ஓப்பெக் தலைமை அலுவம்]]
 
ஓப்பெக் போன்ற அமைப்பை உருவாக்க முதல் அடியை எடுத்து வைத்தது [[வெனிசுவேலா]] நாடு தான். [[1949]]-ஆம் ஆண்டு வெனிசுவேலா, [[ஈரான்]], [[ஈராக்]], [[குவைத்]], [[சவுதி அரேபியா]] போன்ற நாடுகளை அணுகி, அவர்களுக்குள் நெருங்கிய உறவும் தொடர்பும் பேண வழிமுறைகளைக் கண்டறியலாம் என்று ஆலோசனைகளை எடுத்து வைத்தது. [[1960]]-ல் வெனிசுவேலாவின் ஆற்றல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் உவான் பப்லோ பெரேசு அல்பான்சோவும் சவுதி அரேபிய ஆற்றல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் அப்துல்லா அல்-தரிக்கியும் முடுக்கியதன் விளைவாக, ஈராக், ஈரான், குவைத், சவுதி அரேபியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் அரசுகள் [[பாக்தாத்]] நகரில் சந்தித்து, அவரவர் நாட்டில் உற்பத்தியாகும் பாறைநெய்யின் விலையைக் குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தினர். [[1960]] களில் அமெரிக்க அதிபராயிருந்த [[டுவைட் டி. ஐசனாவர்]] இயற்றிய சட்டத்தின் காரணமாக வெனிசுவேலாவின் எண்ணெய்க்கு வரம்பு விதித்தும், [[மெக்சிக்கோ]], [[கனடா]] நாடுகளின் எண்ணெய்க்குச் சார்பாகவும் இருந்த காரணத்தால் உந்தப்பட்டு, ஈராக்கின் பாக்தாத் நகரில் ஓப்பெக் அமைப்பு உருவாக்கப் பட்டது. ஐசனோவர் தங்களது தேசியப் பாதுகாப்பு, மற்றும் போர்க்காலத்தில் ஆற்றலின் அணுக்கம் போன்ற காரணங்களைக் கூறினார். இதற்கு எதிர்வினையாக வெனிசுவேலாவின் அதிபர் ராமுலோ பெத்தன்கோர்ட், தங்களது எண்ணெய் வள வருமானமும் இலாபமும் பாதிக்காமல் இருப்பதற்காக எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளுடன் உறவு நாடினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஓப்பெக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது