"மலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: ceb:Tai; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: hi:मल)
சி (தானியங்கிஇணைப்பு: ceb:Tai; cosmetic changes)
உடலுக்குத் தேவையான ஊட்டப் பொருட்களை ஈர்த்தபின் [[செரித்தல்|செரிக்கப்படாத]] (சமிபாடடையாத) [[உணவு]] மற்றும் உடல் தொழில்பாடுகளில் உருவாகும் சக்கையான கழிவுப்பொருட்களே '''மலம்''' ஆகும். மாந்தர்களில் குறிப்பாக, [[பெருங்குடல்|பெருங்குடலில்]] சேர்க்கப்பட்டு, ஆசனவாய் (குதம்) வழியாக உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற [[திண்மம்|திண்ம]]-[[நீர்மம்|நீர்ம]] நிலையில் இருக்கும் கழிவுபொருட்களையே மலம் சுட்டும். மாந்தர்கள் மட்டும் அன்றி மற்ற விலங்குகளின் உயிரினங்களின் திண்ம-நீர்ம கழிவுப்பொருளுக்கும் மலம் என்பது பொதுவான பெயர்.
 
மலத்தின் தீநாற்றத்திற்குக் காரணம் குடலில் இயங்கும் நுண்ணுயிரிகள் உருவாக்கும் [[இண்டோல்]] (indole), [[இசுக்கட்டோல்]] (skatole), [[கந்தகம்]] கொண்டுள்ள [[தியோல்]] (thiol) சேர்மங்கள் மற்றும் கரிமமல்லா வேதிப்பொருளாகிய [[ஐதரசன்-டை-சல்பைடு]] (ஐதரச-இருகந்தகம்) முதலியவையே.
 
[[Fileபடிமம்:Hydrogen-sulfide-3D-vdW.png|thumb|right|180px|மலத்தின் தீநாற்றத்துக்குக் காரணமான [[ஐதரசன்-டை-சல்பைடு]] (H<sub>2</sub>S) [[மூலக்கூறு]].]]
 
== மலத்தின் பயன்பாடும் சூழிணக்கவியலும் (ecology) ==
காடுகளில் மலத்தைக் கொண்டு அது எந்த விலங்கின் மலம் என்று அறிய இயலும். [[பறவை]]களின் மலத்தை ''எச்சம்'' குறிப்பிடுவது வழக்கம். பறவை எச்சத்தில் உள்ள [[விதை]] முதலியன முளைத்து செடிகொடிகள் பரவ வழி வகுக்கின்றன. ஆடுகள் மற்றும் சில விலங்குகளின் மலங்கள் உரமாகவும், காய்ந்த மலம் எரிபொருளாகவும் (எ.கா. மாட்டுச் சாணம்) பயன்படுகின்றது. பொதுவாக உணவில் இருந்து ஆற்றல் தரும் ஊட்டப்பொருள் உறிஞ்சப்பட்டாலும், பலநேரங்களில் செரிக்கப்படாத உணவில் 50% வரையும் ஆற்றல் இருக்கும்.<ref name=Campbell>''Biology'' (4th edition) N.A.Campbell (Benjamin Cummings NY, 1996) ISBN 0-8053-1957-3</ref>. இதனால் கழிக்கப்படும் மலம், மேலும் சிதைவுற்று மண்ணுடன் மண்ணாகக் கலக்கவும், அதனைப் பயன்படுத்தி உயிர்வாழும், [[புழு]], [[வண்டு]], [[பூச்சி]]கள், [[நுண்ணியிரி]]கள் போன்ற பிற இனங்களுக்குத் தேவையானவாறு போதிய ஆற்றலும் இருக்கும்.
[[Fileபடிமம்:Earthworm faeces.jpg|thumb|right|180px|மண்புழுவின் மலம். இது உரமாகப் பயன்படுகின்றது]]
சில வண்டுகள் மலத்தின் நெடியை வெகு தொலைவிலேயே உணர்ந்து வரத்தக்கன.<ref>{{cite journal |author=Heinrich B, Bartholomew GA |title=The ecology of the African dung beetle |journal=[[Scientific American]] |volume=241 |issue= |pages=146–56 |year=1979}}</ref>. சில விலங்குகளுக்கு கழிவுப்பொருளை உண்ணுவதும் ஒரு தேவையாக உள்ளன. [[யானை]]க் கன்றுகள் தன் தாயின் மலத்தை உண்வதால், தன் [[குடல்|குடலுக்குத்]] தேவையான நுண்ணியிரிகள் பெறுகின்றன.
 
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
<references/>
 
[[bs:Izmet]]
[[ca:Excrement]]
[[ceb:Tai]]
[[cs:Výkal]]
[[cy:Ymgarthion]]
43,924

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/476216" இருந்து மீள்விக்கப்பட்டது