"பயனர் பேச்சு:Meykandan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,206 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
வணக்கம் மெய்கண்டான், உங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கட்டுரைகளில் காணும் சிறு பிழைகளைக் களைந்து மெருகூட்டி வருகிறீர்கள். அநேகமான உங்கள் திருத்தங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், ஒரு சில மாற்றங்களில் எனது கருத்தைக் கூற விரும்புகிறேன். "அனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர்ப் பங்களிக்கவேண்டிய தேவை இல்லை" என்ற சொற்றொடரில் ''பின்னர்ப் பங்களிக்கவேண்டிய'' என்பதில் [[புணர்ச்சி (இலக்கணம்)|புணர்ச்சி விதி]] தேவைக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இதற்கு ஏதாவது புணர்ச்சி விதி உள்ளதா அன்பதை அறிய ஆவல்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 03:24, 1 பெப்ரவரி 2010 (UTC)
::வணக்கம் மெய்கண்டன்,உங்களை விக்கிப்பீடியாவிற்கு வரவேற்பதிலும் உங்களது பிழைதிருத்தங்களை வரவேற்பதிலும் நானும் கனகுடன் இணைகிறேன்.இருப்பினும் அவர் கூறுவது போல சற்றே கூடுதலாக புணர்ச்சிவிதிகளை பயன்படுத்துகிறீர்களோ என்ற ஐயம் எனக்கும் உள்ளது. இதைத் தவிர நீங்கள் விக்கிமீடியாவில் ஏற்கெனவே உள்ள பக்கங்களையும் வார்ப்புரு ஆணைக்குறிப்புக்களுள் உள்ளவற்றையும், காட்டாக <nowiki>{{NUMBEROFARTICLES}}</nowiki>, மாற்றாதீர்கள்...இணைப்புகளின் தலைப்பை திருத்தவேண்டும் எனில் அந்த பக்கத்தலைப்பை வழிமாற்றுடன் புதிய திருத்திய பெயருக்கு '''நகர்த்த''' வேண்டும். இதனால் கட்டுரையில் இணைப்புகள் அறுந்து போகாதிருக்கும். சில வார்ப்புருக்களும் ஆணைகளும் அவை வரையறுக்கபட்ட விதத்திலேயே பயன்படுத்தப் படவேண்டும்.--[[பயனர்:Rsmn|மணியன்]] 04:18, 1 பெப்ரவரி 2010 (UTC)
 
: மெய்கண்டன், தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் உற்சாகமாகப் பங்களிப்பதையிட்டு வாழ்த்துக்கள். உங்கள் தொடர்ந்த பங்களிப்பு தமிழ் விக்கிக்கு மிகவும் அவசியம். [[இனியவை நாற்பது]] கட்டுரையில் நீங்கள் அதன் மூலத்தை முழுவதும் சேர்த்திருப்பதைப் பார்த்தேன். விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் அவ்வாறு சேர்ப்பதில்லை. வேண்டுமானால் இதனை நீங்கள் '''விக்கிமூலம்''' என்னும் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டத்தில் சேர்க்கலாம். [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 15:25, 3 பெப்ரவரி 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/478466" இருந்து மீள்விக்கப்பட்டது