விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
நீங்கள் அவ்வாறான வெட்டி ஒட்டுதலைக் கண்டால் நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
 
==எவ்வாறு ஓர் பக்கத்தை நகர்த்துவது==
 
இதனை உள்பதிகை செய்த ''உறுதி செய்யப்பட்ட'' எந்த பயனரும் செய்யலாம்.அனானிகள் செய்யவியலாது. தவிர மாற்றவிருக்கும் தலைப்பில் ஏற்கெனவே கட்டுரை இருப்பின் உங்கள் முயற்சி தோல்வியடையும்.
 
இனி இதற்கான படிப்படியான செயல்கள்:
 
*நீங்கள் உட்பதிகை செய்திருப்பின் கட்டுரையின் மேல் ''கட்டுரை'',''உரையாடல்'',''தொகு'' என்ற கீற்றுகளுடன் ''நகர்த்து'' என்ற கீற்றையும் காண்பீர்கள். நீங்கள் சரியான பக்கத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொண்டு, ''நகர்த்து'' கீற்றை அமுக்கவும்.
 
இதனை அழுத்தினால்
----
பக்கத்தை நகர்த்து .... ''கட்டுரையின் தற்போதைய பெயர்''
 
புதிய தலைப்பு : ...''நீங்கள் இடவேண்டிய புதுப் பெயர்''
 
காரணம் : ''இங்கு திருத்தத்திற்கான காரணத்தை இடவும்''
 
ஒரு வழிமாற்றை விட்டுச்செல் --> இந்தக் கட்டுரையுடன் பிற பக்கங்கள் இணைக்கப்பட்டிருப்பின்<sup>*</sup> இங்கு ஓர் √ சின்னத்தை இடலாம்.
 
இப்பக்கத்தைக் கவனி ---> நீங்கள் வேறு யாரேனும் இதனை மாற்றுகிறார்களா என கவனிக்க வேண்டியிருந்தால் √ சின்னம் இடலாம்
 
----
<sup>*</sup>எந்தெந்தப் பக்கங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய கட்டுரைப் பக்கத்தின் இடது பட்டையில் "இந்தப் பக்கத்தை இணைத்தவை" இணைப்பு மூலம் அறியலாம்.
*எல்லாவற்றையும் சரிபார்த்தபின்னர், ''நகர்த்து'' தத்தலை அழுத்தவும். உங்கள் செயல்பாடு வெற்றிகரமாக நிறைவேறினால் '''செயல்பாடு நிறைவுற்றது''' என்ற செய்தி கிடைக்கும். கட்டுரையின் தலைப்பு புதிய தலைப்பிற்கு மாற்றப்பட்டிருக்கும். பழைய தலைப்பு ஓர் வழிமாற்றுப் பக்கமாக அடையாளப்படுத்தப்பட்டு பழைய பக்கத்திற்குள்ள இணைப்புகள் புதிய தலைப்பிற்கு செல்லும். எனினும்,இரட்டை வழிமாற்றிகள் (முதற்பக்கத்திற்கு வழிமாற்றிய பக்கங்கள்)தானாக புதிய பக்கத்தை வந்தடையா.அவற்றை தனிநபரே ஒவ்வொன்றாகத் திருத்த வேண்டும். (விளக்கமாகச் சொன்னால்:எம்.ஜி.ஆர் என்ற பக்கத்திற்கு வழிமாற்றியாக ம.கோ.ராமச்சந்திரன் என்றிருந்தால், இப்போது ம.கோ.ராமச்சந்திரன் பக்கத்திற்கு ம.கோ.இராமச்சந்திரன் என்று நகர்த்தினால், எந்தப் பக்கங்களில் ம.கோ.ராமச்சந்திரன் என்றுள்ளதோ அங்கெல்லாம் இணைப்பு ம.கோ.இராமச்சந்திரன் பக்கத்திற்கு இட்டுச் செல்லும். ஆனால் எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் என்று உள்ளதோ அந்த இணைப்புகள் தாமாகவே ம.கோ.இராமச்சந்திரன் பக்கத்திற்கு இட்டுச் செல்லாது. ) இவ்வாறான இரட்டை வழிமாற்றுகளை [[:en:Wikipedia:Double redirects#How to fix a double redirect|எவ்வாறு சரி செய்வது]] மற்றும் [[:en:Wikipedia:Double redirects#Checking for double redirects|எவ்வாறு இனம் காண்பது]] என ஆங்கில விக்கியில் காண்க.
*வெற்றிகரமான செயல்பாட்டை அடுத்து இத்தகையப் பக்கமொன்று காட்டப்படும்: [[மீடியாவிக்கி:1movedto2]].
*இப்பக்கத்தை இணைத்தவை பட்டியலைத் திறக்கவும்.(பக்க நகர்வு செய்திப் பக்கத்திலேயே உங்கள் வசதிக்காக ஓர் குறுக்கிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும், இருப்பினும் இடது பக்கமுள்ள கருவிப்பட்டையின் "இந்தப் பக்கத்தை இணைத்தவை" இணைப்பு மூலமும் அறியலாம்)
*அந்தப் பக்கத்தில் உள்ள வடிகளில் ''இணைப்புகளை மறை'' என்ற தத்தலை அழுத்தவும்.இது முந்தைய தலைப்பிற்கு வழிமாற்றுகளைக் காட்டும்.ஒவ்வொன்றாக இந்த வழிமாற்றுகளுக்குச் சென்று தொகுத்தல் தத்தலை அழுத்தி வழிமாற்றினை இப்போது நீங்கள் மாற்றிய புதிய தலைப்பிற்கு மாற்றவும்.இதனை நீங்கள் செய்ய மறந்தாலும், விக்கி தானியங்கி பயனர் ஒன்று இதனை பின்னர் சரி செய்யும்.
*இந்தப் பக்கத்தில் 50க்கும் கூடுதலான வழிமாற்றுகள் (மிக அதிசயமாக) இருப்பின், "அடுத்த 50" இனை அழுத்தி எல்லாப் பக்கங்களையும் சரி செய்யவும்.
*கட்டுரையின் பெயர் முதல் பத்தியில் வருவது வழக்கமாதலால் நீங்கள் மாற்றிய தலைப்பு முதல் பத்தியில் இடம் பெற செய்யுங்கள்.