கிணறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''கிணறு''' என்பது, நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப...
 
No edit summary
வரிசை 1:
'''கிணறு''' என்பது, நிலத்தின் கீழ் [[நீர்ப்படுகை]]களில் சேமிக்கப்பட்டிருக்கும் [[நிலத்தடி நீர்|நிலத்தடி நீரை]] எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் நிலத்தில் தோண்டப்படும் ஒரு [[குழி]] ஆகும். அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன. நிலத்தடி நீரின் மட்டத்தைப் பொறுத்து கிணற்றின் [[ஆழம்]] வேறுபடும். கிணறுகள் பொதுவாக [[வட்டம்|வட்டமான]] [[குறுக்கு வெட்டுமுகம்]] கொண்டவையாக இருக்கும். [[சதுரம்]], [[நீள்சதுரம்]] ஆகிய வடிவங்களிலான வெட்டுமுகம் கொண்ட கிணறுகளும் உள்ளன. இவ்வெட்டு முகங்களின் [[விட்டம்]] அல்லது நீள அகலங்களின் அளவுகளும் வெட்டும் முறை, பயன்பாடு என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுக் காணப்படும்.
 
 
கிணறுகளில் நீர்மட்டம் பெரும்பாலும் கைக்கு எட்டாத ஆழத்தில் இருப்பதனால், நீரை வெளியே எடுப்பதற்குப் பல முறைகள் பயன்படுகின்றன. ஏதாவது [[கொள்கலன்]]களைக் [[கயிறு|கயிற்றில்]] கட்டிக் கிணற்றுக்குள் இறக்கி [[மனிதவலு]]வைப் பயன்படுத்தி நீரை வெளியே எடுப்பது பண்டைக்காலம் தொட்டு இன்றுவரையும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முறி. இம்முறையில் மனித முயற்சியை இலகுவாக்குவதற்காக [[கப்பி]], [[துலா]] போன்ற பல்வேறு பொறிமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிணறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது