உரோமன் யாக்கோபுசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

04:54, 4 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

உரோமன் ஒசிப்போவிச் யாக்கோபுசன் (Roman Osipovich Jakobson, உருசிய மொழி: Рома́н О́сипович Якобсо́н) (அக்டோபர் 11, 1896 - சூலை 18, 1982) ஓர் உருசிய நாட்டு மொழியிலாளரும் இலக்கிய கருத்தியலாளரும், இலக்கிய கட்டகவியலாளரும் ஆவார்.

இருபதாம் நூற்றாண்டில் மொழியியல் துறையில் வலுவான முதன்மை பெற்ற மொழிக் கட்டகவியல்(structural analysis of language) துறையில் செல்வாக்கு பெற்ற அறிவாளியாக முன்னணியில் இருந்தவர் யாக்கோபுசன். யாக்கோபுசன் சுவிட்சர்லாந்திய மொழியிலாளர் ஃவெர்டினாண்டு டி சாசுரேயின் (Ferdinand de Saussure) கட்டகவியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நிக்கொலாய் துருபெட்ஃசிக்கோயுடன் (Nikolai Trubetzko) சேர்ந்து மொழியியலில் ஒலியனியல் (phonology)என்னும் துறையைத் தொடங்கினார். இதன் அடிப்படையில் சொற்றொடா பகுப்பாய்வியல் (syntax), சொற்பகுப்பாய்வியல் (morphology) ஆகிய துறைகளை அலசினார். இதனை பொருள்கோண்மை இயலுக்கும் (semantics) நீட்டிக்க முயன்றார். இவர் இசுலாவிக் (Slavic) மொழிகளியலிலும் உருசிய மொழியில் வினைச்சொற்கள் வகைப்பாட்டியலிலும் முதன்மையான ஆய்வுகள் செய்துள்ளார்.


சார்லசு சாண்டர்சு பையர்சு (Charles Sanders Peirce) என்பாரின் சூழ்பொருண்மை (semiotics) கொள்கையின் கருத்துகளையும், தொடர்பியல் கருத்தியங்களையும் (communication theory), கட்டுறுத்தியக் கொள்கைகளையும் (சைபர்நெட்டிக்) உள்வாங்கி மொழியில் செய்யுளியல், இசை, திரைப்படம், காண்கலைகள் (visual arts) போன்றவற்றை அலச முற்பட்டார்.

குறிப்புப் பகிர்வு அல்லது தொடர்பியல் செயற்பாடுகள்

இடாய்ச்சுலாந்தைச் சேர்ந்த கார்ல் பியூலர் (Karl Bühler) என்பாரின் பகுப்புறுப்பியல் (ஓர்கானொன் மோடல், Organon-Model) கருத்துகளின் அடிப்படையில் யாக்கோபுசன் மொழியின் தொடர்பியலின் இயக்கங்களில் ஆறு கூறுகளை முன்வைத்தார்.

 
[1]

மொழியின் ஆறு செயற்கூறுகள்:

  1. சூழல் சார்வு (referential)
  2. கருத்து, தன்னழகு, கலையுணர்வு (aesthetic)
  3. தன்னுந்தல் (emotive)
  4. செயற்தூண்டல் (conative)
  5. இணக்கக்குசலம் (phatic)
  6. மீமொழி (metalingual)

மேற்கண்ட ஆறு கூறுகளின் எப்பொழுதும் ஒன்று மொழி அல்லது உரையின் வகையைப் பொருத்து முதன்மையானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக செய்யுள் அல்லது பாட்டியலில் கலையுணர்வு தலைதூக்கி இருக்கும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Middleton, Richard (1990/2002). Studying Popular Music, p.241. Philadelphia: Open University Press. ISBN 0335152759.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமன்_யாக்கோபுசன்&oldid=490277" இலிருந்து மீள்விக்கப்பட்டது