உரோமன் யாக்கோபுசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,922 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
(படம் சேர்ப்பு)
சார்லசு சாண்டர்சு பையர்சு (Charles Sanders Peirce) என்பாரின் [[சூழ்பொருண்மை]] (semiotics) கொள்கையின் கருத்துகளையும், தொடர்பியல் கருத்தியங்களையும் (communication theory), கட்டுறுத்தியக் கொள்கைகளையும் (சைபர்நெட்டிக்) உள்வாங்கி மொழியில் செய்யுளியல், இசை, திரைப்படம், காண்கலைகள் (visual arts) போன்றவற்றை அலச முற்பட்டார்.
==வாழ்க்கையும் பணியும்==
யாக்கோபுசன் உருசியாவில் வசதியான யூதக் குடும்பத்தில் பிறந்தார். சிறு அகவையிலேயே மொழி மீது ஆர்வம் கொண்டார். கீழைமொழிகளுக்கான லாசரேவ் கல்வி நிறுவனத்தில் பயின்றார். பிரகு மாசுக்கோவ் பல்கலைக்கழகத்தில் வரலாற்று-மொழியியல் துறையில் பயின்றார்<ref>Jakobson, Roman (1997). ''My Futurist Years'', pp. 5, 30. trans. Stephen Rudy. Marsilio Publishers. ISBN 1568860498.</ref> மாசுக்கோவின் மொழியியல் வட்டாரங்களில் முன்னணியில் இருந்ததால் புதுப்போக்கான கலை இலக்கிய ஆர்வலர்கள் நடுவே நல்லுரவில் இருந்தார். மொழியையும் இலக்கணத்தையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும், காலத்தால் நிகழ்ந்த சொற்களின் வரலாற்றையும் வளர்ச்சியையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
1920 இல் உருசியாவில் பெரும் அரசியல் கொந்தளிப்புகள் நிகழ்ந்தன. அப்பொழுது இவர் சோவியத் தூதுவர் குழுவில் ஒருவராக செக்கோசுலாவியாவிற்குச் சென்று அங்கு [[பிராகு|பிராகில்]] (Prague)முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டார். அங்கு கல்விவாழ்விலும், கலைவாழ்விலும் செக்கோசுலாவியாவில் பலருடன் நல்ல உறவு ஏற்படுத்திக்கொண்டார். செக் நாட்டின் பல கவிஞர்களுடனும், இலக்கிய ஆசிரியர்களுடனும் நல்லுறவு கொண்டிருந்தார். செக் மொழி செய்யுள்களில் நல்ல தேர்ச்சி பெற்று அவர்கள் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். 1926 இல் விலெம் மத்தேசியசு (Vilém Mathesius) என்பாருடன் சேர்ந்து மொழியியலில் பிராகு குலம் (Prague school) என்னும் ஒரு குழுவை உருவாக்கினார் (இதில் நிக்கோலாய்ய் துருபெட்ஃசிக்கோய் (Nikolai Trubetzkoi), ரெனெ வெல்லெக் (René Wellek), யான் முகரோவ்சுக்கி (Jan Mukařovský) உறுப்பின்னர்களாக இருந்தனர்.
 
==குறிப்புப் பகிர்வு அல்லது தொடர்பியல் செயற்பாடுகள் ==
[[செருமனி|இடாய்ச்சுலாந்தைச்]] சேர்ந்த [[கார்ல் பியூலர்]] (Karl Bühler) என்பாரின் [[பகுப்புறுப்பியல்]] (ஓர்கானொன் மோடல், Organon-Model) கருத்துகளின் அடிப்படையில் யாக்கோபுசன் மொழியின் தொடர்பியலின் இயக்கங்களில் ''ஆறு கூறுகளை'' முன்வைத்தார்.
21,528

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/490299" இருந்து மீள்விக்கப்பட்டது