இயல்புரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: bg:Естествени права; cosmetic changes
வரிசை 1:
'''இயல்புரிமை''' (natural right) என்பது உலகம்தழுவிய [[உரிமை]]கள் தொடர்பான ஒரு கருத்துருவாகும். இந்த உரிமை, [[சட்டம்|சட்டங்களிலோ]] [[நம்பிக்கை]]களிலோ தங்கியிராமல் உயிரினங்களுக்கு இயல்பாகவே அமைந்தது எனப்படுகின்றது. இயல்புரிமைக் கோட்பாட்டில் இருந்து பெறப்பட்ட [[இயற்கை விதி]]க் கோட்பாட்டின் உள்ளடக்கம் இயற்கையாக முடிவாக்கப்படுவதால் இது உலகம் முழுதும் பொருந்துகிறது. ஐரோப்பாவில் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக்]] (Enlightenment) காலத்தில், இயற்கை விதி, அரசர்களின் தெய்வீக உரிமைகளுக்கு எதிராக இருந்ததுடன், இதுவே [[செந்நெறிக்காலக் குடியரசியம்|செந்நெறிக்காலக் குடியரசிய]] அடிப்படையில், [[சமூக ஒப்பந்தம்]], [[நேர்ச் சட்டம்]], அரசு என்பவற்றை நிறுவுவதை நியாயப்படுத்தும் ஒரு வாதமாகவும் விளங்கியது. மாறாக, இயல்பு உரிமைக் கருத்துரு, இத்தகைய அமைப்புக்கள் இருப்பதை எதிர்த்து வாதிடுவதற்கும் [[அராசகம்|அராசகவாதிகளால்]] பயன்படுத்தப்பட்டது.
 
இயல்புரிமை என்பது அதனை அரசுகளோ அல்லது சமுதாயமோ நடைமுறைப்படுத்தா விட்டாலும் அது இயல்பாகவே இருப்பதாகக் கருதப்படும். ஆனால், சட்டம்சார்ந்த உரிமை என்பது மக்களின் நன்மைக்காக அரசினாலோ, சமுதாயத்தினாலோ உருவாக்கப்படுகிறது. எது இயல்புரிமை எது சட்ட உரிமை என்பது [[மெய்யியல்|மெய்யியலிலும்]], அரசியலிலும் ஒரு முக்கியமான கேள்வியாகும். இக் கருத்துருவை விமர்சிப்பவர்கள், மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளுமே சட்ட உரிமைகள்தான் என்கிறார்கள். கருத்துருவை ஆதரிப்பவர்களோ [[அமெரிக்க விடுதலைப் பிரகடனம்]], [[உலக மனித உரிமைகள் சாற்றுரை]] என்பன இயல்புரிமையை ஏற்றுக்கொள்வதனால் ஏற்படும் பயனை விளக்குகின்றன என்கின்றனர்.
 
[[மனித உரிமை]] என்பதன் எண்ணக்கரு இயல்புரிமையில் இருந்து பெறப்பட்டதாகும். சிலர் இவ்விரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என்கின்றனர். வேறு சிலரோ இயல்புரிமையுடன் தொடர்புபடுத்தப்படும் சில அம்சங்களை விலக்கிவைப்பதற்காக இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருள்களைக் குறிக்கவேண்டும் என்கின்றனர். இயல்புரிமை என்பது, அரசு அல்லது வேறு [[பன்னாட்டு அமைப்பு]]க்களின் அதிகாரத்தினால் இல்லாமலாக்க முடியாத தனியொருவருடைய உரிமை எனக் கருதப்படுகிறது. மனிதன் அல்லாத ஏனைய விலங்குகளுக்கும் இயல்புரிமை உண்டு என்னும் எண்ணம், 20 ஆம் நூற்றாண்டில், [[மெய்யியலாளர்]]கள், சட்ட அறிஞர்கள் போன்றோரிடையே பிரபலமானது.
 
[[பகுப்பு:மெய்யியல்]]
[[பகுப்பு:மனித உரிமைகள்]]
 
[[bg:ЕстественоЕстествени правоправа]]
[[da:Naturlige rettigheder]]
[[de:Unveräußerliches Gut]]
"https://ta.wikipedia.org/wiki/இயல்புரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது