இருகால் நகர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gl:Bípedismo; cosmetic changes
No edit summary
வரிசை 1:
'''இருகால் நகர்வு''' என்பது ஒருவகை [[நிலம்சார் இடப்பெயர்வு]] முறை ஆகும். இங்கே ஓர் [[உயிரினம்]] தனது [[பின்னுறுப்பு]]க்களைப் பயன்படுத்தி நகர்கின்றது. ஒருஓர் உயிரினம் அல்லது இயந்திரம் இரு [[கால்]]களால் நகரும் வழக்கத்தைக் கொண்டிருப்பின் அது ''இருகாலி'' எனப்படும். இருகால் நகர்வு [[நடத்தல்]], [[ஓடுதல்]], [[தாவுதல்]] என்பவற்றை உள்ளடக்குகிறது. ஒப்பீட்டளவில், தற்கால இனங்களில் மிகச்சிலவே வழக்கமாக இரு கால்இருகால் நகர்வைக் கைக்கொள்ளுகின்றன. பாலூட்டிகளில், இருகால் நகர்வுப் பழக்கம் நான்கு படிகளில் வளர்ச்சியடைந்துள்ளது.
 
[[திரியாசிக் காலம்|திரியாசிக்]] காலத்தில் [[ஆக்கோசோரஸ்|ஆக்கோசோரசின்]] சில குழுக்கள், இரு கால்இருகால் நகர்வு முறைக்கு வளர்ச்சியடைந்தன. அவற்றிலிருந்து வழி, வந்தவற்றுள் [[தொன்மா]]க்களின் எல்லாத் தொடக்க வடிவங்களும், பல பிந்திய வடிவங்களும் இருகால் பழக்கம் கொண்டவையாக அல்லது இருகாலில் மட்டுமே நடக்கக்கூடியவையாகக் காணப்பட்டன. [[பறவை]]கள் இருகாலில் மட்டுமே நடக்கக்கூடிய இத்தகைய குழு ஒன்றிலிருந்து வழிவந்தன ஆகும்.
 
தற்கால இனங்களில் பல, வழமைக்கு மாறான தேவைகள் ஏற்படும்போது குறுகிய நேரத்துக்காவது, இரு கால்களில் நகரக்கூடியவையாக உள்ளன. பல முதலை இனங்களும், ஆக்கோசோரிய வகை சாராத [[பல்லி]] வகைகளும், உயிர் தப்புவதற்காக ஓடுவது போன்ற அவசரமான நேரங்களில் இருகால்களில் நகர்கின்றன. [[பசிலிஸ்கு]] எனப்படும் பல்லிவகை நீரிலும்கூட இருகால்களில் நகரக்கூடியது. சில [[விலங்கு]]கள் பிற விலங்குகளுடன் [[சண்டை]]யிடும்போது இரு கால்களில் எழுந்து நிற்கின்றன. வேறு சில [[உணவு|உணவை]] எட்டுவதற்காக அல்லது சூழலைக் கவனிப்பதற்காக இரு கால்களில் நிற்கவல்லன. ஆனால் இரு கால்களில் நகர்வதில்லை.
 
[[பகுப்பு:விலங்கியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இருகால்_நகர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது