மகாராட்டிரா நவநிர்மாண் சேனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல் கட்சி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Beachelliots (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Maharashtra_Navnirman_Sena (revision: 336801425) using http://translate.google.com/toolkit with about 89% human translations.
(வேறுபாடு ஏதுமில்லை)

14:52, 10 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா மராத்தி: महाराष्ट्र नवनिर्माण सेना "மண்ணின் மைந்தர்கள்" என்ற கோட்பாட்டின்படி செயல்படும் மகாராஷ்டிராவைச் சார்ந்த ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். ராஜ் தாக்கரேவினால் 2006 மார்ச் 9ஆம் தேதி மும்பையில் தொடங்கப்பட்டது. உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தேர்தல் இட ஒதுக்கீடு போன்ற முக்கிய முடிவெடுக்கும் சமயங்களில் ஒதுக்கபட்டது போன்றவற்றால் சிவ சேனாவில் இருந்து விலகிய பின் அவர் புது கட்சி தொடங்கினார்.

Maharashtra Navnirman Sena
தலைவர்Raj Thackeray
தொடக்கம்9 March 2006
தலைமையகம்Mumbai
கொள்கைDevelopment of the state of Maharashtra, Marathi nationalism[மேற்கோள் தேவை],
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
இணையதளம்
http://www.manase.org
இந்தியா அரசியல்

தோற்றம்

சிவ சேனாவின் தலைவர் பால் தாக்கரேயின் மருமகன் ராஜ் தாக்கரேவினால் கட்சி தொடங்கப்பட்டது. 2006 ஜனவரியில் தனது மாமாவின் கட்சியிலிருந்து விலகிய ராஜ் தாக்கரே புதிய அரசியல் கட்சி துவக்கும் என்ணத்தை அறிவித்தார். சிவ சேனா "சாதாரண குமாஸ்தா"க்களால் நடத்தபடும் கட்சியாக ஆகிவிட்டதால் தனது பழைய பெருமையை இழந்து விட்டது. அதுவே கட்சியை விட்டு விலக காரணமாக அமைந்ததாக தெரிவித்தார். மேலும் மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளைப் பற்றிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை தேசிய அரசியலில் மையப்படுத்தும் தெளிவான நோக்கமும் திரு. ராஜ் தாக்கரேவுக்கு இருந்தது. இதற்கான திட்டங்களுக்கு மாநில இளைய சமுதாயத்தின் பெருவாரியான ஆதரவும் அனுதாபமும் கிடைக்கின்றது.

கட்சி தொடங்கும்போது ராஜ் தாக்கரே தனது மாமாவுடன் தனக்கு பகையுணர்வு இல்லையென்றும் அவர் "அன்றும், இன்றும், மற்றும் என்றும் தனது நம்பகமான ஆலோசகராக இருப்பார்" என்று தெரிவித்தார்.

சிவா சேனாவிலிருந்து பிரிந்த ஒரு கட்சியாக எம்என்எஸ் இருந்தாலும்,மராத்தி மற்றும் பூமிபுத்திர கொள்கையே அதன் அடிப்படையாக இருந்தது. சிவாஜி பார்க் கூட்டத்தில் கட்சியை அறிமுகப்படுத்தும்போது ஹிந்துத்வா[1] என்ன ஆகும் என்று அனைவரும் கவலையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் "மார்ச் 19 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மண்ணின் மைந்தர்கள் மற்றும் மராத்தி போன்றவற்றில் கட்சியின் நிலை மற்றும் மகாராஷ்ட்ராவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் கட்சி கொடியின் சிறப்பம்சங்களை விளக்குவேன்"[2]என்று கூறினார். எம்என்எஸ் விதான் சபாவில் 13 இடங்களை பெற்றது. ராஜின் பிறந்த நாள் மகாராஷ்டிராவில் "மண்ணின் மைந்தர்" தினமாக கொண்டாடப்படுகிறது. ராஜ் அதைப் பெருமையாக கருதுகிறார். ராஜ் தாக்கரே தன்னை பிராந்தியவாதியாக மட்டுமின்றி தேசியவாதியாகவும் கருதுகிறார். காங்கிரஸ் இரட்டை வேடம் அணிவதாக கூறுகிறார்.[3] மதசார்பின்மையை தனது அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக கட்சி அங்கீகரிக்கிறது.[4]

சர்ச்சைகள்

2008 மகாராஷ்டிராவில் வட மாநிலத்தவருக்கு எதிரான வன்முறை.

 
சிவாஜி பார்க், மும்பையில் அணிவகுப்பு. ராஜ் வட இந்தியர்களுக்கு எதிராக உரை.

2008 பிப்ரவரியில் எம்என்எஸ் கோட்டையான மும்பை,தாதரிலுள்ள, சிவாஜி பார்க்கில் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளர்கள் கூடியிருந்த கூட்டத்தில் அவர்களின் தலைவர் அபு அசிம் ஆஸ்மி ஒரு உணர்ச்சிகர உரையாற்றினார். அப்போது எம்என்எஸ் ஆதரவாளர்களுக்கும், சமாஜ்வாடி கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து 73 எம்என்எஸ் ஆதரவாளர்களையும், 19 சமாஜ்வாடி கட்சி தொண்டர்களையும் வன்முறையில் ஈடுபட்டதாக மும்பை போலீஸ் கைது செய்தனர்.[5]

2008 பிப்ரவரி 6ஆம் நாளன்று எம்என்எஸ்-இன் மராத்திய உரிமை குரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் என்சிபி கட்சியை சேர்ந்த சுமார் 200 தொண்டர்கள் விலகி மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவில் சேர்ந்தனர்.[6]

பீகார் மற்றும் உத்திரபிரதேசத்தின் மிக பிரபல பண்டிகையான சாத் [[]]பண்டிகையை பற்றி அவதூறாக பேசியதாக தாக்கரே மீது பட்னா சிவில் நீதி மன்றத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.[7] சாத் பூஜா[8]வை தான் எதிர்க்கவில்லை என்று கூறிய தாக்கரே, அப்பண்டிகையின் போது உத்திரபிரதேஷ் மற்றும் பீகாரை சேர்ந்த சிலர் காட்டும் கர்வத்தையும், "சாத் பூஜாவை அரசியலாக்குவதையும்"தான் எதிர்ப்பதாக கூறினார்.

2008 பிப்ரவரி 10, [9]ராஜ் தாக்கரே கைதாவார் என்ற வதந்தி பரவியதால் எம்என்எஸ் கட்சி தொண்டர்கள் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வட இந்திய விற்பனையாளர்கள், கடைக்காரர்கள் ஆகியோரைத் தாக்கியும் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்டதாக 26 எம்என்எஸ் தொண்டர்களை நாஷிக் போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து மும்பைக்கு பிழைப்பு தேடி வரும் கட்டுப்படுத்த இயலாத கூட்டத்தை பற்றிய ராஜ் தாக்கரேவின் 2008 பிப்ரவரி பேச்சு பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட சர்ச்சையாக மாறியது. மகாராஷ்டிராவின் பொருளாதாரம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. அதனால் உத்திரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த பிழைப்பு தேடும் மக்களை அதன் தலைநகர் மும்பை காந்தம் போல் இழுக்கிறது. உத்திரபிரதேசத்தின் முஸ்லிம்களுக்கான பிராந்திய கட்சியான சமாஜ்வாடி கட்சி தொண்டர்களுடன் எம்என்எஸ் கட்சியினர் தெருக்களில் மோதி வன்முறையில் ஈடுபட்டனர். தாக்கரே பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான உத்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அமிதாப் பச்சன் அமர் சிங்கினால் உத்திர பிரதேசத்திற்கும், பீகாருக்கும் வணிகத்தொடர்புகளை ஏற்படுத்துவதாக விமர்சித்தார். பச்சன் பாலிவுட் எனப்படும் மும்பை திரைப்படத் தொழில் மூலம் பேரும் புகழும் அடைந்தார். [10][11]

மகாராஷ்டிராவிலுள்ள வட இந்திய கட்டுமான தொழிலாளர்களை எம்என்எஸ் தாக்கியதால் இன்போசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 2008 செப்டம்பர் 8ஆம் நாளன்று அந்நிறுவனம் 3000 பணிஇடங்களை புனேவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றியது.[12] 2008 அக்டோபர் 15 அன்று, பொருளாதார மந்த நிலையினால் சிக்கன நடவடிக்கையாக வேலையிலிருந்து நீக்கிய பயிற்சி பணியாளர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது மீண்டும் வேலையில் அமர்த்தாவிடில் அதன் செயல்பாடுகளை முடக்கி விடுவதாக தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.[13]

2008 அக்டோபரில், மேற்கு மண்டலத்திற்காக அனைத்திந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மும்பையில் நடத்திய நுழைவு தேர்வுக்காக வந்த வட இந்திய மாணவர்களை எம்என்எஸ் தீவிர ஆதரவாளர்கள் தாக்கினார்கள்.[14] ஒரு பிஹாரி ரயிலின் மூன்றாம் வகுப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். ஆனால் என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஹிந்தி ஊடகம் மூலம் அவர் போராட்டத்தினால் உயிரிழந்ததாக வெற்றிகரமாக சித்தரித்தார்கள். [15] எம்என்எஸ், பீகாரிகள் மற்றும் வட இந்தியர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஜாம்ஷெட்பூரிலுள்ள டாட்டா மோட்டார்சில் வேலை செய்யும் மராத்தி அதிகாரி ஒருவரின் வீட்டினை பாரதிய போஜ்புரி சங்கம் தாக்கியது.[16] இவ்வளவு நடந்த பின்பும் எம்என்எஸ்சின் தலைவரைக் கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று குரல் எழுப்பப்பட்டு இந்திய பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 21ஆம் தேதி அதிகாலை ராஜ் தாக்கரே[17] கைது செய்யப்பட்டார். பகலில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, அன்று இரவு சிறையில் வைக்கப்பட்ட பின் மறுநாள் மீண்டும் விடுதலை செய்யப்பட்டார். [18] அவரது கைதினை தொடர்ந்து, எம்என்எஸ் தொண்டர்கள் மும்பையின் சில இடங்களிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் கோபத்தை வெளிபடுத்தினர்.[19] பாராட்டு, பயம், எம்என்எஸ் மீது தடை விதிக்க கோரிக்கை போன்றவை அந்த கைதின் மூலம் நிகழ்ந்தன .[20][21][22] சிவ சேனாவின் மூத்த தலைவரான மனோகர் ஜோஷி, ரயில்வே போர்டு தேர்வில் மராத்தியர் அல்லாத மாணவர்களுக்கு எதிராக எம்என்எஸ் நடத்திய போராட்டத்திற்குக் கிட்டத்தட்ட ஆதரவு அளிக்கும் நிலையில் இருப்பதாகக் கூறினாலும், சிவ சேனா மௌனத்தைக் கடைபிடித்தது.

சிவ சேனாவுடன் மோதல்

2006ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா மற்றும் சிவ சேனா ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டது. மும்பை எஸ்ஐஈஎஸ் கல்லூரிக்கு அருகில் சிவ சேனா பெருந்தலைவர் பால் தாக்கரேயின் படங்களை கொண்ட சுவரொட்டிகளை எம்என்எஸ் தொண்டர்கள் கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக சிவ சேனா தொண்டர்கள் தாதரிலுள்ள சேனா பவன் அருகில் ராஜ் தாககரேயின் படம் உள்ள விளம்பர பலகையைக் கீழே தள்ளினர். இந்த செய்தி பரவ துவங்கியதும் இரு தரப்பினரும் சேனா பவன் அருகில் கூடி ஒருவர் மீது ஒருவர் கற்களை எறிய துவங்கினர். இச்சம்பவத்தில் ஒரு போலீஸ்காரரும், இரு கட்சிகளை சேர்ந்த ஆதரவாளர்களும் காயமடைந்தனர். இயல்பு நிலையைக் கொண்டு வர, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை கூட்டத்தின் மீது வீசினர். போலீஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேயின் வருகையினால் இயல்பு நிலை மீண்டது. சேனா தொண்டர்களை வீட்டிற்குத் திரும்புமாறு உத்தவ் வேண்டுகோள் விடுத்தார்.[23] அவர் கூறினார்:

"போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுக்கும். எம்என்எஸ் கட்சியினர் பலர் நம்முடன் இணைவதால் இப்படி நடக்கிறது. இந்த கட்சி தாவல் தொடங்கியதால் அவர்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்".[23]

சிவ சேனாவின் வட்ட தலைவர் மிலிந்த் வைத்யா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட எம்என்எஸ் தொண்டர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் தாம் புகார் அளித்திருப்பதாகக் கூறினார். எம்என்எஸ் பொது செயலர் பிரவின் தரேகர், எஸ்ஐஈஎஸ் காலேஜில் நடைபெற்ற உள் தேர்தலை காரணமாக கூறினார். கல்லூரிகளின் மீது சேனாவிற்கு உள்ள பிடிப்பு குறைந்து வருவதைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதால் இத்தகைய செயலுக்கு வண்ணம் பூசுகிறார்கள் என்றும், அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு எந்த மதிப்பும் இல்லையென்றும் கூறினார். பால் தாக்கரே மீது தானும் தந்து கட்சி உறுப்பினர்களும் மரியாதை கொண்டுள்ளதாகவும் எம்என்எஸ் அவர் படத்தை ஒரு போதும் அழிக்காது என்றும் ராஜ் தாக்கரே உறுதியுடன் கூறினார்.[24] உத்தர் பாரதியர் களை பற்றி பால் தாக்கரே கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள், அவரை பாராளுமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பினர். பால் தாக்கரேவை பாராளுமன்ற குழு முன் ஆஜராக வறபுறுத்தினால் உபி மற்றும் பீகாரை சேர்ந்த எந்த ஒரு அரசியல்வாதியும் மும்பைக்குள் வருவதைத் தான் அனுமதிக்க முடியாது என்று ராஜ் தாக்கரே கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த பால் தனது மருமகன் ராஜ் 'முதுகில் குத்துபவர்' என்றும் 'தேவை இல்லை, மிக்க நன்றி' என்றும் எம்என்எஸ் தலைவருக்கு பதில் கொடுத்தார்.[25]

ஓஷிவாராவில் உள்ள ஆனந்த் நகரில் விடுமுறை பருவத்தில் நவராத்ரி சுவரொட்டிகள் வெளியிடுவது தொடர்பாக எழுந்த பிரச்னையில் சிவ சேனா(எஸ்எஸ்) மற்றும் எம்என்எஸ் தொண்டர்கள் மோதிக்கொண்டனர். எஸ்எஸ் உறுப்பினர் ராஜுல் படேல் கூறினார் "எம்என்எஸ் தொண்டர்கள் மிக பெரிய விளம்பர பலகைகளை வைத்து விட்டு பின் அவற்றை அகற்ற மக்களிடம் பணம் கேட்கிறார்கள். மக்கள் எங்களிடம் புகார் கூறியதால் நாங்கள் ஆட்சேபித்தோம். இது கைகலப்பில் முடிந்தது". எம்என்எஸ் விபாக் பிரமுக் (பிரிவுத் தலைவர்) மனிஷ் தூரி கூறினார்: "நாங்கள் பிரபலமாக இருப்பதால் சிவ சேனையினர் பொறாமை கொண்டுள்ளனர். ஞாயிறு மதியம், சிவ சேனைக் கும்பல் ஒன்று இந்தப் பகுதிக்கு வந்து நாங்கள் வைத்த போஸ்டர்களை கீழே தள்ள ஆரம்பித்தது. நாங்கள் அதை எதிர்த்தோம். துரதிர்ஷ்டவசமாக ஒரு எம்என்எஸ் தொண்டர் படுகாயம் அடைந்தார்".[26]

அபு ஆஸ்மிக்கு பகிரங்க கண்டனம்

2009 நவம்பர் 9ஆம் நாளன்று சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அபு ஆஸ்மி மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழியான ஹிந்தியில் உறுதிமொழி எடுக்க முயன்ற போது எம்என்எஸ் எம்எல்ஏ பகிரங்க கண்டனம் செய்து அவரை தடுத்தார். இந்த நிகழ்ச்சியின் விளைவாக சொற்போரில் ஈடுபட்ட 4 எம்என்எஸ் எம்எல்ஏக்ளை மகாராஷ்டிர சட்டமன்ற சபாநாயகர் அவையிலிருந்து 4 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக விலக்கி வைத்தார். மேலும் அவர்கள் மும்பை, நாக்புர் ஆகிய இருநகரங்களிலும் சட்டமன்றக்கூட்டம் நடக்கும் போதெல்லாம் நுழையவும் கூடாதென்று தடைசெய்யப்பட்டனர்.[27] தடை விதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ராம் கதம், ரமேஷ் வாஞ்சலே, ஷிஷிர் ஷிண்டே மற்றும் வசந்த் கீதே ஆவர்.[28][29]

சக்தி வாய்ந்த வளர்ச்சி

 
2006 ஜூலை 11 நடைபெற்ற மும்பை ரயில் குண்டுவெடிப்பின் நினைவாக மகாராஷ்டிர நவநிர்மான் சேனா போரிவாலி ரயில் நிலையத்திற்கு வெளியே எழுப்பிய நினைவு சின்னம்.

அக்டோபர் 2008இல் ஜெட் ஏர்வேஸ் கிட்டத்தட்ட 1,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த நடந்த கிளர்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயிற்சி பணியாளர்களுக்கு ஆதரவான நிலையில் இருந்தன. முதலில் எம்என்எஸ், தொடர்ந்து எஸ்எஸ் இவர்களை பின்பற்றி தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியோர் இந்த நடவடிக்கையில் களமிறங்கின. பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆதரவாக கொல்கத்தா பணியாளர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஐ(எம்) ஆகியவையும் அணி திரண்டன.

எஸ்எஸ் தொழிலாளர் பிரிவான பாரதிய காம்கர் சேனா விமான சேவை தொழிற்சங்கங்களைத் தனது பிடியில் வைத்திருந்தது. இருந்தாலும் ஆட்குறைப்பு செய்யப்பட்ட மறு நாள், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் எம்என்எஸ் அலுவலகம் நோக்கிகே கூட்டமாகச் சென்றனர். அதன் பின், 300க்கும் மேற்பட்ட அந்த முன்னாள் பணியாளர்களை, மரோலில் உள்ள ஜெட் அலுவலகத்திற்கு எம்என்எஸ் அழைத்துச் சென்றது. எம்என்எஸ் பொது செயலர் நிதின் சர்தேசாய் கூறினார் "விமான ஓட்டிகளின் குழுவும், எம்என்எஸ் தொண்டர்களும் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது நாங்கள் ஜெட் அதிகாரிகளை சந்தித்தோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஜெட் சேர்மன் நரேஷ் கோயல் ராஜ் தாக்கரேவுக்கு போன் செய்தார். போராட்டத்தை கை விடுமாறு எங்களை கேட்டு கொண்ட அவர், ஓரிரு நாட்களில் ராஜ் சாகேபை சந்திப்பதாக கூறினார். நீக்கிய பணியாளர்களை திரும்ப எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமே எங்களது ஒரே கோரிக்கை

எம்என்எஸ் நடத்திய அணிவகுப்பினாலும் அதன் ஆதரவினாலும் இரண்டு நாட்களுக்குப்பின் பணியாளர்கள் மீண்டும் வேளையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். எஸ்எஸ்க்கு எதிராக தனி மனிதனாக ராஜ் சாதித்ததன் மூலம் எஸ்எஸ்சின் எதையும் எதிர்க்கும் தெரு அரசியல் போர்வையை அபகரித்து விட்டதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டின. விமான சேவை, ஹோட்டல் மற்றும் கேளிக்கைத் துறைகளில் எஸ்எஸ்க்கு இருந்த பிடிமானத்தை அது தளர்த்த முயன்று கொண்டிருந்த எம்என்எஸ்ன் புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கமான மகாராஷ்டிர நவநிர்மான் காம்கர் சேனாவுக்கு இது மிக பெரிய ஊக்க சக்தியாக அமைந்தது. [30]

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி

2006இல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல், 4 முனிசிபல் மாநகராட்சிகளில் எம்என்எஸ் பிரதிநிதிகள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்கள்.

முனிசிபல் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
புனே நகராட்சிக் கழகம் [8]()
நாஷிக் நகராட்சிக் கழகம் 12
ப்ரிஹன் மும்பை நகராட்சிக் கழகம் (பிஎம்சி) 7
தானே நகராட்சிக் கழகம் 3
'' ஆதாரம் :'' [[]] ரெடிப்[[]] [31]

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் எம்என்எஸ் 13 சட்டசபை தொகுதிகளைக் கைப்பற்றியது. இவற்றுள் மும்பையில் 6 இடங்கள், தானேயில் 2, நாஷிக்கில் 3, புனேயில் 1 மற்றும் கன்னட்டில் (அவுரங்கபாத்) 1 ஆகியவையும் அடங்கும். மேலும் 24 இடங்களில் அது 2வது இடத்தை பிடித்தது.

அரசியல் விமர்சனம்

மும்பைக்கு ஆர்ஆர்பி (ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு) தேர்வு எழுத வந்த வட இந்தியர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, பல அரசியல்வாதிகள், குறிப்பாக ஆளும் ஐக்கிய முற்போக்கு அணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ராஜ் தாக்கரேவையும் எம்என்எஸ்யும் மிக கடுமையாக விமர்சித்தார்கள்.

மூன்று யுபிஏ அமைச்சர்கள், கட்சியை தடை செய்வது உள்ளிட்ட மிக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரினார்கள். ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் எம்என்எஸ் மீது தடை விதிக்க கோரி அதன் தலைவர் 'மன நிலை சரியில்லாதவர்'என்று கூறினார். உருக்கு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இதை பற்றி அடுத்த காபினெட் கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், இவ்வளவு வன்முறை நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடந்த பின்பும் எம்என்எஸ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வினவினார். "நான் இந்த நிகழ்ச்சியை கடுமையாக கண்டிக்கிறேன். அந்த கட்சியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்... எம்என்எஸ் தடை செய்யப்படவேண்டும். தாக்கரே குடும்பம் மகாராஷ்டிராவின் ஒரு நீண்டகாலப் பிரச்சனையாக மாறிவிட்டது. குறிப்பாக, ராஜ் தாக்கரே ஒரு மன நோயாளியாகிவிட்டார்" என்று அவர் கூறினார். உணவு பதனிடும் தொழிற்சாலை[[]] அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சுபோத் காந்த் சஹாய் வன்முறையில் ஈடுபட்டவர்களை குற்றவாளிகளாக கருதுமாறு மகாராஷ்டிர காங்கிரஸ்-என்சிபி கூட்டணி அரசாங்கத்திடம் கோரினார். "மாநிலத்தில் நடைபெற்றுகொண்டிருக்கும் குண்டர்களின் வன்முறை நடவடிக்கைகளைப் பற்றி மகாராஷ்டிர முதல் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்குடன் பேசினேன்" இது நாள் வரை அரசாங்கத்தின் நடவடிக்கையை பார்க்கும்போது அவர்கள் மீது கருணை காட்டுவதாக தெரிகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துவிட்டதால் உடனே நடவடிக்கை எடுக்கபட வேண்டும்" என்றும் , "அவர்கள் தொழிலாளர்கள் அல்ல. அவர்கள் கொள்ளைக்காரர்கள். எம்என்எஸ், பஜ்ரங் தள், விஹெச்பி மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் தடை செய்யப்படவேண்டும்"[32]என்றும் கூறினார்.

தேசிய பாராளுமன்றத்தின் அடுத்த வேலை நாளில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடந்தன. எண்ணற்ற பாராளுமன்ற அங்கத்தினர்கள் இத்தகைய தாக்குதல்களை கண்டித்தார்கள். அவர்கள் மறைமுகமாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவையும் விமர்சித்தார்கள். அவர்களுடைய மாநிலங்களில் கூட ஆள் தேர்வு நடைபெற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் பீகாரைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவது எம்என்எஸ்சின் நடவடிக்கையின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக இருந்ததது. இந்தப் பிரச்சனையைப் பற்றி முதலில் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேவேந்திர பிரசாத் யாதவ், மாநிலத்தில் 355 பிரிவின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரினார். இத்தகைய தாக்குதல்களுக்கு பின்பும், மகாராஷ்டிர முதல் அமைச்சர் மௌனம் கடை பிடிப்பதை சுட்டிக்காட்டினார். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் இத்தகைய தாக்குதல்கள் ஊறு விளைவிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். மற்ற எம்பிக்களும் இத்தகைய தாக்குதல்களினால் 355 பிரிவை அமல்படுத்த கோரினர். பீகார் மற்றும் உத்திர பிரதேச மக்கள் நாட்டின் பிற இடங்களுக்கு செல்ல அனுமதி வாங்க வேண்டும் போல் நிலைமை உள்ளதா என்று பிஜேபி உறுப்பினர் ஷாநவாஸ் ஹுசைன் வினவினார். இத்தகைய செயல்கள் நாட்டின் ஒருமைபாட்டை குலைக்க முயல்வதோடு நாட்டின் மற்ற பகுதிகளுக்கு தவறான வழியை காட்டுகிறது என்று சிபிஐ(எம்) உறுப்பினர் முஹமது சலீம் கூறினார். கதையின் மறு பக்கத்தை காட்ட விரும்பிய சிவா சேனாவின் ஆனந்த கீதே, மகாராஷ்டிராவில் 42 லட்சம் படித்த வேலையில்லாத இளைஞர்கள் உள்ளனர் என்று சுட்டிகாட்டினார்[33]. நாட்டின் அரசியலமைப்பு மீது ஏற்பட்ட வெளிப்படையான தாக்குதல் என்று சிபிஐ(எம்) கடுமையாக கண்டித்து கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை உடனடியாக கைது செய்ய கோரியது. இத்தகைய 'பிரிவினை சக்திகள்' மீது கருணை காட்டுவதால் மிக பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது. அரசியலமைப்பைப் பாதுகாத்து குற்றம் புரிந்தவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையுள்ள மகாராஷ்டிரா அரசினை இத்தகைய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் இழிவாகச் சித்தரிக்கிறது என்று சிபிஐ (எம்)யின் செயற்குழு கூறியது. "இத்தகைய நிகழ்ச்சியை தடுக்க தவறியதும், அதற்குக் காரணமான தலைவருக்கு கருணை காட்டப்படுவதும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் அரசியல் மோசமான திவாலாகும் நிலைமைக்கு சென்றுள்ளதை காட்டுகிறது" இத்தகைய தாக்குதல்களைப் பொறுத்துகொள்ளக் கூடாது என்றும் ராஜ் தாக்கரேயும் அவரது ஆதரவாளர்களும் "உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்"[34] என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கூறியது. மகாராஷ்டிர முதல் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் தாக்குதல்களைத் தடுக்க தவறியதற்கு தனது அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்றும், நடந்த நிகழ்ச்சிகளின் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். மேலும் மராத்திய பத்திரிகைகளுக்கு ஏன் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் தரப்படுவதில்லை என்றும் விசாரிக்க உத்தரவிட்டார். அவர் கூறினார்:'நடந்தவை நல்லவை அல்ல. சட்டத்தில் உள்ள ஓட்டைகளினால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கு உள்துறை அமைச்சகம் மட்டுமே பொறுப்பென்று சொல்ல முடியாது. இது மொத்த அரசாங்கத்தின் பொறுப்பாகும். இத்தகைய நிகழ்ச்சிகள் மாநிலத்தின் மதிப்பை பாதிக்கின்றன.டிஜிபியை கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன்." மகாராஷ்டிர மாநில மாணவர்களை ஒதுக்கும் வகையில் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதில்லை என்ற ராஜ் தாக்கரேயின் குற்றச்சாட்டுக்கு அவர், "மராத்தி தினசரிகளில் தேர்வுக்கான விளம்பரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை என்பதற்கும், எத்தனை மராத்தி மாணவர்கள் தேர்வுக்கு அழைக்கபட்டிருந்தனர் என்ற விவரம் குறித்தும் விசாரணை நடைபெறும்" என்று பதில் கூறினார் மேலும் இத்தகைய வன்முறை சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்றும் அவர் உறுதி அளித்தார். 2009 ஜனவரியில் பிரணவ பிரகாஷ் என்ற ஓவிய கலைஞன் டில்லியில் "சால் ஹத் பி பிஹாரி" என்ற தலைப்பில் ஓர் ஓவிய கண்காட்சி நடத்தினான். அந்நிய நாட்டினரின் மீது வெறுப்பு என்ற தலைப்பின் கீழ் மகாராஷ்டிராவில் 2008ஆம் ஆண்டில் வட இந்தியர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள் நவீனமாக சித்தரிக்கபட்டிருந்தன. [35]

அரசியல் ஆதரவு

மும்பையின் உமர்காதி மற்றும் டோங்ரிபகுதிகளைச் சேர்ந்த மராத்தி பேசும் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஆதரவு எம்என்எஸ்க்கு கிடைத்தது.[36] எம்என்எஸ்இன் "மண்ணின் மைந்தர்" கொள்கைக்கு மராத்தி சினிமாவைச் சேர்ந்த நடிகர்களான நானா படேகர், அசோக் சாரப், பிரஷாந்த் தாம்லே, குல்தீப் பவர் மற்றும் மோகன் ஜோஷி போன்றோர் ஆதரவு அளித்தனர்.[37] மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிரான மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவின் போராட்டதிற்கு ஜார்கண்ட் திசொம் கட்சி ஆதரவு கரம் நீட்டியது.[38]

பிற செயல்பாடுகள்

 
எம்என்எஸ் ஆம்புலன்சு சர்வீஸ்களை நடத்துகிறது.

எம்என்எஸ் மராத்தி இலக்கியத்தை ஊக்குவிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றது. [39] தான் தோற்றுவித்த நிறுவனமான நவநிர்மான் அகாடமி ஆப் ரீடைல் இண்டஸ்ட்ரீஸ் மூலம் இளைஞர்கள் சில்லறை நிறுவனங்களில் பணி புரிய உதவிடும் பயிற்சி முகாம்களை எம்என்எஸ் நடத்துகிறது. மகாராஷ்டிர நவநிர்மான் வித்யார்த்தி சேனா என்ற மாணவர் பிரிவு கல்லூரி செல்லும் எராளமான இளைஞர்களை கொண்ட ஒரு வளர்ந்து வரும் அமைப்பாகும். இது பெண்கள், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றுக்கு தனி பிரிவுகளை கொண்ட ஒரே மாணவர் பிரிவாகும். இதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் சட்ட நிபுணர் ராஜன் ஷிரோத்காரின் புதல்வன் ஆதித்ய ஷிரோத்கர் ஆவார்.[40] மேலும் எம்என்எஸ் ரத்த தான முகாம்களையும் நடத்துகிறது.[41]

மேலும் பார்க்க

குறிப்புதவிகள்

  1. பக்கம் 1048 இந்தியன் பொலிடிகல் பார்ட்டீஸ் ஆனுவல், 2006 மகேந்திர கவுர்.
  2. "ராஜ் தாக்கரே புதிய கட்சி துவங்கினார்" பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா - புதுப்பிக்கப்பட்டது : வியாழன், மார்ச் 1914 மணி இந்திய நேரப்படி
  3. பக்கம் 1048 இந்தியன் பொலிடிகல் பார்ட்டீஸ் ஆனுவல், 2006 மகேந்திர கவுர்.
  4. "Objectives and Policies". Manase.org. {{cite web}}: Unknown parameter |retrieved= ignored (|access-date= suggested) (help)
  5. எம்என்எஸ் தலைவர் ஷிஷிர் ஷிண்டே கைது : செய்தி
  6. எம்என்எஸ்மீது வெறுப்படைந்த 200 உறுப்பினர்கள் சிவ சேனாவில் சேர்ந்தனர்.
  7. Petition against Raj Thackeray in Patna court
  8. "http://news.indiainfo.com/2008/02/05/0802050625_mns_nindian.html We are not against North Indians: Parkar
  9. மும்பையில் பிற மாநிலத்தவர் குடியேறுவதற்கு எதிராக வன்முறை பரவுகிறது
  10. ஜெயா ராஜை விமர்சிக்கிறார். எம்என்எஸ், எஸ்பி ஆதரவாளர்கள் மும்பையில் கைகலப்பு.
  11. அமிதாப் உபிக்கு காட்டும் கரிசனத்திற்கு ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு.
  12. இன்பி சென்னைக்கு மாற்ற எடுத்த முடிவால் புனே 3000 வேலைகளை இழந்தது.
  13. ராஜ் தாக்கரே ஜெட் ஏர்வேஸ் மீது மிரட்டல். வெளியேற்றிய பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரிக்கை.
  14. மும்பையில் வட இந்தியர்கள் மீது தாக்குதல். ராஹி கைக்வாத்
  15. http://www.expressindia.com/latest-news/MNS-attack--Bihari-student-dies--Nitish-announces-ex-gratia/376143/
  16. http://timesofindia.indiatimes.com/India/MNS_row_Tata_employees_house_ransacked_in_Jamshedpur/articleshow/3625043.cms
  17. http://www.hindu.com/thehindu/holnus/001200810211121.htm
  18. http://specials.rediff.com/news/2008/oct/21slide1.htm
  19. http://economictimes.indiatimes.com/PoliticsNation/MNS_vandalises_Maharashtra/articleshow/3625879.cms
  20. http://www.expressindia.com/latest-news/maya-demands-ban-on-mns/376398/
  21. http://economictimes.indiatimes.com/News/PoliticsNation/Lalu_censures_Cong_CM_while_lashing_at_MNS_hooligans/articleshow/3621434.cms
  22. http://economictimes.indiatimes.com/News/PoliticsNation/Delhi_cheers_Thackeray_arrest_but_fears_backlash/articleshow/3624255.cms
  23. 23.0 23.1 ""Shiv Sena workers, Raj supporters clash"". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2006-10-17.
  24. ""Sena vs new Sena, 30 injured"". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2006-10-18.
  25. http://timesofindia.indiatimes.com/Mumbai/Dont_shed_croc_tears_Thackeray_tells_Raj/articleshow/3551478.cms
  26. http://timesofindia.indiatimes.com/Mumbai/MNS_Shiv_Sena_men_clash_over_Navratri_hoardings_/articleshow/3588000.cms
  27. "Azmi attacked over Hindi oath, four MNS members suspended". The Hindustan Times. November 9, 2009. http://www.hindustantimes.com/News-Feed/india/Azmi-attacked-over-Hindi-oath-four-MNS-members-suspended/Article1-474547.aspx. பார்த்த நாள்: 2009-11-09. 
  28. "Four MNS legislators suspended for attack on Azmi". Thaindian.com. November 9, 2009. http://www.thaindian.com/newsportal/politics/four-mns-legislators-suspended-for-attack-on-azmi_100272235.html. பார்த்த நாள்: 2009-11-09. 
  29. "MNS MLAs attack Azmi for taking oath in Hindi; suspended". Zee News. November 9, 2009. http://www.zeenews.com/news577371.html. பார்த்த நாள்: 2009-11-09. 
  30. http://www.telegraphindia.com/1081017/jsp/nation/story_9979112.jsp
  31. "Sena's hat-trick in BMC; Congress suffers setback". Rediff. February 2, 2007. http://www.rediff.com/news/2007/feb/02poll.htm. பார்த்த நாள்: 2008-10-26. 
  32. http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/DDEA7BBDF2766C6C652574E7004F4B42?OpenDocument
  33. http://www.khabrein.info/index.php?option=com_content&task=view&id=17885&Itemid=88
  34. http://www.hindu.com/thehindu/holnus/000200810202041.htm
  35. http://epaper.mailtoday.in/Details.aspx?boxid=2240375&id=18821&issuedate=3012009
  36. "Raj Thackeray finds support in Mumbai's Muslims". Indian Express. November 18, 2008. http://www.indianexpress.com/news/raj-thackeray-finds-support-in-mumbais-muslims/387325/. பார்த்த நாள்: 2008-12-22. 
  37. "Marathi actors back Raj". Deccan Herald. March 4, 2008. http://www.deccanherald.com/CONTENT/Mar42008/national2008030355427.asp. பார்த்த நாள்: 2008-12-22. 
  38. "JDP supports Raj Thackeray". The Hindu. February 6, 2008. http://www.hindu.com/thehindu/holnus/002200802061762.htm. பார்த்த நாள்: 2008-12-07. 
  39. "Tendulkar dons poet's hat". Rediff. October 30, 2007. http://www.rediff.com/cricket/2007/oct/30sachin.htm. பார்த்த நாள்: 2008-12-22. 
  40. "Politicians forge ties with youth". The Economic Times. NASSCOM. September 13, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-22.
  41. "MNS supporters celebrate Raj Thackeray's birthday". DNA India. June 14, 2008. http://www.dnaindia.com/report.asp?newsid=1171115. பார்த்த நாள்: 2008-12-22. 

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Indian political parties