நா. க. பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''என். கே. பத்மநாதன்''' (1931 - 15 ஜூலை 2003, [[அளவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]) ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக [[தமிழீழம்|தமிழீழத்தின்ஈழத்தின்]] [[நாதசுவரம்|நாதசுர]] இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர்.
[[படிமம்:NKPathmanathan.jpg|right|frame|அளவெட்டி என். கே. பத்மநாதன்]]
==வாழ்க்கைக் குறிப்பு==
பத்மநாதனின் தந்தையார் கந்தசாமி அக்காலத்தில் புகழ் பெற்ற [[தவில்]] வித்துவான். அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலையில் கல்வி கற்ற அதே வேளையில் தனது ஏழாவது வயதிலேயே தனது தந்தையைக் குருவாக ஏற்று இசைப் பயிற்சியில் ஈடுபட்டார்.
==இசைப் பயிற்சி==
 
இவர் முதலில் இவரது தகப்பனார் தொடக்கம் அக்காலத்தில் பிரபல தவில் வித்துவானாக விளங்கிய [[வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை]], [[முல்லைவாசல் முத்துவேற் பிள்ளை]] முதலானோருக்கும், ஈழத்தில் [[எஸ். எஸ். அப்புலிங்கம் பிள்ளை]], [[பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை]] முதலான வித்துவான்களுக்கும் [[தாளம்|தாளக்]] காரனாக இருந்து தமது லயவளத்தையும் இசை அறிவையும் பெருக்கிக் கொண்டார்.
 
==நாதசுரப் பயிற்சி==
தமது தகப்பனாரிடம் 14 வயது வரை நாதஸ்வரம் பயின்ற பின்னர் நதஸ்வர வித்துவான் பி. எஸ். ஆறுமுகம் பிள்ளையின் தமையனாரான பி. எஸ். கந்தசுவாமுப் பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார். தொடர்ந்து [[தமிழ் நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த நாதஸ்வர மேதைகளான சீர்காழி பி. எம். திருநாவுக்கரசு பிள்ளையிடமும் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடமும் நாதஸ்வரக் கலையின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
 
==விருதுகள்==
* 1964 இல் பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான [[சேர் கந்தையா வைத்தியநாதன்]] அவர்களால் நாதஸ்வரக் கலாநிதி பட்டம் சூட்டப்பட்டார்.
* 1979 இல் மதுரையில் நாதஸ்வர மேதை பொன்னுச்சாமிப் பிள்ளை அவர்களது நூற்றாண்டு விழாவில் இவரது நாதஸ்வர இசைக் கச்சேரியில் [[எம். பி. எம். சேதுராமன்]] அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.
* 1982 இல் கலாசூரி விருது இலங்கையின் அன்றைய ஜனாதிபதி [[ஜே. ஆர். ஜெயவர்த்தன]] அவர்களால் வழங்கப்பட்டது.
* 1999 இல் வட-கிழக்கு மாகாண ஆளுனரின் விருது வழங்கப்பட்டது.
* 2003 இல் இவரது மறைவின் பின்பு [[யாழ் பல்கலைக்கழகம்]] கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
 
==வெளி இணைப்புகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/நா._க._பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது