[[இயற்பியல்|இயற்பியலில்]] (பௌதீகவியலில்)]] ஒரு பொருளின் '''அடர்த்தி''' (''density'') என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட ''பரும'' அளவில் (''கன'' அளவில்) எவ்வளவு ''நிறை'' அல்லது [[திணிவு]] கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள [[தங்கம்]] 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட [[வெள்ளி (மாழை)|வெள்ளி]] 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.