அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
அருங்காட்சியகங்களில் பல வகைகள் உள்ளன. பல முக்கியமான நகரங்களில், [[நுண்கலை]]கள், [[பயன்படு கலை]]கள், [[கைப்பணி]], [[தொல்லியல்]], [[மானிடவியல்]], [[இனவியல்]], [[வரலாறு]], [[பண்பாட்டு வரலாறு]], [[படைத்துறை வரலாறு]], [[அறிவியல்]], [[தொழில்நுட்பம்]], [[இயற்கை வரலாறு]], [[நாணயவியல்]], [[தாவரவியல்]], [[விலங்கியல்]], [[அஞ்சற்பொருள் சேகரிப்பு]] போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண முடியும். இந்த வகைகளுக்கு உள்ளேயே பல சிறப்புப் பிரிவுகளுக்கும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக, நவீன ஓவியங்கள், உள்ளூர் வரலாறு, வானூர்திப் பயண வரலாறு, போன்றவற்றுக்கான அருங்காட்சியகங்களைக் குறிப்பிடலாம்.
 
===தொல்லியல் அருங்காட்சியகம்அருங்காட்சியகங்கள்===
தொல்லியல் அருங்காட்சியகங்கள், தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைக்கும் அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. தொல்லியல் அருங்காட்சியகங்களிற் பல [[திறந்தவெளி அருங்காட்சியகம்|திறந்தவெளி அருங்காட்சியகங்களாக]] உள்ளன. திறந்தவெளி அருங்காட்சியகங்கள் பொதுவாகத் தொன்மையான கட்டிடங்கள்; சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகளைக் காட்டும் நாட்டுப்புற வாழ்விடக் காட்சிகள்; தொழில்நுட்ப வரலாறு, நாட்டுப்புற மக்களின் கலை, வரலாறு போன்றவற்றைக் காட்டும் விடயங்கள் போன்றவற்றைப் பற்றியனவாக இருக்கின்றன. <ref>பவுன்துரை, இராசு., (2001), ''அருங்காட்சியகவியல்'', மெய்யப்பன் தமிழாய்வகம், சென்னை.</ref>. பிற தொல்லியல் அருங்காட்சியகங்கள் தொல்லியல் ஆய்வுக் களங்களில் எடுக்கப்பட்ட பொருட்களைச் சேகரித்துப் பாதுகாப்பான முறையில் கட்டிடங்களுக்குள் காட்சிக்கு வைக்கின்றன.
 
===கலை அருங்காட்சியகங்கள்===
[[கலை அருங்காட்சியகம்|கலை அருங்காட்சியகங்களைக்]] ''கலைக் கூடங்கள்'' எனவும் அழைப்பதுண்டு. இவை கலை தொடர்பான பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. இவை [[காட்சிக்கலை]]கள் சார்ந்த, [[ஓவியம்|ஓவியங்கள்]], வரைபடங்கள், [[சிற்பம்|சிற்பங்கள்]] போன்றவற்றை உள்ளடக்குகின்றன. இவ்வகை அருங்காட்சியகங்களில், வெண்களிப்பாண்டங்கள், [[உலோகவேலை]]ப் பொருட்கள், தளவாடங்கள் போன்ற பயன்படு கலைப் பொருட்களும் இடம்பெறுவதுண்டு. [[நிகழ்படக்கலை]]ப் படங்கள் பொதுவாகத் திரையிடப்படுகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது