மெட்ரோனிடசோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Manjuudupa (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Metronidazole (revision: 347279507) using http://translate.google.com/toolkit with about 100% human translations.
(வேறுபாடு ஏதுமில்லை)

12:10, 22 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

மெட்ரானைடஸால் (ஐஎன்என்) உச்சரிப்பு /mɛtrəˈnaɪdəzoʊl/ என்பது நைட்ரோமைடஸால் நுண்ணுயிர்க் கொல்லி மருந்து என்பதோடு சந்தேகத்திற்குரிய நுண்ணுயிரிகளால், குறிப்பாக அனேரோபிக் பாக்டீரியா மற்றும் புரோட்டஸோ ஆகியவற்றால் ஏற்படும் தொற்றுக்களுக்கான சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. மெட்ரானைடஸால் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, அமீபாக் கொல்லி மற்றும் எதிர் ஒரணு மருந்துமாகும்.[1] இது ஃபைஸர் நிறுவனத்தால் ஃபிளேஜில் என்ற வணிகப்பெயரின் கீழ் அமெரிக்காவிலும், இதே ஃபிளேஜில் என்ற பெயரில் சனோஃபி-அவெண்டிஸாலும், பல்வேறு பொதுவியல்புள்ள தயாரிப்பாளர்களாலும் உலகம் முழுவதிலும் சந்தையிடப்படுகிறது.

மெட்ரோனிடசோல்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-(2- methyl- 5-nitro- 1H- imidazol- 1-yl) ethanol
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை B(US) B2 (Au)
சட்டத் தகுதிநிலை Prescription Only (S4) (AU) POM (UK) ?-only (அமெரிக்கா)
வழிகள் oral, topical, rectal, IV, vaginal
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு 100% (oral)
59–94% (rectal)
வளர்சிதைமாற்றம் Hepatic
அரைவாழ்வுக்காலம் 6–7 hours
கழிவகற்றல் Renal (60-80%), biliary (6–15%)
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 443-48-1
ATC குறியீடு A01AB17 , D06BX01, G01AF01, J01XD01, P01AB01, QP51AA01
பப்கெம் CID 4173
DrugBank APRD00631
ChemSpider 4029
வேதியியல் தரவு
வாய்பாடு C6

H9Br{{{Br}}}N3O3 

மூலக்கூற்று நிறை 171.15 g/mol
இயற்பியல் தரவு
உருகு நிலை 159–163 °C (318–325 °F)

மெட்ரானைடஸால் தோல் சிவந்துபோதல் (ரோஸக்ஸ் மற்றும் மெட்ரோஜெல் கால்டெர்மா நிறுவனத்தைச் சேர்ந்தது) மற்றும் பூஞ்சனம் கட்டிகள் (அனாபேக்ட் , கேம்ப்ரிட்ஜ் ஹெல்த்கேர் சப்ளைஸ்) போன்ற தோல்நோயியல் நிலைகளிலான சிகிச்சைகளில் களிம்பு தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது.

செயல்பாட்டு இயக்கம்

பரவச்செய்வதாக எடுத்துக்கொள்ளப்படும் மெட்ராடைனஸால் அனேரோபிக் பாக்டீரியா மற்றும் உணர்திறனுள்ள புரோட்டஸா ஆகியவற்றால் உறிஞ்சப்படுகிறது. அனேரோப்களால் எடுத்துக்கொள்ளப்பட்டவுடன், பையூரிவேட்: ஃபெராக்ஸிடைன் ஆக்ஸிடோ-ரெடக்டேஸால் உருவாக்கப்படும் குறைக்கப்பட்ட ஃபெராடாக்ஸினுடன் வினைபுரிவதன் மூலம் என்சைம் இல்லாத வகையில் குறைக்கப்படுகிறது. இந்தக் குறைப்பு அனேரோபிக் உயிரணுக்களுடனான விஷப்பொருட்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகிறது என்பதுடன் அனேரோபிக்குகளில் தேர்ந்தெடுத்த பெருக்கத்திற்கும் உதவுகிறது.

மெட்ரானைடஸால் வளர்ச்சிதை மாற்றப்பொருள்கள் பாக்டீரியல் டிஎன்ஏவிற்குள்ளாக எடுத்துச்செல்லப்பட்டு நிலையற்ற மூலக்கூறுகளாக உருவாகின்றன. இந்தச் செயல்பாடானது மெட்ரானைடஸால் பகுதியளவிற்கு குறைக்கப்படும்போது மட்டுமே நடக்கிறது, அத்துடன் இந்தச் செயல்பாடு அனேரோபிக் உயிரணுக்களில் மட்டுமே நடக்கிறது என்பதால் இது மனித உயிரணுக்கள் அல்லது ஏரோபிக் பாக்டீரியாவில் சிறிய விளைவை மட்டுமே ஏற்படுத்துகிறது.[2]

அடையாளங்கள்

உடலமைப்பு மெட்ரானைடஸால் குறிப்பிடப்படும் சிகிச்சைகளாவன:

பாக்டீரியல்

புராட்டஸால்

ஜியர்டயாஸிஸ்: ஜியார்டியா லம்ப்லியா எனப்படும் ஒற்றை-உயிரணுகொண்ட நுண்ணுயிரின் தொற்று ஏற்படும் பித்தநீர்களின் உட்செலுத்தலால் ஏற்படும் சிறு குடல் தொற்று. ஜியர்டயாஸிஸ் வளரும் நாடுகளில் 20–30 சதவிகிதம் என்ற அளவில் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அமெரிக்காவில் ஜியர்டியா ஆண்டிற்கு 2.5 மில்லியன் மக்களிடத்ததில் தொற்று ஏற்படுத்துவதாக தெரிவித்திருக்கிறது. ஒருவரிடமிருந்து ஒருவருக்கு, தண்ணீரில் உருவாவது மற்றும் உடலுறவு போன்றவை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் இது மாறிச்செல்கிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறுவது ஜியர்டியா தொற்றுக்களின் பெரும்பாலானவற்றைக் குறிப்பிடுகிறது என்பதுடன் இது மோசமான சுகாதாரம் மற்றும் சுத்தமின்மையுடனே தொடர்புடையதாக இருக்கிறது. தண்ணீரால் ஏற்படும் மாற்றப்பாடு அமெரிக்க ஜியர்டியா நோய்ப்பரவலில் பொதுவானதாக இருக்கிறது, இது வடிகட்டப்படாத (அசுத்தமான) தண்ணீரை உள்ளெடுப்பதுடனே தொடர்புகொண்டதாக இருக்கிறது. பாலுறவு மாற்றப்பாடு முக-வாய் அசுத்தத்தின் மூலமாகவே ஏற்படுகிறது. மேலும், அணையாடை மாற்றுதல் மற்றும் கையை போதுமான அளவிற்கு சுத்தப்படுத்தாமை ஆகியவை தொற்று ஏற்பட்ட குழந்தைகளிடமிருந்து இது மாறுவதற்கு அபாயக் காரணிகளாக இருக்கின்றன. இறுதியாக, உணவில் உருவாகும் ஜியர்டியா நோய்ப்பரவல் என்பது தொற்று ஏற்பட்ட கையுள்ளவர்களாலேயே உணவு அசுத்தமடைவதன் மூலம் உருவாவதாக இருக்கிறது.

சிறிய அளவிலான தொற்று ஏற்பட்டுள்ள தனிநபர்கள் அடிவயிற்று அழற்சி, வெடிப்பு, தண்ணீரால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வாந்தி, தசை பிசகல் மற்றும் தீவிரமடையும் நிலைக்கு முன்பாக 3–4 நாட்களுக்கு நீடிக்கும் காய்ச்சல் ஆகியவற்றின் தொடக்கநிலை தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்களிடத்தில் மீண்டும் நிகழ்கின்ற அல்லது தடுப்பாக மாறும் படிப்படியான அறிகுறிகள் ஏற்படுகின்றன.

அறிகுறிகளின் தீவிரமான மற்றும் மறைமுகமான தொடக்க நிலைகளில் மலங்கள் மிகவும் பிசுபிசுப்பானதாகவும் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் மாறுகிறது ஆனால் ஜியர்டஸிஸ் குடல் நோய்களோடு சம்பந்தப்பட்டிருப்பது இல்லை என்பதால் அது இரத்தம் அல்லது சீழ்களை கொண்டிருப்பதில்லை. தண்ணீரால் ஏற்படும் வயிற்றுப்போக்கு மென்மையான மலங்கள் மற்றும் மலச்சிக்கலோடு சுழற்சி முறையில் ஏற்படலாம். குமட்டல், முன்னமே ஏற்படும் திருப்தி, வீக்கம், மார்பெலும்பு எரிச்சல், முட்டை வீச்சம் மற்றும் அமிலச் செரிமானக்கோளாறு உள்ளிட்ட மேல் ஜிஐ அறிகுறிகள் சாப்பிடுவதன் மூலம் அதிகரிக்கலாம் என்பதோடு மென் மலங்கள் இல்லாத நிலையிலும் பொதுவாக இருக்கக்கூடியவைகளாக இருக்கலாம்.

மெட்ரானைடஸால் சிகிச்சை

வயது வந்தோர் மருந்தளவு: ஒரு நாளைக்கு 250 மில்லிகிராம் என்று ஐந்து நாட்களுக்கு

குழந்தைகள் மருந்தளவு: ஐந்து நாட்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் என்று ஒரு மருந்தளவில் உடல் எடையில் ஒரு கிலோகிராமுக்கு 15 மில்லிகிராம்

குறிப்பிடப்படாதது

குறைபிரசவ தடுப்பு

சமீபத்திய[எப்போது?] மெட்ரானைடஸால் ஆய்வு "32 வாரங்களுக்கு முந்தைய மெட்ரானைடஸால் சிகிச்சை குறைபிரசவத்தின் அதிகரித்த அபாயத்தோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது" என்று கண்டுபிடித்துள்ளது, இது "பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றம்... கிளிண்டாமிசின் அல்லது வாய்வழி மெட்ரானைடஸால் சிகிச்சையோடு காணப்படுவதன்" காரணமாக ஏற்பட சாத்திமிருக்கிறது.[4]

செர்விட்டோவஜினல் ஃபீட்டல் ஃபைப்ரோனெக்டின் (எஃப்எஃப்என்) இருப்பது உட்பட மற்ற காரணிகளோடு பாக்டீரியல் வஜினோஸிஸ் உடன் தொடர்புடைய குறைபிரசவ தடுப்பிற்கும் மெட்ரானைடஸால் பெண்களிடத்தில் பயன்படுத்தப்படுகிறது. தற்போக்கு கட்டுப்பாட்டு பரிசோதனை ஒன்று அதிக அபாயமுள்ள கர்ப்பமடைந்த பெண்களிடத்தில் குறைப்பிரசவ தடுப்பில் மெட்ரானைடஸால் பயனற்றதாக இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறது, மாறாக குறைபிரசவ நிகழ்வானது மெட்ரானைடஸால் கொண்டு சிகிச்சையளிப்படும் பெண்களிடத்தில் உண்மையில் அதிகரித்தே காணப்படுகிறது.[5]

இதுபோன்ற சூழ்நிலைகளில் தரப்படுவதற்கு மெட்ரானைடஸால் சரியான நுண்ணுயிர்க் கொல்லி அல்ல என்றும் மிகத்தாமதமாகவே இது தொடர்ந்து வழங்கப்படுகிறது என்றும் லாமண்ட் வாதிடுகிறார். பாக்டீரியல் வஜினோஸிஸிற்கான நேர்மறை சோதனை முடிவுள்ள பெண்களுக்கு இரண்டாவது மூன்றுமாத காலத்தில் கிளிண்டாமைசின் தரப்படுவது மிகவும் பயன்மிக்கதாக தெரிகிறது.[6]

தீய விளைவுகள்

பொதுவான தீய மருந்து விளைவுகள் (≥1 சதவிகித நோயாளிகளிடத்தில்) பின்வருபவை உள்ளிட்ட உடல்ரீதியான மெட்ரானைடஸாலோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது: குமட்டல், வயிற்றுப்போக்கு, மற்றும்/அல்லது வாயில் உலோகச் சுவை. நரம்பு மூலமான மருந்தளி்ப்பு பொதுவாக சிரை இரத்த உறைவோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது. அவ்வப்போது ஏற்படும் தீய விளைவுகள்: அதிக உணர்திறன் விளைவுகள் (எரிச்சல், அரிப்பு, சிவந்துபோதல், காய்ச்சல்), தலைவலி, மயக்க உணர்வு, வாந்தி, நாக்கு அழற்சி, வாய் அழற்சி, கருப்பான சிறுநீர், மற்றும்/அல்லது கூச்ச உணர்வு.[3]

அதிக அளவுகள் மற்றும்/அல்லது மெட்ரானைடஸால் கொண்டு நீண்டகால உடல்ரீதியான சிகிச்சையானது நாக்கு தடித்துப்போதல், வெள்ளையணுக் குறைதல், நியூட்ரோபீனியா, பெரிபரல் நியூரோபதி மற்றும்/அல்லது சிஎன்எஸ் விஷத்தன்மை ஆகியவற்றோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது.[3]

மெட்ரானைடஸால் புற்றுநோய் குறித்த சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தால் (ஐஏஆர்சி) மனிதர்களிடத்தில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய துணைப்பொருளாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. சில பரிசோதனை முறைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும் பரிசோதனை செய்யப்பட்ட விலங்குகளிடத்தில் இது புற்றுநோய் ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.[7] இன்னும்கூட, மெட்ரானைடஸால் மனிதர்களிடத்தில் பாதுகாப்பானதாகவே காட்டப்பட்டு வருகிறது.[7][8] இது புற்றுநோய் அபாயத்திற்கு மிகவும் குறைவான சாத்தியமுள்ளதாக தோன்றுகிறது என்பதோடு பெரும்பாலான சூழ்நிலைகளில் சிகிச்சையின் பலன்கள் அபாயத்தை அதிகப்படியானதாக மதிப்பிட்டுவிடுவதாக இருக்கின்றன. மெட்ரானைடஸால் விலங்கு உணவுகளில் பயன்படுத்தும் கால்நடை மருத்துவத்தில் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது.[9]

மெட்ரானைடஸாலுக்கும் பல்வேறு பிறப்புக் குறைபாடுகளுக்கும் இடையிலுள்ள உறவை பல்வேறு ஆய்வுகளும் குறிப்பிட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் தற்போது குறைபாடுள்ளவைகளாக கருதப்படுகின்றன என்பதோடு மிகச் சமீபத்திய ஆய்வுகள் "பிறப்புக் குறைபாடுகள் அல்லது கருவின் பிற எதிர்மறை விளைவுகளுக்கான குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்த அபாயத்தை ஏற்பதில்லை."[10]

மேற்பரப்பு மெட்ரானைடஸால் சிகிச்சையுடன் இணைந்துள்ள பொதுவான எதிர்மறை மருந்து விளைவுகள் சிவந்துபோதல், உலர்வு, மற்றும்/அல்லது தோல் எரிச்சல் ஆகியவற்றை உள்ளிட்டதாக இருக்கிறது; அத்துடன் கண்ணில் நீர்வடிவதலும் இருக்கிறது (கண்களுக்கு அருகில் பயன்படுத்தப்பட்டால்).[3]

ஆல்கஹால் உடனான ஒன்றிணைப்பு

மெட்ரானைடஸால் பயன்படுத்துகையில் எத்தனால் (ஆல்கஹால்) நுகர்வது குமட்டல், வாந்தி, தோல் சிவந்துபோதல், டேக்கிகார்டியா (அதிகரித்த இதயத் துடிப்பு), மற்றும் சுவாசத் தடை,[11] போன்றவற்றை உள்ளிட்டிருக்கக்கூடிய டைசல்ஃபிரம் போன்ற விளைவைக் கொண்டிருப்பதாக நீண்டகாலமாக கருதப்பட்டு வந்தது, இருப்பினும் இந்த முடிவை கேள்விக்குட்படுத்தும் ஆய்வுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.[12] உடல்ரீதியான மெட்ரானைடஸால் சிகிச்சையின்போது நோயாளிகளால் ஆல்கஹால் உள்ளெடுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதோடு சிகிச்சைக்கு பிறகான 48 மணிநேரங்களுக்காவது தவிர்த்திருக்க வேண்டும்.[3] இருப்பினும், மருத்துவ அமைப்பில் இந்த விளைவின் இயக்கவியல் சிலரால் சமீபத்தில் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது [13][14] என்பதுடன் ஆல்கஹால் ஏற்பின்மைக்கான சாத்தியமுள்ள மைய விஷத்தன்மை செரோட்டின் பரிந்துரைக்கப்படுகிறது.[15]

மெபண்டஸால் உடனான ஸ்டீவன்ஸ்-ஜான்ஸன் குறைபாடு

மெட்ரானைடஸால் மட்டுமே எப்போதாவது ஸ்டீவன்ஸ்-ஜான்ஸன் குறைபாட்டை ஏற்படுத்த காரணமாக அமைகிறது, ஆனால் இது மெபன்டஸால் உடன் சேர்க்கப்படும்போது இந்த விகிதத்தை அதிகரிக்கச் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[16]

உயிராபத்து விளைவிக்கக்கூடிய செரோட்டினின் குறைபாட்டு சாத்தியம்

சமீபத்தில், எஸ்எஸ்ஆர்ஐ/எஸ்என்ஆர்ஐ எதிர் மன அழுத்த மருந்து மற்றும் மெட்ரானைடஸால் தூண்டிய செரோட்டினின் குறைபாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது,[17][18] இந்தத் தகவல் மெட்ரானைடஸால் நோயாளி தகவல் சிற்றேற்றில் உள்ளிடப்படவில்லை. எஸ்எஸ்ஆர்ஐ மற்றும் எஸ்என்ஆர்ஐ எதிர் மன அழுத்த மருந்துகள் புரோசாக், லெக்ஸாப்ரோ, செலக்ஸா, சோலாஃப்ட், எஃபெக்ஸர், இன்னபிற போன்றவற்றை உள்ளிட்டிருக்கிறது.

பார்வைக் குறிப்புகள்

  1. தொழில்முறையாளர்களுக்கான மெர்க் கையேடு http://www.merck.com/mmpe/lexicomp/metronidazole.html
  2. Eisenstein, Barry I.; Schaechter, Moselio (2007). "DNA and Chromosome Mechanics". in Schaechter, Moselio; Engleberg, N. Cary; DiRita, Victor J. et al.. Schaechter's mechanisms of microbial disease. Hagerstwon, MD: Lippincott Williams & Wilkins. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7817-5342-5. http://books.google.com/books?id=1Zl70SLDU3oC&pg=PA28. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Rossi, Simone, தொகுப்பாசிரியர் (2006). Australian Medicines Handbook 2006. Adelaide: Australian Medicines Handbook Pty Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9757919-2-9. இணையக் கணினி நூலக மையம்:224831213. [page needed]
  4. Carey JC, Klebanoff MA (April 2005). "Is a change in the vaginal flora associated with an increased risk of preterm birth?". American Journal of Obstetrics and Gynecology 192 (4): 1341–6; discussion 1346–7. doi:10.1016/j.ajog.2004.12.069. பப்மெட்:15846235. 
  5. Shennan A, Crawshaw S, Briley A, et al. (January 2006). "A randomised controlled trial of metronidazole for the prevention of preterm birth in women positive for cervicovaginal fetal fibronectin: the PREMET Study". BJOG 113 (1): 65–74. doi:10.1111/j.1471-0528.2005.00788.x. பப்மெட்:16398774. 
  6. Lamont RF (March 2005). "Can antibiotics prevent preterm birth--the pro and con debate". BJOG 112 (Suppl 1): 67–73. doi:10.1111/j.1471-0528.2005.00589.x. பப்மெட்:15715599. 
  7. 7.0 7.1 "Metronidazole CAS No. 443-48-1" (PDF). Report on Carcinogens, Eleventh Edition. U.S. Department of Health and Human Services, Public Health Service, National Toxicology Program. பார்க்கப்பட்ட நாள் 2009-12-11.
  8. ஃபிளஜில் 375 அமெரிக்க பரிந்துரைப்பு தகவல் ஃபைஸர் (பிடிஎஃப்)
  9. "Metronidazole Summary Report EMEA/MRL/173/96-FINAL" (PDF). Committee for Medicinal Products for Veterinary Use (CVMP). European Medicines Agency. 1997. பார்க்கப்பட்ட நாள் 2009-12-11. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  10. ஓடிஐஎஸ்: மெட்ரானைடஸால் (ஃபிளஜில்®) மற்றும் கர்ப்பம். http://www.otispregnancy.org/pdf/Flagyl.pdf
  11. Cina SJ, Russell RA, Conradi SE (December 1996). "Sudden death due to metronidazole/ethanol interaction". The American Journal of Forensic Medicine and Pathology 17 (4): 343–6. doi:10.1097/00000433-199612000-00013. பப்மெட்:8947362. 
  12. Gupta NK, Woodley CL, Fried R (October 1970). "Effect of metronidazole on liver alcohol dehydrogenase". Biochemical Pharmacology 19 (10): 2805–8. doi:10.1016/0006-2952(70)90108-5. பப்மெட்:4320226. 
  13. Williams CS, Woodcock KR (February 2000). "Do ethanol and metronidazole interact to produce a disulfiram-like reaction?". The Annals of Pharmacotherapy 34 (2): 255–7. doi:10.1345/aph.19118. பப்மெட்:10676835. "the authors of all the reports presumed the metronidazole-ethanol reaction to be an established pharmacologic fact. None provided evidence that could justify their conclusions". 
  14. Visapää JP, Tillonen JS, Kaihovaara PS, Salaspuro MP (June 2002). "Lack of disulfiram-like reaction with metronidazole and ethanol". The Annals of Pharmacotherapy 36 (6): 971–4. doi:10.1345/aph.1A066. பப்மெட்:12022894. 
  15. Karamanakos PN, Pappas P, Boumba VA, et al. (2007). "Pharmaceutical agents known to produce disulfiram-like reaction: effects on hepatic ethanol metabolism and brain monoamines". International Journal of Toxicology 26 (5): 423–32. doi:10.1080/10915810701583010. பப்மெட்:17963129. 
  16. Chen KT, Twu SJ, Chang HJ, Lin RS (March 2003). "Outbreak of Stevens-Johnson syndrome/toxic epidermal necrolysis associated with mebendazole and metronidazole use among Filipino laborers in Taiwan". American Journal of Public Health 93 (3): 489–92. doi:10.2105/AJPH.93.3.489. பப்மெட்:12604501. 
  17. Karamanakos PN (November 2008). "The possibility of serotonin syndrome brought about by the use of metronidazole". Minerva Anestesiologica 74 (11): 679. பப்மெட்:18971895. http://www.minervamedica.it/index2.t?show=R02Y2008N11A0679. 
  18. Karamanakos PN, Pappas P, Boumba VA, et al. (2007). "Pharmaceutical agents known to produce disulfiram-like reaction: effects on hepatic ethanol metabolism and brain monoamines". International Journal of Toxicology 26 (5): 423–32. doi:10.1080/10915810701583010. பப்மெட்:17963129. 

வெளிப்புபுற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ரோனிடசோல்&oldid=498010" இலிருந்து மீள்விக்கப்பட்டது