ஜாக்-லூயி டேவிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: ko:자크루이 다비드; cosmetic changes
No edit summary
சி (தானியங்கிமாற்றல்: ko:자크루이 다비드; cosmetic changes)
ஒரு நாட்டின் [[புரட்சி]] அல்லது [[விடுதலைப்போர்|விடுதலைப்போரின்]] போது, [[மக்கள்]] மத்தியில் எழுச்சியூட்டக் கூடிய இலக்கியங்களைப் படைத்த படைப்பாளிகளையும், அத்தகைய இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சென்ற [[இசை]], [[நாடகம்|நாடகக்]] கலைஞர்களையும் உலக சரித்திரத்தில் பல இடங்களில் காணலாம். இதே பணியை தனது [[ஓவியம்|ஓவியங்கள்]] மூலம் நிகழ்த்திக் காட்டியவர்தான் ஜாக் லூயிஸ் டேவிட். [[பிரெஞ்ச் புரட்சி|பிரெஞ்ச் புரட்சியின்]] ஆரம்பக் கட்டங்களில், இவர் வரைந்த ஓவியங்கள் மக்களிடம் மிகப்பெரும் எழுச்சியை ஊட்டின. புரட்சியாளர்களின் அதிகாரப்பூர்வ ஓவியராகவே அறியப்பட்டார். எளிதில் உணர்ச்சிவயப்படக் கூடியவரான டேவிட், [[ஒவியம்]] வரைவதோடு மட்டும் நின்று விடாமல் அரசுக்கு எதிரான செயல்களிலும் ஈடுபட்டார். இதனால் அவர் [[சிறை]] செல்ல வேண்டியிருந்தது. [[கில்லட்டின்]] இயந்திரத்தில் சிக்கி, உயிர் துறக்கும் அபாயமும் உருவானது. புரட்சிக்குப் பின்னர், [[மாவீரன்]] [[நெப்போலியன்|நெப்போலியனின்]] பிரதம ஓவியராக விளங்கினார். நெப்போலியன் தோல்வியுற்றபோது, டேவிட்டுக்கு மீண்டும் ஆபத்து உருவானது. நாட்டை விட்டே வெளியேறினார். தனது இறுதிக்காலத்தை பிர்ஸ்ஸல்ஸில் கழித்தார்.
 
== பிறப்பு ==
டேவிட் பிறந்தது கலைகளின் தொட்டில் என்று அழைக்கப்படும் பாரீஸில். பிறந்த தேதி [[ஆகஸ்ட்]] 30, 1748. அவரது [[அப்பா]] ஒரு வளமையான [[இரும்பு வியாபாரி]]. டேவிட்டுக்கு 9 வயது இருக்கும்போது, ஒரு தகராறில் அவரது தந்தை கொல்லப்பட்டார். அதன்பின் கட்டடக் கலை நிபுணர்களான தனது இரண்டு தாய்மாமன்களின் கட்டுப்பாட்டில் டேவிட் வளர்ந்தார். [[அம்மா|அம்மாவின்]] அறிவுறுத்தலின்படி, கட்டடக் கலையைப் பயில ஆரம்பித்தார். ஆனால் சிறந்த ரோகோகோ பாணி ஓவியரும், தனது தூரத்து உறவினருமான பிரான்கோஸ் பெளச்சரிடம் கொண்டிருந்த நெருக்கமான உறவு டேவிட்டிடம் ஓவிய ஆர்வத்தைத் தூண்டியது. வெகு சீக்கிரமே தனக்குத் [[தொழில்]] ஓவியம் என்று தெரிந்து கொண்டார்.
 
== வரலாறு ==
அக்காலகட்டத்தில் சிறந்த ஓவியராகவும் மட்டுமல்லாமல், சிறந்த ஆசிரியராகவும் விளங்கிய [[ஜோசப் மேரி விய|ஜோசப் மேரி வியனிடம்]] ஓவியக் கலையைக் கற்றுக் கொள்ளுமாறு [[பெளச்சர்]] டேவிட்டை அறிவுறுத்தினார். வியனும் டேவிட்டை தனது மாணவராக ஏற்றுக்கொண்டார். சரித்திர சம்பவங்களையும், புரதான சிற்பங்களையும் ஓவியமாக வரையுமாறு டேவிட்டை வியன் உற்சாகப்படுத்தினார். 17 வயதில் ஓவியக் கலையில் ஈடுபாடு கொள்ள ஆரபித்த டேவிட் தனது 23 வயதில், ஓவியத்துறையின் உயர்ந்த விருதாக பிரான்சில் மதிக்கப்பெறும் 'பிரிக்ஸ் டி ரோம்' விருதிற்கான போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. அடுத்த வருடமும் போட்டியில் கலந்து கொண்டார். இம்முறையும் அவருக்குத் தோல்வியே கிட்டியது.
 
முதலில் சுவிட்ஸர்லாந்து சென்றவர், பின்பு பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்று தனது இறுதிக்காலத்தை அங்கு கழித்தார். அந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த ஒவியங்கள் எதையும் அவர் வரையவில்லை. சொந்த நாட்டை விட்டு வெளியேறியது மனதளவில் அவரை பெரிதும் பலவீனப்படுத்தியிருந்தது. டேவிட்டை மீண்டும் பிரான்சிற்கு அழைத்துவர அவரது மாணவர்கள் முயற்சித்தனர். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை. பிரஸ்யா மன்னர் பிரடெரிக் 3ம் வில்லியமின் நீதிமன்றத்தில் சரணடையுமாறு டேவிட்டிடம் கூறப்பட்டது. சரணடையும் அளவிற்கு தான் எந்த தப்பையும் செய்து விடவில்லை என்று அதற்கு மறுத்துவிட்டார்.
 
== மறைவு ==
வெலிங்டன் மன்னரை ஓவியமாக வரையுமாறு டேவிட்டுக்கு அழைப்பு வந்தது. அதையும் அவர் நிராகரித்து விட்டார். [[அரசியல்]] மற்றும் [[சமூக நலம்]] சார்ந்த தேவை குறைந்த காலத்தில் டேவிட் வரைந்த ஓவியங்கள் கற்பனைக்கு எட்டாததாக அமைந்தன. அதற்கான வரவேற்பும் இல்லாமல் இருந்தது. இத்தகைய ஒரு நிலையில்தான். 1824 [[பிப்ரவரி]] மாதத்தின் ஒரு [[இரவு|இரவுப் பொழுதில்]], ஒரு [[அரங்க‌ம்|அரங்கில்]] இருந்து தனது வீட்டிற்குத் திரும்பியபோது காவலர் ஒருவரால் டேவிட் தாக்கப்பட்டார். அவரது உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டது. அதிலிருந்து அவர் மீளவில்லை. 1825 டிசம்பர் 29ம் தேதி அவர் உயிர் பிரிந்தது. டேவிட் மிகவும் நேசித்த, தனது சொந்த நாடான பிரான்சில் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. டேவிட் வரைந்த புகழ் பெற்ற ஒவியங்களின் எண்ணிக்கையை விட குறைவானவர்களின் முன்னிலையில், பிரஸ்ஸல்ஸ் நகர் செயின்ட் குடுலே தேவாலயத்தில் அவரது [[உடல்]] அடக்கம் செய்யப்பட்டது.
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2068:2010-01-18-05-56-43&catid=27:world&Itemid=136 keetru.com]
 
[[Categoryபகுப்பு:கலைகள்]]
 
[[ar:جاك لوي دافيد]]
[[da:Jacques-Louis David]]
[[de:Jacques-Louis David]]
[[et:Jacques-Louis David]]
[[el:Ζακ-Λουί Νταβίντ]]
[[es:Jacques-Louis David]]
[[en:Jacques-Louis David]]
[[eo:Jacques-Louis David]]
[[es:Jacques-Louis David]]
[[et:Jacques-Louis David]]
[[eu:Jacques-Louis David]]
[[fa:ژاک لویی داوید]]
[[fi:Jacques-Louis David]]
[[fr:Jacques-Louis David]]
[[ga:Jacques-Louis David]]
[[gl:Jacques-Louis David]]
[[he:ז'אק-לואי דויד]]
[[ko:자크 루이 다비드]]
[[hr:Jacques Louis David]]
[[hu:Jacques-Louis David]]
[[is:Jacques-Louis David]]
[[it:Jacques-Louis David]]
[[ja:ジャック=ルイ・ダヴィッド]]
[[he:ז'אק-לואי דויד]]
[[ka:ჟაკ-ლუი დავიდი]]
[[ko:자크 루이자크루이 다비드]]
[[la:Iacobus Ludovicus David]]
[[hu:Jacques-Louis David]]
[[mk:Жак-Луј Давид]]
[[nl:Jacques-Louis David]]
[[nn:Jacques-Louis David]]
[[ja:ジャック=ルイ・ダヴィッド]]
[[no:Jacques-Louis David]]
[[nn:Jacques-Louis David]]
[[pl:Jacques-Louis David]]
[[pt:Jacques-Louis David]]
[[sk:Jacques-Louis David]]
[[sr:Жак-Луј Давид]]
[[fi:Jacques-Louis David]]
[[sv:Jacques-Louis David]]
[[th:ฌาคส์-ลุยส์ ดาวิด]]
44,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/500355" இருந்து மீள்விக்கப்பட்டது