டாப்ளர் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இன்னொரு படமும் விளக்கமும்
சமன்பாடும் விளக்கமும் சேர்ப்பு
வரிசை 2:
[[படிமம்:Doppler_effect_diagrammatic.png|thumb|right|300px|நகரும் அலை-வாய், ஏற்படுத்தும் அலைநீள மாற்றத்தைக் காட்டும் படம். சிவப்புப் புள்ளி அலை எழுப்பிக்கொண்டே இடப்புறமாக நகரும் அலை-வாயைக் குறிக்கும்]]
'''டாப்ளர் விளைவு''' (''Doppler Effect'' ) என்பது, [[ஒளி]] அல்லது [[ஒலி]] போன்ற அலைகளை எழுப்பிக்கொண்டு ''நகரும்'' ஓர் அலை-வாய் (wave source), அவ் அலைகளை உணரும் (பெறும்) நகராத அல்லது வேறு விரைவில் நகரும் ஓர் அலை வாங்கியில் (waver receiver) பெறும் அலைகளில் ஏற்படும் அதிர்வெண் அல்லது அலைநீளம மாற்றம் ஆகும். தொடர்வண்டிகள் கூ என்று ஒலி எழுப்பிக்கொண்டே நம்மை நோக்கித் தொலைவில் இருந்து வரும்பொழுது ஒலியின் துடிப்புநிலை (அதிர்வெண்) கூடுவது போலவும், பின்னர் நம்மைத் தாண்டிச் செல்லும் பொழுது ஒலித் துடிப்புநிலை குறைவது போலவும் உணர்வது இந்த டாப்ளர் விளைவால். இந்த டாப்ளர் விளைவை '''[[கிறிஸ்டியன் டாப்ளர்]]''' என்ற [[ஆஸ்திரியா|ஆத்திரிய]] நாட்டு இயற்பியலாளர் [[1842]] - ஆம் ஆண்டு கண்டறிந்தார். ஒலி அல்லது ஒளி அலை எழுப்பும் வாய், பெறுநரை அல்லது அலைவாங்கியை நோக்கி நகரும் போதும், அல்லது இரண்டுமே ஒன்றை ஒன்று நோக்கி நகரும் போதும் ஒளி அல்லது ஒலியின் அலைநீளம் ''குறைவதாக''த் தோன்றும் (அதாவது அதிர்வெண் கூடுவதாகத் தோன்றும்). இதனை '''நீலப்பெயர்ச்சி''' அல்லது '''ஊதாப் பெயர்ச்சி''' என்பர். அதேபோல் அவை ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லும்போது அலைநீளம் ''கூடுவதாக''த் தோன்றும் (அல்லது அதிர்வெண் குறைவதாகத் தெரியும்). இதனை '''[[சிவப்புப் பெயர்ச்சி]]''' என்பர். [குறிப்பு: நீல அல்லது ஊதா நிறத்தின் அலைநீளம் குறைவு (அதிர்வெண் கூடுதல்); எனவே, அலைநீளம் குறைவதை [[நீலப் பெயர்ச்சி]] அல்லது ஊதாப் பெயர்ச்சி எனவும் சிவப்பின் அலைநீளம் அதிகமாதலால் அலைநீளம் கூடுவதைச் சிவப்புப் பெயர்ச்சி எனவும் குறிப்பது வழக்கம்]
 
==ஆதாரம்==
==விளக்கம்==
மரபான இயறியலின் படி, அலை உருவாக்கும் அலை-வாய், அலையைப் பெறும் அலைவாங்கி ஆகியவை ஒளியின் விரைவவிட மிகக் குறைவான விரைவிலேயே நகரும் பொழுது, அலைவாங்கியில் காணப்படும் அதிர்வெண் ''f'' என்றும், அலை எழுப்பும் (உமிழும் அல்லது வெளிவிடும்) அலை-வாயின் அதிர்வெண் ''f''<sub>0</sub> என்றும் கொண்டால், அவற்றுக்கு இடையே ஊள்ள கணிதத் தொடர்பாட்டைக் கீழுள்ள சமன்பாடு காட்டும்:
 
::<math>f = \left( \frac{v + v_r}{v + v_{s}} \right) f_0 \,</math>
:where
::<math>v \;</math> என்பது அலை-வாய் (அலை உமிழி) நகராது இருக்கும் பொழுது ஊடகத்தில் அலையின் விரைவு
::<math>v_{r} \,</math> என்பது ஊடகத்தில் அலைவாங்கி நகரும் விரைவு; அலைவாங்கி அலை-வாய் நோக்கி நகர்ந்தால், இவ் விரைவு கூட்டல் குறியால் குறிக்கப்பெறும்(நேர்ம மதிப்பு)
::<math>v_{s} \,</math> என்பது ஊடகத்தில் அலை-வாயின் விரைவு; அலைவாய், அலைவாங்கியில் இருந்து விலகிச்சென்றால் விரைவு நேர்ம மதிப்பு (கூட்டல் குறி).
 
ஒன்றைவிட்டு ஒன்று விலகி நகர்ந்தால் அதிர்வெண் குறையும் (அலைநீளம் கூடும்).
 
 
==சான்றுகோள்==
* இயல்பியல் களஞ்சியம் - பக்.133 - ப.க. பொன்னுசாமி - சென்னைப் பல்கலைக்கழகம்
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/டாப்ளர்_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது