சவ்வூடு பரவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎எடுத்துக்காட்டுகள்: மிகு இணைப்பு நீக்கம், உ.தி.
சி மிகுதியான இணைப்புகள் நீக்கம்
வரிசை 8:
 
== எளிமையான விளக்கம் ==
[[உயிரணு|உயிரணுக்களின்]] வெளியுறையாக இருக்கும் கலமென்சவ்வானது, ஒரு தேர்ந்து புகவிடும் மென்சவ்வாகும். [[உயிரணு]] ஒன்றை [[நீர்|நீரினுள்]] அமிழ்த்தும்போது, [[நீர்]] மூலக் கூறுகள், [[கரையம்|கரைய]] செறிவு குறைவான வெளிப்பக்கம் இருந்து, கரைய செறிவு கூடிய உள்பக்கம் நோக்கி செல்லுதலே சவ்வூடுபரவல் எனப்படும்.
 
இரு சம கன அளவுகொண்ட நீரானது ஒரு தேர்ந்துபுகவிடும் மென் சவ்வினால் பிரிக்கப்படும்போது, இரு பக்கமிருந்தும் [[நீர்]] மூலக் கூறுகள் ஒரே வேகத்தில் இரு திசையிலும் நகர்வதனால், நிகர அசைவு (net flow) இருக்க மாட்டாது. அதேவேளை தேர்ந்து புகவிடும் ஒரு மென்சவ்வானது ஒரு புறம் [[கரைசல்]] ஒன்றையும், மறுபுறம் தூயநீரையும் கொண்டிருக்கையில், இரு பக்கமிருந்தும் ஒரே வேகத்தில் மூலக்கூறுகள் அந்த மென்சவ்வை உந்திச் செல்ல முயன்றாலும், கரைசலில் உள்ள பெரிய மூலக்கூறுகளை மென்சவ்வு உட்புக விடாமையால், கரைசலிலிலிருந்து [[நீர்]] மூலக் கூறுகள் மென்சவ்வினூடாக ஊடுசெல்லும் அளவு, தூய நீரிலிருந்து கரைசலை நோக்கி செல்லும் நீர் மூலக் கூறுகளின் அளவைவிட குறைவாகவே இருக்கும். இதனால் தூய நீரிலிருந்து கரைசலை நோக்கி ஒரு நிகர அசைவு ஏற்படும்.
 
சவ்வூடு பரவல் அமுக்கமென்பது, [[கரைப்பான்|கரைப்பானின்]] அல்லது நீரின் நிகர அசைவு எதுவுமில்லாமல், ஒரு சமநிலையை அடைவதற்கு தேவைப்படும் அமுக்கமாகும்.
வரிசை 19:
[[Image:Turgor pressure on plant cells diagram.svg|thumb|252px|right|Plant cell under different environments]]
 
[[தாவரம்|தாவரங்கள்]] நிமிர்ந்து உறுதியாக நிற்க இவ்வகை சவ்வூடு பரவல் அமுக்கமே காரணமாகும். சவ்வூடு பரவலினால் [[உயிரணு|உயிரணுக்களின்]] உள்ளே அசையும் [[நீர்]] மூலக் கூறுகள், தாவரக் கலங்களில் [[கலச்சுவர்|கலச்சுவருக்கு]] எதிராக கொடுக்கப்படும் விறைப்பு அமுக்கத்தை (turgor pressure) அதிகரிக்கச் செய்யும். இதனால், தாவரங்கள் நிமிர்ந்து உறுதியாக நிற்க முடிகின்றது. தாவரங்களுக்கு நீர் போதியளவு கிடைக்காதவிடத்து, நீர் மூலக் கூறுகளின் நிகர அசைவு ஏற்படாமல் போவதால், விறைப்பு அமுக்கமின்றி வாடி விடுகின்றன.
 
உருளைக் கிழங்கு துண்டுகளை செறிவு கூடிய கரைசல் ஒன்றினுள் போட்டால், கலங்களிலிருந்து நீர் வெளியேறுவதால், கிழங்குத் துண்டுகள் விறைப்பு அமுக்கத்தை இழந்து சுருங்கும். வெளியேயுள்ள [[கரைசல்|கரைசலின்]] செறிவு அதிகரிக்குமாயின், கிழங்கின் சுருங்கும் அளவும் அதிகரிக்கும்.
வரிசை 36:
 
===சவ்வூடு பரவல் வீதம்===
சவ்வூடு பரவல் விகிதம் என்பது தேர்ந்து புகவிடும் மென்சவ்வினால் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் இரு [[கரைசல்|கரைசல்களினதும்]] கரைய செறிவில் இருக்கும் வேறுபாட்டை குறிக்கும். இவ்வேறுபாடானது கரைசலிலுள்ள குறிப்பிட்ட துணிக்கையின் வீதத்தில் உள்ள வேறுபாடாகும். [[நீர்]] மூலக் கூறுகள் அதிகளவில் செறிவு குறைந்த [[கரைசல்|கரைசலிலிருந்து]] செறிவு கூடிய கரைசலுக்கு செல்வதனால், அந்த நிகர அசைவினால், செறிவு வேறுபாடு குறைந்து ஒரு சமநிலையை அடையும். சமநிலைக்கு வந்தாலும் [[நீர்]] மூலக் கூறுகளின் அசைவு தொடர்ந்தாலும், இரு புறமிருந்தும் சம அளவிலான நீர் மூலக் கூறுகள் அசைவதனால், சமநிலை குழப்பப்படாது.
 
== வேறுபாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சவ்வூடு_பரவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது