ஆன் பொலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (அஏன் பொலின், ஆன் பொலின் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
No edit summary
 
கர்தினால் பேராயர் [[தாமஸ் உவால்ஸி]] பணி நீக்கம் செய்யபட்டார். ஆனின் தூண்டுதலினாலேயே இது நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன் பின், பொலினின் குடும்ப மதகுருவான [[தாமஸ் கிரான்மர்]] கன்டர்பரி பேராயராகப் பொறுப்பேற்றார்.
ஜனவரி 25 1533யில் ஹென்ரிஹென்றி ஆனை மணம் புரிந்தார். முதலில் இத்திருமணம் செல்லாது என அறிவித்த கிரான்மர், ஐந்து நாட்களின் பின் தனது முடிவை மாற்றித் திருமணம் செல்லும் என அறிவித்தார். இதனால் பாப்பரசர், ஹென்றியையும் கிரான்மரையும் கத்தோலிக்கத்தில் இருந்து விலக்கி வைத்தார். இது [[இங்கிலாந்து திருச்சபை]]க்கும், ரோமுக்கும் இடையில் பிளவு ஏற்படக் காரணமானது. இங்கிலாந்து திருச்சபையும் அரசனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
 
1533 ஜூன் 1ம் திகதி, ஆன் இங்கிலாந்து அரசியாக முடிசூட்டப்பட்டார். செப்டெம்பர் 7ம் திகதி, பின்னாளில் இங்கிலாந்தின் அரசியாகிய [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|முதலாம் எலிஸபத்தை]] ஆன் பெற்றெடுத்தார். ஆன் ஆண் வாரிசைப் பெற்றுத் தரவில்லை என்ற குறை ஹென்றிக்கு இருந்தது. எனினும் ஹென்றி நம்பிக்கை இழக்கவில்லை, தான் எலிஸபத்தின் மீது அன்பு வைத்திருப்பதாகவும் ஒரு ஆண் குழந்தையும் பிறக்கும் எனவும் ஹென்றி திடமாக நம்பியிருந்தார். ஆனால், இதன் பின் மூன்று தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டது, மார்ச் 1536 அளவில் ஹென்றி ஜேன் ஸீமோருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/507633" இருந்து மீள்விக்கப்பட்டது