குப்பிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:25713 103960606312234 100000948854428 29050 6464811 n.jpg|thumb|350px|right|]]
திருமூலரால் சிவபூமி என்றழைக்கப்பட்ட ஈழவளத் திருநாட்டின் வடமுனை எனக் கருதப்படுவது யாழ்ப்பாணக் குடாநாடு ஆகும். இது ஒரு சிறப்பான தரைத்தோற்றங்களைக் கொண்ட புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. யாழ் குடாநாடு சிறப்பான நிர்வாக வசதி கருதி வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, தீவகம் என ஐந்து பிரிவுகளாக நிர்வகிக்கப்படுகிறது. குடாநாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது வலிகாமம் பிரிவாகும். குடாநாட்டின் வளம் மிக்க செழிப்பான பகுதிகள் வலிகாமம் பகுதியிலேயே அமைந்துள்ளன.
யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபைப் பிரிவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மேற்கே சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமே குப்பிளான். பழமையின் கம்பீரமும் புதுமையின் வனப்பும் இயற்கையின் ஒட்டுமொத்தப் பேரழகும் கொட்டிக்கிடக்குமிடம். வடக்கே குரும்பசிட்டியையும் கிழக்கே புன்னாலைக்கட்டுவனையும் மேற்கே ஊரெழுவையும் புன்னாலைக்கட்டுவனின் ஒரு பகுதியினையும் மேற்கே ஏழாலை ஆகிய கிராமங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதன் கிழக்கே பலாலி பெருவீதியும் மேற்கே காங்கேசன் துறைப் பெருவீதியும் அமைந்துள்ளன. நீர்வளம், நிலவளம், கல்விவளம், தொழில் வளங்களோடு யாழ்ப்பாணத்துத் தொன்மை பேசும் பாரம்பரியம் மிக்க சகல வளங்களையும் மொத்தமாகத் தன்னகத்தே செழுமையான கிராமம். எமது முன்னோர்களின் காலத்தில் எங்களின் கிராமத்தில் குப்பிழாய் என்ற புல் வகையினம் ஏராளமாகக் காணப்பட்டது. குப்பிழாய் என்ற சொல் காலப்போக்கில் மருவி குப்பிளான் என்று வந்ததாக வரலாறு ஒன்று உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட சமூக நிறுவனங்களையும், விவசாய நிலங்களையும் கொண்ட இயற்கையோடு இயைந்த ஆரோக்கியமான வாழ்வையும், நேசமும் பாசமும் மிகுந்த உறவுகளையும் களங்கமில்லாத மனிதர்களையும், நாட்டுக்காகவே தங்களை நேர்ந்து கொண்டு விட்ட கல்வியலாளர்களையும், சமயப்பெரியார்களையும், அறிவியலாளர்களையும், தன்னகத்தே கொண்ட அழகான ஊர் எங்களுடையது.
"https://ta.wikipedia.org/wiki/குப்பிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது