சுப்ரமணியபுரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வெளிவரும் காசி (கஞ்சா கறுப்பு), கத்திக் குத்துக்குள்ளாகிறான். அங்கிருந்து காட்சிகள் பின்னோக்கிச் செல்கின்றன.
 
1980களில் மதுரை நகரில் அழகர் (ஜெய்), பரமன் (சசிக்குமார்), காசி (கஞ்சா கருப்பு), சித்தன், டும்கான் ஆகியோர் நண்பர்களாகச் சுற்றித் திரிகிறார்கள். சித்தன் மட்டும் ஒலிபெருக்கிக் கடை வைத்திருக்கிறார். இவர்கள் சிறு குற்றங்கள் செய்து காவலர்களிடம் சிக்கும் போது, உள்ளூர் அரசியல்வாதி சோமுவின் தம்பி கனகு (சமுத்திரக்கனி) ஆதரவாக இருந்து உதவுகிறார். இந்த நன்றியில் அழகரும் பரமரும்பரமனும் சேர்ந்து சோமுவின் அரசியல் எதிரி பழனிச்சாமியைக் கொல்கின்றனர். இதற்கிடையில் கனகின் அண்ணன் மகள் துளசியும் (சுவாதி) அழகரும் நெடுநாளாகவே காதல் மயக்கத்தில் இருக்கிறார்கள். சோமு, இக்கொலைக்குப் பிறகு கட்சியில் மாவட்டத்தலைவர் பொறுப்பு பெறுகிறார். ஆனால், சிறைக்குச் சென்ற அழகரையும் பரமரையும்பரமனையும் வெளியே எடுக்காமல் ஏமாற்றி விடுகின்றனர். சிறையில் உள்ள இன்னொரு கைதியின் உதவியோடு வெளியே வரும் நண்பர்கள் அக்கைதிக்கு உதவியாக அவருடைய எதிரியைக் கொல்ல, பதிலுக்கு அந்த எதிரியின் நண்பர்கள் இவர்களைத் துரத்த, அவர்களையும் கொல்கிறார்கள்.
 
தங்களை ஏமாற்றிய கனகுவைக் கொல்ல நேரம் பார்த்து அழகரும் பரமரும்பரமனும் ஒளிந்து வாழ்கிறார்கள். ஒரு முறை கனகுக்கு வைத்த குறி தவறி கனகுவின் அண்ணனைக் காயப்படுத்துகிறது. இதைச் சுட்டிக் காட்டி, அழகர் உயிரோடு இருந்தால் தங்கள் குடும்பத்தில் அனைத்து ஆண்களையும் கொன்று விடுவான் என்று சொல்லி கனகு துளசியை மூளைச் சலவை செய்கிறான். துளசி-அழகர் காதலை அறியும் கனகு, துளசி மூலம் அழகரை வஞ்சகமாகத் தனியிடத்துக்கு வரச் செய்கிறான். தன் காதலியே தனக்குச் சாவு அழைப்பு விடுத்து ஏமாற்றியதை அறிந்த அழகர், எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் செத்து மடிகிறான். நண்பன் அழகரின் கொலைக்குப் பழியாக பரமன் கனகுவைக் கொடூரமாகத் தலையை அறுத்துக் கொல்கிறான். இத்தனை நாள் உடனிருந்த நண்பன் காசி, பரமனைக் காட்டிக் கொடுத்துக் கொன்று விடுகிறான்.
 
இறுதிக் காட்சியில், நல்ல நண்பர்களுக்குத் துரோகம் செய்த காசி வாழத் தகுதியற்றவன் என்று சொல்லி டும்கான் காசியைக் கொல்கிறான்.
"https://ta.wikipedia.org/wiki/சுப்ரமணியபுரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது