ஏ. எம். ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
 
அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட ''வாடிக்கை மறந்ததும் ஏனோ'' ''கண்மூடும் வேளையிலும்'' போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட '' நிலவும் மலரும்'' ''இதய வானின் உதய நிலவே'' ''கண்ணாலே நான் கண்ட கணமே'' போன்றவை அவரது குரலின் அழகை முழுக்க காட்டி நம் இழந்த வாழ்க்கையின் இனியதுயரங்களை தொட்டு மீட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ.எம்.ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. ''மாசிலா உண்மைக்காதலே'' ([[அலிபாபாவும் 40 திருடர்களும்]]),, ''கண்களின் வார்த்தைகள் புரியாதோ' ([[களத்தூர் கண்ணம்மா]]) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.
 
பின்னணிப் பாடகராகப் புகழ் பெற்றிருந்த ராஜா, ஸ்ரீதர் இயக்குனராக அறிமுகமான கல்யாணப்பரிசு திரைபடத்தில் இசையமைப்பாளராக உருமாறினார். ஸ்ரீதரின் இயக்குனத் திறமைக்காக மட்டுமன்றி பாடல்களுக்காகவும் மிக்க புகழ் பெற்றிருந்த படம் இது. "வாடிக்கை மறந்தது ஏனோ" போன்ற காதல் பாடல்கள் "காதலிலே தோல்வியுற்றாள்" போன்ற துயரப்பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, தேன் நிலவு, விடி வெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும் ஆடிப் பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார்.
 
ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ.எம்.ராஜா [[எம்.ஜி.ஆர்]], [[என். டி. ராமராவ்]], [[ஏ. நாகேஸ்வரராவ்]], [[ஜெமினி கணேசன்]], சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது.
"https://ta.wikipedia.org/wiki/ஏ._எம்._ராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது