இசுலாமியச் சட்ட முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இசுலாமியச் சட்ட முறையின் அடிப்படைகள் நான்கு அடிப்படைகள் 1. திருக்குர்ஆனின் வழிகாட்டல் 2.முகம்மதுநபியின் சொல்லும்,செயலும் மேற்கண்டஇரண்டிலும் தெளிவு ஏற்படாத நிலையில் அடிப்படையை பாதிக்காமல் கீழ்கண்ட இரண்டிலும் தீர்வு காண்பது 3.முஸ்லிம் சமூகத்தின் ஒருமனதான முடிவு 4.நீதிபதியின் சுய பகுத்தறிவு ஆகும்.
உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், சர்வதிகார ஆட்சியானாலும், சமயங்களில் நம்பிக்கையற்ற கம்யூனிஸ ஆட்சியானாலும் அங்கே சட்டங்கள் அவசியமாகின்றன.
வரிசை 35:
== இஜ்மா, கியாஸ் ==
திருக்குர் ஆனையும், [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களின் ]] மொழிகளையும், வழிகளையும் கற்றுணர்ந்த அறிஞர்களே குர்ஆனுக்கும், 'சுன்னா'வுக்கும் விளக்கமும் விரிவுரையும் வழங்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்தகைய அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால், அதற்கு 'இஜ்மா' என்று பெயர். இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு நல்லதோர் அடிப்படையாக, இந்த 'இஜ்மா'வை இமாம்கள் கருதுகிறார்கள். பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிற வழக்கங்களுக்கு (CUSTOM) இந்து மதச் சட்டத்தில் அதிகமான முக்கியத்துவம் உண்டு. ஆனால் இஸ்லாமியத்தில் அவ்வாறு இல்லை எனினும் [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்கள்]] வாழ்ந்த காலத்திற்கு முன்பே இருந்த சில வழக்கங்கள், [[குர்ஆன்]] மற்றும் ஹதீஸுக்கு மாறுபடாமல் இருந்ததால் அங்கீகரிக்கப்பட்டன.
 
புதியதாக ஒரு பிரச்சினை எழும்போது, [[குர்ஆன்]] மற்றும் [[ஹதீஸ்|ஹதீஸை]] அடிப்படையாக வைத்து, பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு யூகித்து முடிவு காண்பதற்கு 'கியாஸ்' (QUIYAS) என்பர். [[சியா முசுலிம்| சியா பிரிவினரும்]], ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த சிலரும் கியாஸை இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு 'நல்ல அடிப்படை' என ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக இமாம் அபூஹனீபா அவர்கள் [[குர்ஆன்]], [[ஹதீஸ்]] மூலம் நேரடியாக தெளிவு கிடைக்காத விசயங்களில் [[குர்ஆன்]] [[ஹதீஸ்|ஹதீஸை]] அடிப்படையாகக் கொண்டுள்ள 'கியாஸ்' முறையை அதிகமாகப் பின்பற்றியிருக்கிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமியச்_சட்ட_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது