பெர்க்சயர் ஹாதவே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Manjuudupa (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Berkshire_Hathaway (revision: 354044784) using http://translate.google.com/toolkit with about 96% human translations.
(வேறுபாடு ஏதுமில்லை)

07:00, 13 மே 2010 இல் நிலவும் திருத்தம்

பெர்க்‌ஷயர் ஹாதவே (நியாபசBRKA மற்றும் நியாபசBRKB) என்பது அமெரிக்காவின், நெப்ராஸ்கா மாநிலத்தை சேர்ந்த ஒமாஹா என்கிற நகரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பல நிறுவனங்களின் கூட்டு ஸ்தாபனம் ஆகும். இந்த ஸ்தாபனம் ஏராளமான துணை நிறுவனங்களை நிர்வகிப்பிலும் மேற்பார்வையிலும் கொண்டிருக்கிறது. கடந்த 44 வருடங்களாக தனது பங்குதாரர்களுக்கு ஆண்டு சராசரியாக புத்தக மதிப்பில் 20.3% வளர்ச்சியை இந்நிறுவனம் அளித்து வந்துள்ளது. பெரும் அளவிலான மூலதனம் மற்றும் குறைந்த அளவிலான கடன் துணையுடன் இதனைச் செய்துள்ளது.[1] 2000-2010 காலத்தில் பெர்க்‌ஷயர் ஹாதவே பங்குகள் மொத்த வருவாயாக 76% ஈந்தன, அதே சமயத்தில் S&P 500[3] சராசரியாக இருந்தது 11.3% எதிர்மறை வருவாய் ஆகும்.

Berkshire Hathaway Inc.
வகைPublic
(நியாபசBRKA)
(நியாபசBRKB)
நிறுவுகை1839 (as Valley Falls Company)
நிறுவனர்(கள்)Oliver Chace
தலைமையகம்Omaha, Nebraska, U.S.
சேவை வழங்கும் பகுதிWorldwide
முதன்மை நபர்கள்Warren E. Buffett
(Chairman & CEO)
Charles T. Munger
(Vice Chairman)
தொழில்துறைProperty and casualty insurance, Diversified investments
உற்பத்திகள்Conglomerate
வருமானம் US$ 107.786 billion (2008)
இயக்க வருமானம் US$ 7.574 billion (2008)
நிகர வருமானம் US$ 4.994 billion (2008)
மொத்தச் சொத்துகள் US$ 267.399 billion (2008)
மொத்த பங்குத்தொகை US$ 109.267 billion (2008)
பணியாளர்246,000 - Dec 2008
துணை நிறுவனங்கள்List of subsidiaries
இணையத்தளம்BerkshireHathaway.com

வாரன் பபெட் தான் இந்நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். பெர்க்‌ஷயர் ஹாதவே காப்பீட்டு செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் “மிதவைப் பணத்தை” (பாலிசிதாரர் கோரிப் பெறும் காலம் வரை தற்காலிகமாக நிறுவனத்திடம் இருக்கும் பாலிசிதாரரின் தொகை) தனது முதலீடுகளுக்கு நிதியாதாரமாக பயன்படுத்தியுள்ளார். பெர்க்‌ஷயர் நிறுவனத்தில் தனது ஆரம்ப காலத்தில், பொது வெளியீட்டு பங்குகளில் நீண்ட கால முதலீடுகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். ஆனால் மிக சமீபமாக மொத்த நிறுவனங்களையும் வாங்குவதை நோக்கி அவர் திரும்பியுள்ளார். ரயில்பாதைகள், மிட்டாய் உற்பத்திகள், சில்லரை வியாபாரம், வீட்டு அலங்காரம், அறிவுக் களஞ்சியங்கள், வாக்வம் கிளீனர்கள், நகை விற்பனை; பத்திரிகை வெளியீடு; சீருடைகளின் தயாரிப்பு மற்றும் விநியோகம்; காலணிகளின் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விநியோகம்; மற்றும் ஏராளமான பிராந்திய மின்சார மற்றும் எரிவாயு பயன்பாட்டு சாதனங்கள் தயாரிப்பு என பன்முகப்பட்ட வியாபாரத் துறைகளை பெர்க்‌ஷயர் இப்போது கொண்டுள்ளது.

வரலாறு

 
ஹாதவே மில்ஸ், நியூ பெட்ஃபோர்டு, மாஸ்.

பெர்க்‌ஷயர் ஹாதவே நிறுவனத்தின் மூலத்தை ஆராய்ந்தால், அது ரோட் ஐலண்ட், வாலி ஃபால்ஸில் 1839 ஆம் ஆண்டில் ஆலிவர் சாஸ் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட வாலி ஃபால்ஸ் நிறுவனம் என்னும் ஆடை தயாரிப்பு நிறுவனம் நிறுவப்பட்டதற்கு இட்டுச் செல்லும். முன்னதாக சாஸ், அமெரிக்காவில் முதல் வெற்றிகரமான நூற்பாலையை நிறுவிய சாமுவேல் ஸ்லேட்டரிடம் வேலை செய்து கொண்டிருந்தார். சாஸ் தனது முதல் நூற்பாலையை 1806 ஆம் ஆண்டில் நிறுவினார். 1929 ஆம் ஆண்டில் வாலி ஃபால்ஸ் நிறுவனம் மசாசூட்ஸின் ஆடம்ஸில் 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெர்க்‌ஷயர் பருத்தி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்தது. இந்த கூட்டு நிறுவனத்திற்கு பெர்க்‌ஷயர் ஃபைன் ஸ்பின்னிங் அசோசியேட்ஸ் என்று பெயரிடப்பட்டது.[2]

1955 ஆம் ஆண்டில் பெர்க்‌ஷயர் ஃபைன் ஸ்பின்னிங் அசோசியேட்ஸ் நிறுவனம், மசாசூட்ஸின் நியூ பெட்ஃபோர்டில் 1888 ஆம் ஆண்டு ஹோரேஷியோ ஹாதவே என்பவரால் நிறுவப்பட்ட ஹாதவே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்தது. ஹாதவே நிறுவனம் தனது ஆரம்ப தசாப்தங்களில் மிக வெற்றிகரமாய் திகழ்ந்தது, ஆனால் முதலாம் உலகப் போருக்குப் பின் நூற்பாலைத் துறையில் ஒரு பொதுவான சரிவு நிகழ்ந்ததை அடுத்து இந்நிறுவனமும் பாதிப்புக்குள்ளானது. இந்த சமயத்தில் ஹாதவே சீபரி ஸ்டாண்டன் என்பவரால் நடத்தப்பட்டு வந்தது, பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு இவரது முதலீட்டு முயற்சிகள் புதுப்பித்த லாப அளவுகளுடன் புகழ் பெற்றது. இந்த இணைப்புக்குப் பிறகு பெர்க்‌ஷயர் ஹாதவே நிறுவனம் 15 ஆலைகளைக் கொண்டிருந்தது, 12,000 பேருக்கும் அதிகமானோர் வேலை பார்த்தனர், 120 மில்லியன் டாலருக்கும் அதிகமாய் வருவாய் கிட்டியது, தலைமையகம் மசாசூட்ஸ் மாநிலத்தின் நியூ பெட்ஃபோர்டில் இருந்தது. ஆயினும், அந்த தசாப்தத்தின் இறுதியில் இந்த ஆலைகளில் ஏழு மூடப்பட்டன, அத்துடன் மிகப்பெரும் அளவில் ஆட்குறைப்புகளும் நிகழ்ந்தன.

1962 ஆம் ஆண்டில் வாரன் பபெட் பெர்க்‌ஷயர் ஹாதவே நிறுவனத்தில் பங்குகளை வாங்கத் துவங்கினார். ஸ்டாண்டன் குடும்பத்தாருடன் சிற்சில சச்சரவுகளுக்குப் பிறகு இன்னும் கூடுதலாய் பங்குகளை வாங்கி நிர்வாகத்தை மாற்றி விரைவில் நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

பபெட் ஆரம்பத்தில் பெர்க்‌ஷயரின் மைய வியாபாரமான நூற்பாலை வர்த்தகத்தை மட்டுமே பார்த்து வந்தார், ஆனால் 1967 வாக்கில், காப்பீட்டுத் துறை மற்றும் பிற முதலீடுகளுக்கும் அவர் விரிவாக்கம் செய்தார். நேஷனல் இன்டெம்னிட்டி கம்பெனி நிறுவனத்தை வாங்கி முதலில் பெர்க்‌ஷயர் காப்பீட்டு துறையில் காலடி பதித்தது. 1970களின் பிற்பகுதியில், பெர்க்‌ஷயர் நிறுவனம் அரசாங்க தொழிலாளர்கள் காப்பீட்டு நிறுவனத்தில் (GEICO) பங்குகளை வாங்கியது, இது தான் அதன் இன்றைய காப்பீட்டு செயல்பாடுகளில் பெரும்பகுதியைக் கொண்டதாய் உள்ளது (அத்துடன் பெர்க்‌ஷயர் ஹாதவே நிறுவனத்தின் மற்ற முதலீடுகளுக்கான ஒரு பெரிய மூலதன ஆதாரமாகவும் இது விளங்குகிறது). 1985 ஆம் ஆண்டில், கடைசி நூற்பாலை செயல்பாடுகளும் (ஹாதவேயின் வரலாற்று பாரம்பரிய தொழில்) மூடப்பட்டன.

பெருநிறுவன விவகாரங்கள்

பெர்க்‌ஷயரின் A வகுப்பு பங்கு 99,200 டாலருக்குas of திசம்பர் 31, 2009 விற்றது. நியூயார்க் பங்குச் சந்தையில் மிக உயர்ந்த விலையில் இருந்த பங்காக இது இருந்தது. இதற்கு ஒரு பாதிக் காரணம் அவர்கள் பங்குப் பிரிப்பும் செய்ததில்லை, ஈவும் வழங்கியதில்லை. மொத்த பெருநிறுவன வருவாய்களையும்

வரவுசெலவுக் கணக்கிலேயே வைத்துக் கொண்டதன் மூலம் தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு அனுமதி கிட்டா வண்ணம் ஆனது.  அக்டோபர் 23, 2006 அன்று 100,000 டாலருக்கும் அதிகமான விலையில் இப்பங்குகளின் விலை முடிந்தது. எல்லா காலத்திலும் உயர்ந்த விலையாக டிசம்பர் 13, 2007 அன்று 150,000 டாலர் விலையில் முடிந்தது.  விலை இவ்வளவு பெரியதாய் இருந்தாலும், இதன் பங்குகளின் புழக்கம் வெகு குறைவாக இருந்ததால் S&P 500 போன்ற பரந்த பங்குச் சந்தை குறியீடுகளில் பெர்க்‌ஷயர் சேர்க்கப்படவில்லை; ஆயினும் பெர்க்‌ஷயரின் B வகுப்பு பங்குகள் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் 50-1 என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டதை அடுத்து, S&P 500 குறியீட்டில் அறிவிக்கப்படவிருக்கும் நாளில் இருந்து பர்லிங்டன் நார்தர்ன் நிறுவனத்திற்குப் பதிலாக பெர்க்‌ஷயர் பட்டியலிடப்படும் என ஸ்டாண்டர்டு அண்டு பூவர்’ஸ் அறிவித்தது.[3]

பெர்க்‌ஷயரின் தலைமை நிர்வாக அதிகாரியான வாரன் பபெட் தனது முதலீட்டு அறிவுக்காகவும் பரந்த வர்த்தகங்களில் கொண்டிருக்கும் ஆழமான புரிதலுக்காகவும் மிகவும் மதிக்கப்படும் ஒரு மனிதர் ஆவார். அவருடைய வருடாந்திர நிறுவனத்தலைவரின் கடிதங்கள் பரவலாக வாசிக்கப்படுவதோடு மேற்கோள் காட்டப்படுவதும் உண்டு. அமெரிக்க பண மேலாளர்கள் இடையே எடுத்த கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் 2007 ஆம் ஆண்டில் மிக மதிக்கப்பட்ட நிறுவனமாக பெர்க்‌ஷயர் நிறுவனத்தை பேரன்’ஸ் இதழ் (Barron's Magazine) அறிவித்தது.[4]

As of 2005, பபெட் பெர்க்‌ஷயர் ஹாதவே நிறுவனத்தில் 38% பங்குகளைக் கொண்டிருந்தார். பெர்க்‌ஷயரின் துணைத் தலைவரான சார்லி மங்கரும் தன்னை ஒரு பில்லியனராக்கிக் கொள்ளும் அளவிற்கு போதுமான பங்குகளைக் கொண்டிருக்கிறார். இதேபோல் டேவிட் கோட்ஸ்மேன் மற்றும் ஃபிராங்க்ளின் ஓடிஸ் பூத் ஆகிய இருவரும் பெர்க்‌ஷயரில் ஆரம்பத்தில் செய்த முதலீடுகள் அவர்கள் இருவரையும் பில்லியனர்களாக்கி இருக்கின்றன. பில் கேட்ஸின் கேஸ்கேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் LLC நிறுவனம் தான் பெர்க்‌ஷயரில் இரண்டாவது பெரிய பங்குதாரராக இருக்கிறது, B வகுப்பு பங்குகளில் 5 சதவீத பங்குகளுக்கும் அதிகமாக இது கொண்டிருக்கிறது.

பெர்க்‌ஷயர் ஹாதவே நிறுவனப் பங்குகளின் விஷயத்தில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த பங்குகள் இதுவரை பங்குப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் ஒரு பங்கின் விலை மிக உயரத்தில் இருப்பதோடு இது பங்கின் புழக்கத்தையும் குறிப்பிடத்தக்க வகையில் குறைத்து விட்டுள்ளது. பங்குகளை பிரிக்க விரும்பாத நிலை, நிர்வாகம் குறைந்த கால ஊக வணிகர்களைக் காட்டிலும் நீண்ட கால முதலீட்டாளர்களை மட்டுமே ஈர்க்க விரும்புகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. ஆயினும் பெர்க்‌ஷயர் ஹாதவே ஒரு B வகுப்பு பங்குகளை உருவாக்கியது. இதன் ஒரு பங்கின் விலை (குறிப்பிட்ட நிர்வாக விதிகளின் படி) அதன் A வகுப்பு பங்குகளின் 130 விலையையும் ஒரு பங்குக்கான 1200 வாக்குரிமைகளையும் கொண்டிருக்கும்; 2010 ஜனவரி பிரிப்பிற்குப் பிறகு, A வகுப்பு பங்குகளின் 11,500 என்கிற விலையிலும் 110,000 என்கிற வாக்குரிமைகளையும் கொண்டிருக்கும். A வகை பங்குகள் வைத்திருப்போர் அதனை B வகையாக மாற்றிக் கொள்ள முடியும், ஆனால் B வகை கொண்டிருப்போர் அதனை A வகையாக்கிக் கொள்ள முடியாது. B வகுப்பு பங்குகளை உருவாக்க பபெட் தயக்கம் காட்டினார், ஆனால் பெர்க்‌ஷயர் போன்று தோற்றம் கொண்டதாய் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் யூனிட்-டிரஸ்ட்கள் உருவாவதை முறியடிப்பதற்காக அவர் இதனைச் செய்ய வேண்டியதானது. பபெட் 1995 ஆம் ஆண்டு பங்குதாரருக்கான கடிதத்தில் எழுதியது போல, “சமீபத்தில் தோன்றியிருக்கும் யூனிட் ட்ரஸ்ட்கள் இந்த இலக்குகளோடு சுற்றிக் கொண்டிருக்கின்றன. பெரும் கமிஷன் தொகைகளுக்காக இடைத்தரகர்கள் மூலம் அவை விற்கப்பட்டு விடும், இது அவர்களின் பங்குதாரர்கள் மீது மற்ற சுமையான செலவுகளைச் சுமத்தும், அத்துடன் அவை பெர்க்‌ஷயருக்கும் எனக்கும் சமீபத்தில் கிட்டியிருக்கக் கூடிய விளம்பரத்திலும் நமது கடந்த கால சாதனையாலும் கவரப்பட்டு முழு விவரங்களையும் கேட்காமல் வாங்குவோரிடையே பெருமளவில் விற்கப்படும். இதனால் ஏராளமான முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைய நேர்வது தான் நிச்சயமாக நேரும்.”

நெப்ராஸ்கா மாநிலத்தின் ஒமாஹா நகரில் உள்ள க்வெஸ்ட் மையத்தில் நடைபெறும் பெர்க்‌ஷயரின் வருடாந்தர பங்குதாரர் கூட்டத்திற்கு சராசரியாய் 20,000 பேர் வருவார்கள்.[5] 2007 ஆம் ஆண்டு கூட்டத்திற்கு சுமார் 27,000 பேர் வந்திருந்தனர். “முதலாளிகளுக்கான வுட்ஸ்டாக்” என்று அழைக்கப்படும் இந்த கூட்டங்கள், பேஸ்பால் விளையாட்டின் கல்லூரி உலக தொடருடன் சேர்ந்து ஒமாஹாவின் மிகப் பெரிய வருடாந்திர நிகழ்வாய் கருதப்படுகிறது.[6] கலகலப்புக்கும் மகிழ்ச்சிக்கும் பிரபலமான இந்த கூட்டங்கள் பொதுவாக பெர்க்‌ஷயர் பங்குதாரர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு படத்தின் திரையிடலுடன் துவங்கும். 2004 ஆம் ஆண்டில் அர்னால்டு ஸ்வார்ஸெனேகர் “தி வாரெனேட்டர்” பாத்திரத்தில் நடித்த திரைப்படம் வெளிவந்தது. இதில் மைக்ரோசாஃப்ட்-ஸ்டார்பக்ஸ்-வால்-மார்ட் மூலம் உருவாக்கப்படும் “மாபெரும்” நிறுவனத்தில் இருந்து உலககைக் காப்பாற்றுவதற்கு பபெட் மற்றும் முங்கெர் செய்யும் முயற்சியை நிறுத்துவதற்காக ஆர்னால்டு காலவெளியில் பயணம் செய்து வருகிறார். பின்னர் ஆர்னால்டு பபெட் உடன் உத்தேசம் 13 (Proposition 13) குறித்து உடற்பயிற்சி மையத்தில் விவாதிப்பதாய் காட்டப்படுகிறது.[7] 2006 திரைப்படத்தில் ஜேமி லீ கர்டிஸ் மற்றும் நிகோலெட் ஷெரிடன் ஆகிய நடிகைகள் முங்கர் மீது காமம் கொள்வதாய் விவரிக்கப்பட்டிருந்தது.[8] ஆறு மணி நேரம் திட்டமிடப்பட்டிருந்த இந்த கூட்டம், முதலீட்டாளர்களுக்கு பபெட்டிடம் கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்பை வழங்கியது.

தலைமை நிர்வாக அதிகாரிக்கான சம்பளம் எந்த பங்கு வாய்ப்புகளும் அளிக்கப்படாமல் வருடத்திற்கு 100,000 அமெரிக்க டாலர்கள் ஆகும். இது அமெரிக்காவில்[9] உள்ள பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் வாங்குவதில் மிகக் குறைந்த சம்பளங்களில்[10] ஒன்றாகும்.

ஆளுகை

பெர்க்‌ஷயர் ஹாதவே நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நடப்பு உறுப்பினர்களாக இருப்போர் பின்வருமாறு: வாரன் பபெட், சார்லி முங்கர், வால்டர் ஸ்காட், ஜூனியர், தாமஸ் எஸ்.மர்பி, ஹோவார்டு கிரஹாம் பபெட், ரோனால்டு ஓல்ஸன், டோனால்டு கியோ, சார்லோடெ கைமேன், டேவிட் கோடெஸ்மேன், பில் கேட்ஸ், ஸ்டீபன் பர்கே மற்றும் சூஸன் டெக்கர்.[11]

வர்த்தகங்கள்

காப்பீட்டுக் குழு

காப்பீடு மற்றும் மறுகாப்பீட்டு வர்த்தக நடவடிக்கைகள் 50க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. பெர்க்‌ஷயரின் காப்பீட்டு வர்த்தகங்கள் அமெரிக்காவில் பிரதானமாக சொத்து மற்றும் திடீர் செலவு அபாயங்களுக்கு காப்பீடு மற்றும் மறுகாப்பீட்டினை வழங்குகின்றன. இது தவிர, 1998 ஆம் ஆண்டில் ஜெனரல் ரீ நிறுவனம் கையகப்படுத்தப்பட்டதன் விளைவாக, பெர்க்‌ஷயரின் காப்பீட்டு வர்த்தகங்களில் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் சுகாதார மறுகாப்பீடுகளும் சேர்ந்துள்ளன. அத்துடன் சர்வதேச அடிப்படையிலான சொத்து மற்றும் திடீர் செலவின மறுகாப்பீட்டாளர்களும் இணைந்துள்ளனர். பெர்க்‌ஷயரின் காப்பீட்டு நிறுவனங்கள் மூலதன அளவை மிக உயர்ந்த அளவில் கொண்டிருக்கின்றன. இந்த வலிமை தான் பெர்க்‌ஷயர் காப்பீட்டு நிறுவனங்களை அதன் போட்டி நிறுவனங்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. மொத்தமாக, பெர்க்‌ஷயரின் அமெரிக்க அடிப்படையிலான காப்பீட்டு மொத்த உபரி அளவு டிசம்பர் 31, 2004 அன்று சுமார் 48 பில்லியன் டாலராக இருந்தது. பெர்க்‌ஷயரின் அனைத்து பெரிய காப்பீட்டு துணைநிறுவனங்களும் ஸ்டாண்டர்டு & பூவர்’ஸ் நிறுவனத்திடம் இருந்து AAA தரமதிப்பீடு பெற்றுள்ளன, இது ஸ்டாண்டர்டு & பூவர்’ஸ் வழங்கும் மிக உயர்ந்த நிதி வலிமை மதிப்பீடு ஆகும். அத்துடன் நிதி நிலைமை மற்றும் செயல்பாட்டு திறனுக்காக ஏ.எம்.பெஸ்ட் நிறுவனம் AAA+ (சுபீரியர்) தரமதிப்பீட்டை அளித்துள்ளது.

  • GEICO — பெர்க்‌ஷயர் 1996 ஆம் ஆண்டு ஜனவரியில் GEICO ஸ்தாபனத்தை வாங்கியது. GEICO மேரிலாண்ட் மாநிலத்தின் செவி சேஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ளது. இதன் பிரதான காப்பீட்டு துணை அமைப்புகளாக உள்ளவை பின்வருமாறு: அரசாங்க தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம், GEICO பொதுக் காப்பீட்டு நிறுவனம், GEICO இண்டெம்னிட்டி நிறுவனம், மற்றும் GEICO திடீர் செலவினக் காப்பீட்டு நிறுவனம். கடந்த ஐந்து வருடங்களில் இந்த நிறுவனங்கள் அனைத்து 50 மாநிலங்களிலும், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவிலும் பிரதானமாக தனிநபர்களுக்கு தனியார் பயணி வாகனக் காப்பீட்டை வழங்கி வருகின்றன. இத்துணை நிறுவனங்கள் அனைத்தும் தங்களது காப்பீட்டு திட்டங்களை நேரடி மறுமொழி வழிமுறைகள் மூலம் பயனாளர்களுக்குக் கொண்டு செல்கின்றன. இதில் காப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் நிறுவனங்களுக்கு நேரடியாக தொலைபேசி மூலமோ, அஞ்சல் மூலமோ அல்லது இணையம் மூலமோ சமர்ப்பிக்கப்படுகின்றன.
  • ஜெனரல் ரி — ஜெனரல் ரி நிறுவனத்தை பெர்க்‌ஷயர் 1998 ஆம் ஆண்டு டிசம்பரில் கையகப்படுத்தியது. டிசம்பர் 31, 2004 நிலவரப்படி ஜெனரல் ரி கலோன் ரி நிறுவனத்தில் 91% பங்குகளைக் கொண்டிருந்தது. ஜெனரல் ரி துணைநிறுவனங்கள் உலகெங்கும் சுமார் 72 நகரங்களில் மறுகாப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜெனரல் ரி பின்வரும் மறுகாப்பீட்டு வர்த்தகங்களில் செயல்படுகின்றது: வட அமெரிக்க சொத்து/திடீர் செலவினம், சர்வதேச சொத்து/திடீர் செலவினம். இவற்றில் பிரதானமாக கலோன் ரி மற்றும் ஃபாரடே செயல்பாடுகளும் ஆயுள்/சுகாதார மறுகாப்பீட்டு செயல்பாடுகளும் இருக்கின்றன. ஜெனரல் ரியின் மறுகாப்பீட்டு செயல்பாடுகள் பிரதானமாக கனெக்டிகட் மாநிலத்தின் ஸ்டாம்ஃபோர்டு மற்றும் ஜெர்மனியின் கலோன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. மொத்த பிரீமியத் தொகைகள் மற்றும் மூலதனத்தின் அடிப்படையில் உலகின் மிகப்பெரும் மறுகாப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாய் ஜெனரல் ரி திகழ்கிறது.
  • NRG (Nederlandse Reassurantie Groep) - ஒரு டச்சு மறுகாப்பீட்டு நிறுவனமான NRG நிறுவனத்தை 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் ING குழுமத்திடம் இருந்து பெர்க்‌ஷயர் வாங்கியது.[12]
  • பெர்க்‌ஷயர் ஹாதவே அசூரன்ஸ்: மாநகராட்சி மற்றும் அரசின் பத்திரங்களைக் காப்பீடு செய்வதற்கென அரசாங்க பத்திரக் காப்பீட்டு நிறுவனம் ஒன்றை பெர்க்‌ஷயர் உருவாக்கியது. பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், மற்றும் சாக்கடை அமைப்புகள் கட்டுவது போன்ற திட்டங்களுக்கு நிதியாதாரம் திரட்டுவதற்கு உள்ளூர் அரசாங்கங்களால் இந்த வகை பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த துறையில் வெகு சில நிறுவனங்களே போட்டியிட முடியும்.[12]

பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் எரிசக்தி குழுமம்

பெர்க்‌ஷயர் தற்போது மிட்அமெரிக்கன் எனர்ஜி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் 83.7 சதவீத (முழுக்க கரைத்த அடிப்படையில் 80.5 சதவீதம்) உரிமைத்துவம் கொண்டுள்ளது. வாங்கிய சமயத்தில், பெர்க்‌ஷயரின் வாக்களிக்கும் நலன் நிறுவனத்தின் 10% பங்குகளுக்கு உரிய அளவிலானதாக வரம்புபடுத்தப்பட்டு இருந்தது. 2005 ஆம் ஆண்டில் 1935 ஆம் ஆண்டின் பொதுப் பயன்பாட்டுப் பொருள் உரிமை நிறுவனச் சட்டம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த கட்டுப்பாடு அகன்றது. CE எலெக்ட்ரிக் யுகே என்பது மிட்அமெரிக்கன் நிறுவனத்தின் ஒரு பெரிய துணைநிறுவனம் ஆகும்.

உற்பத்தி, சேவை மற்றும் சில்லரை வியாபாரம்

ஆடைவகைகள்

பல்வேறு வகையான ஆடை மற்று காலணி வகைகளின் உற்பத்தியாளர்களாகவும் விநியோகஸ்தர்களாகவும் பெர்க்‌ஷயர் ஆடைப் பொருள் வர்த்தகங்கள் திகழ்கின்றன. யூனியன் அண்டர்வேர் கார்ப். - ஃபுருட் ஆஃப் தி லூம், கரான், ஃபெசெமியர் பிரதர்ஸ் மற்றும் ரஸல் கார்பரேஷன் ஆகியவை ஆடைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களாகும். எச்.எச். பிரவுன் ஷூ குரூப், ஆக்மி பூட்ஸ் மற்றும் ஜஸ்டின் பிராண்ட்ஸ் ஆகியவை பெர்க்‌ஷயரின் காலணி வர்த்தகங்களின் கீழ் வருபவை ஆகும். 835 மில்லியன் டாலர் தொகையை ரொக்கமாய் கொடுத்து ஃபுருட் ஆஃப் தி லூம் நிறுவனத்தை பெர்க்‌ஷயர் ஏப்ரல் 29, 2002 அன்று வாங்கியது. கெண்டகியில் உள்ள பவுலிங் கிரீனில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் இந்த ஃபுருட் ஆஃப் லூம் அடிப்படை ஆடை வகைகளின் தயாரிப்பு நிறுவனம் ஆகும். ரஸல் கார்பரேஷன் நிறுவனத்தை பங்கு ஒன்றிற்கு 18.00 டாலர் என்கிற விலையில் அல்லது 600 மில்லியன் டாலர் தொகை கொடுத்து ஆகஸ்டு 2, 2006 அன்று பெர்க்‌ஷயர் நிறுவனம் வாங்கியது.

கட்டிடப் பொருட்கள்

2000 ஆம் ஆண்டு ஆகஸ்டில், ஆக்மி பில்டிங் பிராண்ட்ஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் கட்டிடப் பொருட்கள் வர்த்தகத்தில் பெர்க்‌ஷயர் நுழைந்தது. டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் தலைமையகம் கொண்டுள்ள ஆக்மி நிறுவனம் செங்கற்கள் (ஆக்மி பிரிக்), கான்கிரீட் கட்டிகள் (ஃபெதர்லைட்) மற்றும் வெட்டிய சுண்ணாம்புக்கல் (டெக்சாஸ் குவாரிகள்) ஆகியவற்றை தயாரிக்கவும் விநியோகிக்கவும் செய்கிறது. பெஞ்சமின் மூரெ & கோ நிறுவனத்தை 2000 வது ஆண்டு டிசம்பரில் பெர்க்‌ஷயர் வாங்கியது. நியூ ஜெர்ஸி மாநிலத்தின் மோண்ட்வாலேயில் தலைமையகம் கொண்டுள்ள பெஞ்சமின் மூரெ நிறுவனம் பிரதான வகை கட்டுமானப் பூச்சுகளின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் சில்லரை விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது. இது பிரதானமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் கிடைக்கத்தக்கதாய் இருக்கிறது. ஜான்ஸ் மேன்விலி நிறுவனத்தை பெர்க்‌ஷயர் நிறுவனம் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வாங்கியது. JM நிறுவனம் கட்டுமானப் பொருட்கள் துறையில் 1885 ஆம் ஆண்டு முதல் சேவை செய்து வருகிறது. வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டிடங்களில் சுவர்கள், மாடங்கள் மற்றும் தரைகளுக்கான ஃபைபர் கண்ணாடி மின்காப்புப் பொருட்கள் தயாரிப்பிலும், அத்துடன் குழாய்கள், நீரோட்டப் பாதைகள் மற்றும் சாதன மின்காப்புப் பொருட்கள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு ஜூலையில் மிடெக் இன்க்[13] நிறுவனத்தில் பெர்க்‌ஷயர் 90% பங்குகளை வாங்கியது. மிசௌரி மாநிலத்தின் செஸ்டெர்ஃபீல்டில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் மிடெக் பொறியியல் இணைப்பான் தயாரிப்புகளையும், பொறியியல் மென்பொருள் மற்றும் சேவைகளையும் தயாரிக்கிறது. 2001 ஆம் ஆண்டில் பெர்க்‌ஷயர் ஷா இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தை வாங்கியது. ஜார்ஜியாவின் டால்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஷா, வருவாய் மற்றும் எண்ணிக்கை ஆகிய இரண்டு அடிப்படைகளிலும் உலகின் மிகப்பெரிய தரைவிரிப்பு தயாரிப்பாளர்களாய் விளங்குகிறது. சுமார் 30 வர்த்தகப் பெயர்களின் கீழும் சில குறிப்பிட்ட தனியார் சின்னங்களின் கீழும் வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்காக உபயோகப்படக் கூடிய 3000க்கும் மேற்பட்ட வகையான தரைவிரிப்பு வகைகளை ஷா வடிவமைத்து தயாரித்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 அன்று, பெர்க்‌ஷயர் கிளேடன் ஹோம்ஸ் நிறுவனத்தை வாங்கியது. டென்னெஸெ மாநிலத்தின் நாக்ஸ்வில்லி அருகில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கிளேடன் நிறுவனம் வீட்டுவசதித் தேவை தயாரிப்பு நிறுவனம் ஆகும். 2004 ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், கிளேடன் 12 மாநிலங்களில் 32 தயாரிப்பு ஆலைகளை இயக்கிக் கொண்டிருந்தது. கிளேடன் வீடுகளை 48 மாநிலங்களில் சுமார் 1,540 சில்லரை விற்பனையாளர்கள் சந்தைப்படுத்துகின்றனர். இவற்றில் 391 நிறுவனத்தின் சொந்த விற்பனை மையங்களாக உள்ளன.

விமான சேவைகள்

1996 ஆம் ஆண்டில், ஃபிளைட்சேஃப்டி இண்டர்னேஷனல் இன்க் நிறுவனத்தை பெர்க்‌ஷயர் வாங்கியது. இந்த FSI நிறுவனத் தலைமையகம் நியூயார்க், ஃபிளஷிங்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் அமைந்துள்ளது. விமானங்கள் மற்றும் கப்பல்களை இயக்குவோருக்கு உயர்தொழில்நுட்பத்தில் பயிற்சியளிக்கும் சேவையில் FSI பிரதானமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஃபிளைட்சேஃப்டி நிறுவனம் தொழில்முறை வானூர்தித் துறை பயிற்சி சேவைகள் வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாய் விளங்குகிறது. 1998 ஆம் ஆண்டில் நெட்ஜெட்ஸ் இன்க் நிறுவனத்தை பெர்க்‌ஷயர் வாங்கியது. பொதுவான பறக்கும் வானூர்திகளில் துண்டு உரிமைத்துவ திட்டங்களை வழங்குவதில் NJ உலகின் முன்னணி நிறுவனமாய் விளங்குகிறது. 1986 ஆம் ஆண்டில் வானூர்தியில் துண்டு உரிமைத்துவத் திட்டத்தை உருவாக்கிய NJ, அமெரிக்காவில் ஒரு வானூர்தி வகையுடன் தனது நெட்ஜெட்ஸ் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2004 ஆம் ஆண்டில் நெட்ஜெட்ஸ் திட்டத்தில் 15 வானூர்தி வகைகள் இயங்கின. 1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரு கூட்டு முயற்சி ஏற்பாட்டுடன் தனது துண்டு உரிமைத்துவ திட்டங்களை ஐரோப்பாவுக்கும் NJ விரிவுபடுத்தியது, அது இப்போது 100% NJ நிறுவனத்துக்கே சொந்தமானதாக இருக்கிறது. இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட வானூர்தி வகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கிக் கொள்ளலாம். அதன் பின் வருடத்திற்கு குறிப்பிட்ட மணி நேர விமானப் பயணங்களுக்கு அந்த விமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில்லரை விற்பனை

நெப்ராஸ்கா பர்னிச்சர் மார்ட், ஆர்.சி. வில்லி ஹோம் ஃபர்னிஷிங்ஸ், ஸ்டார் பர்னிச்சர் கம்பெனி, மற்றும் ஜோர்டான்’ஸ் பர்னிச்சர் ஆகியவை பெர்க்‌ஷயரின் வீட்டு உள்வடிவமைப்பு வர்த்தகங்கள் ஆகும். பெர்க்‌ஷயர் 80.1 சதவீத பங்குகளை கொண்டிருக்கும் அதன் துணைநிறுவனம் ஒன்று CORT பிஸினஸ் சர்வீசஸ் கார்பரேஷனை 2000வது ஆண்டில் வாங்கியது. இந்நிறுவனம் இப்போது வீட்டுச் சாமான்கள் வாடகைத் துறையில் வாடகைச் சாமான்கள், பொருட்கள் மற்றும் இவை தொடர்பான சேவைகள் வழங்குவதில் நாட்டின் முன்னணி நிறுவனமாய்த் திகழ்கிறது.

2002 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சமையலறை கருவிகள் விற்பனையில் மிகப்பெரும் நேரடி விற்பனையாளராய் இருக்கும் தி பாம்பர்டு செஃப் நிறுவனத்தை பெர்க்‌ஷயர் வாங்கியது. தயாரிப்புகளை ஆய்வு செய்வது, வடிவமைப்பது, மற்றும் சோதனை செய்வது ஆகியவை TPC மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மூன்றாம் தரப்பு உற்பத்தியாளர்கள் தயாரிக்கிறார்கள். இலினியாஸ் மாநிலத்தின் ஆடிஸன் நகரில் அமைந்துள்ள தனது தலைமையகத்தில் இருந்து TPC 65,000க்கும் அதிகமான சுதந்திரமான விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் பிரதானமாக அமெரிக்காவில் வீட்டு அடிப்படையிலான விளக்கக் காட்சிகள் மூலம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

ஸீ’ஸ் கேண்டிஸ் நிறுவனம் அடைக்கப்பட்ட சாக்கலேட் மற்றும் பிற மிட்டாய் வகைகளை கலிபோர்னியாவில் உள்ள பெரிய சமையலறைகளில் தயாரிக்கிறது. ஸீ’ஸ் நிறுவனத்தின் வருவாய் பருவங்களைப் பொறுத்து பெரிய அளவில் மாறுபடும், மொத்த வருவாயில் சுமார் 50% நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கிடைக்கும். டெய்ரி குவீன், ஆரஞ்ச் ஜூலியஸ் மற்றும் கர்மெல்கோர்ன் ஆகிய பெயர்களின் கீழ் இயங்கும் சுமார் 6,000 கடைகள் கொண்ட ஒரு அமைப்பைக் கொண்டு டெய்ரி குவீன் நிறுவனம் சேவையளிக்கிறது. இவை பால் உணவுகள், பானங்கள், தயாரிக்கப்பட்டு அளிக்கப்படும் உணவுகள், கலவை பழ பானங்கள், பாப் கார்ன் மற்றும் மற்ற நொறுக்கு தீனி உணவுகளை விற்பனை செய்து வருகின்றன.

மற்ற காப்பீடு-சாரா துறைகள்

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று மர்மோன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வாங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பிரிட்ஸ்கர் குடும்பத்தால் சொந்தம் கொள்ளப்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான கூட்டுநிறுவனமாகும். ரயில்பாதை கார்கள், பொருள் வாங்கும் தள்ளுவண்டிகள், குழாய்கள், உலோக திருகாணிகள், மற்றும் வீட்டு கட்டுமானத்தில் பயன்படும் மின்னிணைப்பு மற்றும் நீர் சுத்திகரிப்பு தயாரிப்புகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த கூட்டு நிறுவனத்தில் பங்குபெற்றிருந்தன.[14]

மெக்லேன் நிறுவனத்தை வால்மார்ட் ஸ்டோர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெர்க்‌ஷயர் 2003 ஆம் ஆண்டு மே மாதம் விலைக்கு வாங்கியது. இதன் மூலம் புரொஃபஷனல் டேட்டாசொல்யூஷன்ஸ் மற்றும் சாலடோ சேல்ஸ் மற்றும் இன்னும் சில துணைநிறுவனங்களும் பெர்க்‌ஷயரின் கீழ் வந்தன. அனைத்து 50 மாநிலங்கள் மற்றும் சர்வதேசரீதியாக பிரேசிலில் உள்ள தள்ளுபடி சில்லரை விற்பனையாளர்கள், கடைகள், துரித சேவை உணவகங்கள், மருந்துக் கடைகள் மற்றும் திரையரங்கு தொகுப்புகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு மெக்லேன் மொத்த விநியோகம் மற்றும் பொருள்வரத்து சேவைகளை வழங்கி வருகிறது. ஸ்காட் ஃபெட்ஸர் நிறுவனங்கள் - ஸ்காட் ஃபெட்ஸர் நிறுவனங்கள் 21 வர்த்தகங்களை கொண்ட ஒரு பன்முக வர்த்தக குழுமம் ஆகும். இந்நிறுவனங்கள் வீடுகள், தொழிலகங்கள் மற்றும் ஸ்தாபனங்களின் பயன்பாட்டுக்கான பல்தரப்பட்ட பொருட்களை தயாரிக்கவும் விநியோகிக்கவும் செய்கின்றன. கிர்பி வீடு சுத்தமாக்கல் சேவைகள், வேய்ன் நீர் சேவைகள் மற்றும் கேம்பல் ஹாஸ்ஃபெல்டு தயாரிப்புகள் ஆகியவை இந்த வர்த்தகங்களில் குறிப்பிடத்தகுந்த மூன்று ஆகும். கின்ஸு நைவ்ஸ் கத்திகளையும் ஸ்காட் ஃபெட்ஸர் தயாரிக்கிறது. நியூயார்க், பஃபலோ தலைமையகத்தில் இருந்து பஃபலோ நியூஸ் தினந்தோறும் ஒரு பதிப்பை வெளியிடுகிறது.

2002 ஆம் ஆண்டில் அல்பெக்கா நிறுவனத்தை பெர்க்‌ஷயர் வாங்கியது. அல்பெகாவின் தலைமையகம் ஜார்ஜியா மாநிலத்தில் நோர்கிராஸ் நகரில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் பிரதானமான வர்த்தகத்தை லார்ஸன்-ஜூல் பெயரின் கீழ் செய்கிறது. சட்டக தயாரிப்புகளை அல்பெகா வடிவமைக்கிறது, தயாரிக்கிறது மற்றும் விநியோகம் செய்கிறது. CTB இண்டர்னேஷனல் நிறுவனத்தை 2002 ஆம் ஆண்டில் பெர்க்‌ஷயர் வாங்கியது. இண்டியானா மாநிலத்தின் மில்ஃபோர்டில் தலைமையகம் கொண்டுள்ள CTB, தானியத்துறை மற்றும் மாமிசப் பறவை வளர்ப்பு, மற்றும் முட்டைகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அமைப்புகளின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டு வருகிறது. தயாரிப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை பிரதானமாக சுதந்திரமான விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களின் ஒரு உலகளாவிய வலைப்பின்னல் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனையின் உயர்ந்த அளவு இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் இருக்கும்.

நிதி மற்றும் நிதித் தயாரிப்புகள்

XTRA லீஸ் நிறுவனத்தை 2001 செப்டம்பரில் பெர்க்‌ஷயர் வாங்கியது. மிசௌரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் XTRA போக்குவரத்து சாதன குத்தகையில் முன்னணி நிறுவனமாகும். சுமார் 105,000 அலகுகள் கொண்ட ஒரு பன்முகப்பட்ட பிரிவை XTRA நிர்வகிக்கிறது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 31 நிலவரப்படி மொத்தமாய் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு இதில் இடப்பட்டுள்ளது. சாலை மீதான சேகரிப்பு டிரெய்லர்கள், சாஸிஸ் மற்றும் உள்நாட்டு கண்டெய்னர்கள் ஆகியவை இந்த தயாரிப்பு வரிசையில் அடங்கும்.

கிளேடனின் நிதி வர்த்தகம் (வீட்டு உரிமையாளர்களுக்கு கடன் வசதிகள்) 206 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது, இது 2007 ஆம் ஆண்டில் இருந்த 526 மில்லியன் டாலர் என்கிற அளவில் இருந்து வீழ்ச்சியாகும். கடன் இழப்புகள் 2.9 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக உயர்வு கண்டுள்ளது.[15]

முதலீடுகள்

பங்குகள் - ஆதாய உரிமைத்துவம்

வெளியில் இருக்கும் பங்குகளில் பெர்க்‌ஷயர் ஹாதவே 5% அல்லது அதற்கு அதிகமான பங்குகளைக் கொண்டிருக்கும் சில நிறுவனங்கள் அதன் கடைசி பதிலாள் அறிக்கை, SEC தாக்கல் மற்றும் சமீபத்திய வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பங்குகளின் சதவீத அடிப்படையில் அவற்றின் விவரம் வருமாறு:

பத்திரங்கள்

பெர்க்‌ஷயர் நிலையான வருவாய் பத்திரங்களில் 27 பில்லியன் டாலர் தொகைகளைக் கொண்டுள்ளது. இந்த பத்திரங்களில் பிரதானமானவை வெளிநாட்டு அரசாங்க பத்திரங்களும் பெருநிறுவனப் பத்திரங்களும் ஆகும்.[17]

மற்றவை

சமீபத்தில், பெர்க்‌ஷயர் நிறுவனம் ரிக்ளி, கோல்ட்மேன் சாக்ஸ், மற்றும் GE ஆகிய நிறுவனங்களில் 14.5 பில்லியன் டாலர் அளவுக்கு உரிமைப் பங்குகளை வாங்கியுள்ளது.[18]

26 பில்லியன் டாலர் அளவுக்கான பங்கு மற்றும் ரொக்கத்தின் துணையோடு, BNSF ரயில்வேயில் தான் இதுவரை வாங்காமல் எஞ்சியிருக்கும் பங்குகளையும் வாங்கவிருப்பதாக 2009 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று பெர்க்‌ஷயர் ஹாதவே அறிவித்தது.[19] பெர்க்‌ஷயரின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய கையகப்படுத்தல் அளவாகும்.

சொத்துகள்

குறிப்புகள்

  1. Warren Buffett. "Chairman's letter" (PDF). Berkshire Hathaway 2008 Annual Report. p. 5. பார்க்கப்பட்ட நாள் February 28, 2009.
  2. பிராவிடன்ஸ் ஜர்னல் கட்டுரை ஜூலை 10, 2006
  3. "Berkshire Hathaway to join S&P 500, shares soar". Reuters. 2010-01-26. http://www.reuters.com/article/idUSTRE60P6OO20100126?type=globalMarketsNews. பார்த்த நாள்: 2010-01-26. 
  4. அசோசியேடட் பிரஸ். வாரன் பபெட்டின் பெர்க்‌ஷயர் ஹாதவே நிறுவனம் மிக மரியாதைக்குரிய நிறுவனமாய் குறிப்பிடப்பட்டுள்ளது. ", செப்டம்பர் 16, 2007
  5. தைபெய் டைம்ஸ்
  6. CNN
  7. [1]
  8. [2]
  9. பெர்க்‌ஷயர், ஈடான தொகை மற்றும் அடுத்த தலைவர்கள் குறித்து பபெட் - மே. 5, 2007
  10. "வாரன் பபெட்: முழுக்க முழுக்க மதிப்புகளின் மனிதர்", ஃபோர்ப்ஸ்.காம்
  11. "Berkshire Hathaway Inc. (BRKA): Board of Directors". BusinessWeek. New York City: McGraw-Hill. பார்க்கப்பட்ட நாள் 2010-01-12.
  12. 12.0 12.1 பெர்க்‌ஷயர் ஹாதவே மறுகாப்பீட்டு நிறுவனத்தை வாங்கவிருக்கிறது, பத்திரக் காப்பீடு வர்த்தகத்தை துவங்குகிறது - மார்க்கெட்வாட்ச்
  13. www.mii.com
  14. http://www.berkshirehathaway.com/news/dec2507.pdf
  15. "Chairman's letter" (PDF). Berkshire Hathaway 2008 Annual Report, p.13.
  16. பர்லிங்டன் கையக நடவடிக்கையில் பங்குகளை பயன்படுத்துவதை பபெட் ஆதரிக்கிறார்
  17. நிர்வாக விவாதம் , பெர்க்‌ஷயர் ஹாதவே 2008 வருடாந்திர அறிக்கை, ப.71
  18. நிறுவனத் தலைவரின் கடிதம் , பெர்க்‌ஷயர் ஹாதவே 2008 வருடாந்திர அறிக்கை, ப.18
  19. ரயில்பாதைகளின் வருங்காலம் மீது பபெட் பெரும் நம்பிக்கை வைக்கிறார்

புற இணைப்புகள்

வார்ப்புரு:Companies portal

வார்ப்புரு:Berkshire Hathaway

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்க்சயர்_ஹாதவே&oldid=523540" இலிருந்து மீள்விக்கப்பட்டது