இரத்தச் சர்க்கரைக் குறைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Manjuudupa (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Hypoglycemia (revision: 353156124) using http://translate.google.com/toolkit with about 98% human translations.
(வேறுபாடு ஏதுமில்லை)

07:05, 13 மே 2010 இல் நிலவும் திருத்தம்

இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது ஹைப்போகிளைசீமியா என்பது சாதாரண இரத்த குளூக்கோஸ் மட்டத்தைவிடக் குறைவான நிலையால் உருவாக்கப்பட்ட நிலையைக் குறிக்கின்ற மருத்துவச் சொல்லாகும்.[1] இந்தச் சொல்லின் நேரடிப் பொருள் "குறைந்த-இனிப்பு இரத்தம்" (Gr. hypo- , glykys , haima ) என்பதாகும்.

Hypoglycemia
Glucose meter
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉட்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E16.0-E16.2
ஐ.சி.டி.-9250.8, 251.0, 251.1, 251.2, 270.3, 775.6, 962.3
நோய்களின் தரவுத்தளம்6431
மெரிசின்பிளசு000386
ஈமெடிசின்emerg/272 med/1123 med/1939 ped/1117
பேசியண்ட் ஐ.இஇரத்தச் சர்க்கரைக் குறைவு
ம.பா.தD007003

இரத்தச் சர்க்கரைக் குறைவானது பல்வேறு நோயறிகுறிகள் மற்றும் விளைவுகளை உருவாக்கலாம், ஆனால் இதன் முக்கியமான சிக்கலானது மூளைக்கு எரிபொருளாகச் செல்லும் குளூக்கோஸ் பற்றாக்குறையாக இருப்பதால் செயல்பாடு வலுக்குறைவு (மூளை திறனை மாற்றும் இரத்த சருக்கரை குறை நோய்) ஏற்படுவதன் காரணமாகவே ஏற்படுகிறது. விளைவுகளானவை மிகச்சிறிதளவில் "உடல்நிலை சரியில்லாததாக உணர்வதில்" இருந்து வலிப்புத்தாக்கங்கள், உணர்ச்சியற்றநிலை மற்றும் (அரிதாக) நிரந்தரமான மூளைப் பாதிப்பு அல்லது இறப்பு வரை வேறுபடலாம்.

நடுத்தர மற்றும் தீவிரமான இரத்தச் சர்க்கரைக் குறைவின் மிகச் சாதாரண வடிவங்களானவை இன்சுலின் அல்லது வாய்வழி மருந்துகளுடன் நீரிழிவு நோய்க்குக் கொடுக்கப்படும் சிகிச்சையின் சிக்கலாகவே ஏற்படும். நீரிழிவு இல்லாத நபர்களில் இரத்தச் சர்க்கரைக் குறைவு என்பது குறைவாகவே உள்ளது, ஆனால் எந்த வயதிலும் பல காரணங்களால் ஏற்படக்கூடியது. இதை ஏற்படுத்தும் காரணிகளில் உடலில் உருவாக்கப்படும் அளவுக்கு அதிகமான இன்சுலின், மாச்சத்து, கொழுப்பு, அமினோ அமிலம் அல்லது சேதன அமில வளர்சிதை மாற்றத்திலுள்ள உடன்பிறந்த பிழைகள் , மருந்துகள் மற்றும் நஞ்சுகள், ஆல்கஹால், வளரூக்கி பற்றாக்குறைகள், குறித்த கட்டிகள், நாட்பட்ட பட்டினி மற்றும் தொற்று அல்லது பல்வேறு உறுப்புத் தொகுதிகளுடன் தொடர்பான வளர்சிதை மாற்றத்தின் மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

டெக்ஸ்ட்ரோஸ் அல்லது குளூக்கோசாக விரைவில் சமிபாடடையக்கூடிய மாச்சத்து உணவுகளை உட்செலுத்துதல் அல்லது உள்ளெடுத்தல் மூலம் இரத்த குளூக்கோஸ் மட்டத்தை சாதாரண நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு விரைவில் சிகிச்சையளிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் குளூக்கோகானை ஊசிமூலம் செலுத்தி அல்லது குழாய்வழியாக உட்செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய்க்கான அடிப்படைக் காரணத்தை சாதகமாக்குவதன்மூலம் அல்லது நீக்குவதன்மூலம், டயாசொக்சைட், ஆக்டிரோடைட் அல்லது குளூக்கோகார்ட்டிகாய்டுகள் போன்ற மருந்துகளுடன் உணவுகளை உள்ளெடுக்கும் தடவைகளை அதிகரிப்பதன்மூலம் அல்லது கணையத்தை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குவதன் மூலமும் கூட நாட்பட்ட அல்லது மீண்டும் மீண்டும் வரும் இரத்தச் சர்க்கரைக் குறைவை தடுக்கலாம்.

இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தீர்மானிக்கப் போதுமான குறைந்தபட்ச இரத்த குளூக்கோஸ் மட்டமானது நபருக்கு நபர், வேறுபட்ட சந்தர்ப்பங்களில் மற்றும் வேறுபட்ட நோக்கங்களுக்காக மாறுபடலாம். சர்ச்சைக்குரிய ஒரு விசயமாகவும் இடைக்கிடை இருந்துள்ளது. பெரும்பாலான ஆரோக்கியமான, வயதுவந்த நபர்கள் தங்கள் உண்ணா விரதம் இருக்கும்போதான குளூக்கோஸ் மட்டங்களை 70 mg/dL (3.9 mmol/L) இலும் மேலாகப் பேணுகிறார்கள். இவர்களின் குளூக்கோஸ் 55 mg/dL (3 mmol/L) மட்டத்தைவிடக் குறையும்போது இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான நோயறிகுறிகள் தோன்றும்.[2]

இரத்தச் சர்க்கரைக் குறைவு காரணமாகத்தான் ஒருவருக்கு நோயறிகுறிகள் ஏற்பட்டனவா என்பதைத் தீர்மானிப்பது சிலவேளைகளில் கடினமானது. தனிநபர் ஒருவரின் நோயறிகுறிகளானவை பின்வரும் வேறு சில காரணங்களுக்குப் பதிலாக இரத்தச் சர்க்கரைக் குறைவுக்குரிய பண்மை ஏற்படுத்தக்கூடியன என்ற தீர்மானிக்கப்பட்ட சான்றைக் கூறும் விப்பிள் முக்கூற்றுத்தொகுதியை குறிக்கும் அளவைகளை நாளமில்லாச் சுரப்பு மருத்துவர்கள் (குளூக்கோஸ் வளர்சிதை மாற்றம குறைபாடுகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள்) பொதுவாகக் கருத்திலெடுக்கின்றனர்:[3]

  1. இரத்தச் சர்க்கரைக் குறைவினால் ஏற்படுத்தப்பட்டதாக அறிந்த நோயறிகுறிகள்
  2. நோயறிகுறிகள் ஏற்படும் சமயத்தில் குறைந்த குளூக்கோஸ்
  3. குளூக்கோசை சாதாரண நிலைக்கு மீளமைக்கும்போது நோயறிகுறிகள் புறமாறுதல் அல்லது மேம்பாடடைதல்

இரத்தச் சர்க்கரைக் குறைவு (பொதுவான பயன்பாடு) என்பது பிரபலமான பண்பாட்டிலுள்ள ஒரு சொல்லுமாகும். அது பொதுவான, அடிக்கடி தானாகவே கண்டறிந்த, நடுக்கத்தாலும் மாறிய மனநிலை மற்றும் சிந்தனையாலும் குறித்துக்காட்டப்படும், ஆனால் அளக்கப்பட்ட குறைந்த குளூக்கோஸ் அல்லது தீவிரமான கேட்டுக்கான ஆபத்து இல்லாதநிலைக்கான மாற்று மருந்து ஆகும். இதற்கு சாப்பிடும் முறைகளை மாற்றுவதன் மூலம் சிகிச்சையளிக்கப்படும்.

இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தீர்மானித்தல்

இரத்தச் சர்க்கரைக் குறைவு எனப்படுகின்ற மருத்துவ நிலமைகளை அனைத்து மக்களிலும், குறிக்கோள்களுக்குமாக வரையறுக்க ஒரு தனித்த குளூக்கோஸ் மதிப்பு மட்டுமே செயலாற்றாது. சாப்பிடுதல், சமிபாடு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றின் 24 மணிநேர சுழற்சி முழுவதும், மழலைப் பருவத்தைக் கடந்த ஆரோக்கியமான மக்களின் இரத்த பிளாஸ்மா குளூக்கோஸ் மட்டங்கள் பொதுவாக 72 மற்றும் 144 mg/dL (4-8 mmol/L) ஆகியவற்றுக்கிடையில் ஒரு 24 மணிநேர காலம் முழுவதும் பேணப்படும்.[4]:11 சாதாரண குளூக்கோஸின் குறைந்த மட்டமாக பொதுவாக 60 அல்லது 70 mg/dL (3.3 அல்லது 3.9 mmol/L) என்பது குறிப்பிடப்படுகின்றபோதும், வேறுபட்ட மக்கள் தொகைகளுக்கு, மருந்துசார் நோக்கங்களுக்கு அல்லது சந்தர்ப்பங்களுக்கு வேறுபட்ட மதிப்புகள் (பொதுவாக 40, 50, 60 அல்லது 70 mg/dL க்குக் கீழே) வரையறுக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆரோக்கியமான பலர், நோயறிகுறிகள் அல்லது நோய் ஏதுமில்லாமல் ஆனால் தமது குளூக்கோஸ் மட்டங்களை இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய வரம்பில் இடைக்கிடை கொண்டிருக்கலாம்.

இரத்தச் சர்க்கரைக் குறைவை வரையறுப்பதற்கு குறைந்தபட்சமாகப் போதும் எனக் கருதப்படும் துல்லியமான குளூக்கோஸ் மட்டமானது 1) அளவீட்டு முறை, (2) நபரின் வயது, (3) விளைவுகள் இருத்தல் அல்லது இல்லாமை மற்றும் (4) வரையறுப்பின் நோக்கம் ஆகியவற்றில் தங்கியுள்ளது. இரத்த சர்க்கரையின் சாதாரண வரம்புகுறித்து எதுவித உடன்பாடின்மையும் இல்லாத நிலையில், எந்த அளவான இரத்தச் சர்க்கரைக் குறைவானது மருத்துவ மதிப்பாய்வு அல்லது சிகிச்சை அல்லது தீங்கை ஏற்படுத்தக்கூடும் என்பது பற்றிய விவாதம் தொடர்கிறது.[5][6][7]

அமெரிக்கா, ஜப்பான், ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், எகிப்து மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் குளூக்கோஸ் செறிவுகள் டெசிலிட்டர் ஒன்றுக்கு மில்லிமூல்கள் (mg/dL அல்லது mg/100 mL) என்ற வீதத்தில் குறிப்பிடப்படுகின்ற போதிலும், உலகின் பிற அநேக பாகங்களில் லிட்டர் ஒன்றுக்கு மில்லிமூல்கள் (mmol/L அல்லது mM) என்பதே பயன்படுத்தப்படுகின்றது. mg/dL ஆகக் கூறப்படும் குளூக்கோஸ் செறிவுகளை 18.0 g/dmol ஆல் (குளூக்கோசின் மூலர் திணிவு) வகுப்பதன் மூலம் mmol/L ஆக மாற்றலாம். எடுத்துக்காட்டாக, 90 mg/dL குளூக்கோஸ் செறிவானது 5.0 mmol/L அல்லது 5.0 mM என்பதாகும்.

அளவீட்டு முறை

இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்பட்ட இரத்த குளூக்கோஸ் மட்டங்கள் மருத்துவ ஆய்வுகூடங்களில் பயன்படுத்தப்படும் இயல்பான, தானியங்கு குளூக்கோஸ் ஆக்சிடேஸ் முறைகளால் அளவிடப்பட்ட நாளங்கள் சார்ந்த பிளாஸ்மா அல்லது நீர்ப்பாய மட்டங்களாகும். மருந்து குறித்த நோக்கங்களுக்காக, பிளாஸ்மா மற்றும் நீர்ப்பாய மட்டங்கள் ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்ளப் போதுமான அளவுக்கு ஒரேமாதிரியானவை. தமனி சார்ந்த பிளாஸ்மா அல்லது நீர்ப்பாய மட்டங்கள் நாளங்கள் சார்ந்த மட்டங்களைவிட சிறிதளவு அதிகமாகும். மயிர்த்துளைக்குழாய் மட்டங்கள் பொதுவாக தமனி சார்ந்த மற்றும் நாளங்கள் சார்ந்த மட்டங்களுக்கு இடையில் உள்ளது.[8] உண்ணாவிரதமிருக்கும் நிலையில் தமனி சார்ந்த மற்றும் நாளங்கள் சார்ந்த மட்டங்களிற்கு இடையிலான வேறுபாடு சிறிதளவாகும், ஆனால் உணவுக்குப் பின்னான நிலையில் இதைப் பெருப்பித்து, 10% ஐவிட அதிகமாக்கலாம்.[9] மற்றொருவகையில், முழு இரத்த குளூக்கோஸ் மட்டங்களும் (எ.கா., பிங்கர்பிரிக் அளவு மானிகள் மூலம்) நாளங்கள் சார்ந்த பிளாஸ்மா மட்டங்களைவிட கிட்டத்தடட் 10%-15% குறைவானவை.[8] மேற்கொண்டு, கிடைக்கின்ற பிங்கர்ஸ்டிக் குளூக்கோஸ் அளவு மானிகள் உகப்பான நிலமைகளின் கீழ் சமகாலத்தில் நிகழுகின்ற ஆய்வுகூட மதிப்பின் 15% க்குள் மட்டுமே துல்லியமாக இருக்க உத்தரவாதம் அளிக்கிறது. இரத்தச் சர்க்கரைக் குறைவு விசாரணைகளில் வீட்டில் பயன்படுத்துவதானது தவறாக வழிநடத்தும் குறைவான எண்களுடன் அச்சுறுத்துகிறது.[10][11] அதாவது, 39 mg/dL என்ற ஒரு அளவு மானி குளூக்கோஸ் வாசிப்பை ஆய்வுகூட நீர்ப்பாய குளூக்கோஸ் 53 mg/dL ஆகவுள்ள ஒரு நபரிடமிருந்து முறையாகப் பெறலாம்; மேலும் "உண்மையான உலக" வீட்டுப் பயன்பாட்டுடன் பரந்த வெறுபாடுகளும் கூட ஏற்படலாம்.

குளூக்கோஸ் அளவீட்டை இரு வேறு காரணிகள் கணிசமாகப் பாதிக்கின்றன: இரத்தச் சிவப்பணு கன அளவு மானி மற்றும் இரத்த எடுத்ததன் பின்னான தாமதம். புதிதாய்ப் பிறந்த கைக்குழந்தைகள் அல்லது கூடுதலான இரத்தச் சிவப்பணுக்கள் எண்ணிக்கையுடனான வயதுவந்தவர்களில் உள்ளதுபோல, இரத்தச் சிவப்பணு கன அளவு மானி உயர்வாக இருக்கும்போது நாளங்கள் சார்ந்த மற்றும் முழு இரத்த செறிவுகள் ஆகியவற்றுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வானது அதிகமாக இருக்கும்.[9] புதிதாய்ப் பிறந்த குழந்தையில் உயர் இரத்தச் சிவப்பணு கன அளவு மானிகள் குறிப்பாக அளவுமானியால் அளக்கப்பட்ட குளூக்கோஸ் அளவீட்டைக் குழப்புவது போலத் தோன்றுகின்றன. இரண்டாவது, மாதிரிப்பொருளை புளோரைட்டு குழாயினுள் எடுத்தாலன்றி அல்லது கலங்களிலிருந்து நீர்ப்பாயம் அல்லது பிளாஸ்மாவைப் பிரிக்க உடனடியாகச் செயற்படுத்தினால் அன்றி, அளவிடக்கூடிய குளூக்கோசானது கிட்டத்தட்ட 7 mg/dL/hr வீதத்தில் அல்லது வெள்ளணு மிகைப்பு இருக்கும்போது மேலும் கூடுதல் வீதத்தில் உயிர்க் கலங்களில் குளூக்கோசின் வளர்சிதை மாற்றத்தால் படிப்படியாகக் குறைக்கப்படும்.[9][12][13] இரத்தமானது செயற்கைக்கோள் பகுதியில் எடுக்கப்பட்டு, வழக்கமான செயலாக்கத்துக்காக மத்திய ஆய்வுகூடத்துக்கு மாற்றப்படும்போது ஏறபடும் மணிக்கணக்கான தாமதமே பொதுவான வேதியியல் குழுக்களில் ஆபத்தின்றிய குறைவான குளூக்கோஸ் மட்டங்கள் தோன்றுவதற்கான பொதுவான காரணமாகும்.

வயது வேறுபாடுகள்

சிறுவர்களின் இரத்தச் சர்க்கரை மட்டங்கள் பெரும்பாலும் வயதானவர்களைவிட சிறிதளவுக்குக் குறைவாகவே காணப்படும். ஓரிரவு முழுவதும் உண்ணாவிரதம் இருக்கும்போதான குளூக்கோஸ் மட்டங்கள், ஆரோக்கியமான வயதுவந்தவர்களின் 5% ஆனவர்களில் 70 mg/dL (3.9 mM) க்குக் குறைவாக இருக்கும், ஆனால் காலை நேரத்தில் சாப்பிடாமல்விடும் நிலையில் 5% வரையான சிறுவர்களின் இது 60 mg/dL (3.3 mM) இலும் குறைவாக இருக்கலாம்.[14] உண்ணாவிரதம் இருக்கும் காலம் நீண்டு செல்லும்போது, கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் ஒரு பெரிய சதவீதத்தினர் குறைவான பிளாஸ்மா குளூக்கோஸ் மட்டங்களைக் கொண்டிருப்பர். இவர்களுக்கு பொதுவாக நோயறிகுறிகள் இருக்கமாட்டாது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இரத்தச் சர்க்கரையின் சாதாரண வரம்பானது தொடர்ந்தும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது.[5][6][7] குளூக்கோஸ் மட்டங்கள் உடனடியாகக் குறையும்போது, வயது வந்தவர்களைவிட புதிதாகப் பிறந்தவர்களின் மூளைகள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தும் திறனுள்ளவையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்து ஒரு நாளின் பின்னர் 60–70 mg/dL க்கும் மேலான குளூக்கோஸ் மட்டங்களைப் பேணுமபடி பரிந்துரைக்கும் நிலை வந்துள்ளபோதும், இந்த மட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் ஆபத்தை இப்போதும் நிபுணர்கள் தொடர்ந்து விவாதிக்கிறார்கள்.

விளைவுகள் இருக்கின்றமை அல்லது இல்லாமை

மூளையின் செயல்திறன் சிறிதளவுக்குக் குறைவதாக ஆரோக்கியமான வயது வந்தவர்களில் மேற்கொண்ட ஆராய்ச்சி காண்பிக்கிறது, ஆனால் பலரில் இரத்த குளூக்கோஸ் 65 mg/dL (3.6 mM) மட்டத்திலும் கீழ்ச் செல்கின்றபோதும் அளக்கக் கூடியது. வளரூக்கிக்குரிய பாதுகாப்பு பொறிமுறைகள் (அதிரனலின் மற்றும் குளூக்கோகான்) பொதுவாக அவை குறைந்தபட்ச வரம்புக்குக் கீழே (பெரும்பாலானவர்களில் சுமார் 55 mg/dL (3.0 mM)) செல்லும்போது செயற்படுநிலைக்குக் கொண்டுவரப்படும். இந்த நிலையில் பொதுவான இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய நோயறிகுறிகளான நடுக்கம் மற்றும் அமைதியற்ற மன நிலை ஆகியவை உண்டாகும்.[15]:1589 குளூக்கோஸ் 40 mg/dL (2.2 mM) மட்டத்துக்குக் கீழாகச் செல்லும்வரை தெளிவான வலுக்குறைகள் எதுவும் ஏற்படாதிருக்கலாம். ஆரோக்கியமானவர்களில் பலரும், வெளிப்படையான விளைவுகள் எதையும் காண்பிக்காமல் 65 ஐவிடக் குறைவான குளுக்கோஸ் மட்டங்களை இடைக்கிடை கொண்டிருக்கலாம். மூளை திறனை மாற்றும் இரத்த சர்க்கரை குறை நோய் எனக் குறிப்பிடப்படுகின்ற இரத்தச் சர்க்கரைக் குறைவின் மூளை விளைவுகள் ஒரு நோயாளிக்குக் கொடுக்கப்பட்ட குறைந்த குளூக்கோஸ் அவருக்குச் "சிக்கலாக" இருக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், மிதமாகக் குறைந்த குளூக்கோஸ் மட்டமானது நோயறிகுறிகள் அல்லது மூளை விளைவுகளுடன் சேர்ந்து வரும்போது மட்டுமே இரத்தச் சர்க்கரைக் குறைவு என்ற சொல்லைப் பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துவர்.

இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய நோயறிகுறிகளும், விளைவுகளும் குழப்பமானவையாகவும், அவற்றைப் பிற நிலமைகளும் உருவாக்கக்கூடியதாக உள்ளதாலும், இந்த வரைவிலக்கணத்தில் இரு பகுதிகளுமே உள்ளன என்பதைத் தீர்மானித்தல் என்பது எப்போதுமே நேரடியானதாக இருக்காது. திரும்பத்திரும்ப குறைந்த குளூக்கோஸ் மட்டங்களைக் கொண்ட நபர்கள் அவர்களின் குறைந்தபட்ச வரம்பு நோயறிகுறிகளை இழக்கலாம். ஆகவே மூளை திறனை மாற்றும் இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய வலுக்குறையானது அதிகளவு எச்சரிக்கை இல்லாமல் ஏற்படலாம். மேலும் பல அளவீட்டு முறைகள் (குறிப்பாக குளூக்கோஸ் அளவுமானிகள்) குறைந்த மட்டங்களில் துல்லியமற்றவை ஆகும்.

நீரிழிவு இரத்தச் சர்க்கரைக் குறைவு என்பது பலதரப்பட்ட காரணங்களுக்காக அளவிடப்பட்ட குளூக்கோஸ் மற்றும் இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய நோயறிகுறிகளின் தொடர்புகள் குறித்து ஒரு சிறப்புச் சந்தர்ப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும். முதலில், வீட்டு குளூக்கோஸ் அளவுமானியின் வாசிப்புகள் அடிக்கடி தவறாக வழிநடத்துகின்றபோதும், அந்த குறைந்த வாசிப்புடன் நோயறிகுறிகள் இணைந்திருந்தனவா இல்லையா என்பதற்கான நிகழ்தகவானது, இன்சுலின் எடுக்காத மற்றவரைவிட அதை எடுக்கும் நபரில் உண்மையான இரத்தச் சர்க்கரைக் குறைவு அதிகமாக இருக்கும் என்பதைப் பிரதிநிதித்துவம் செய்யும்[16][17]. இரண்டாவது, உட்செலுத்தப்படும் இன்சுலினை "நிறுத்த" முடியாது என்பதால், இரத்தச் சர்க்கரைக் குறைவின் பிற வடிவங்களுடன் ஒப்பிடும்போது, நீரிழிவு இரத்தச் சர்க்கரைக் குறைவுக்குச் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அது ஆபத்தான வலுக்குறைவாக தொடர்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. மூன்றாவது, நீரிழிவுள்ள நோயாளிகளில் நீண்ட காலங்களுக்கு (மணிநேரங்கள், நாட்கள் அல்லது மாதங்களு) குளூக்கோஸ் மட்டங்கள் பெரும்பாலும் சாதாரண மட்டத்தை விட மேலாக இருப்பதால், வழக்கமாக சாதாரண மட்டத்தில் இரத்த சர்க்கரையைக் கொண்டுள்ளவர்களுடன் ஒப்பிடும்போது, இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய நோயறிகுறிகள் சிலவேளைகளில் உயர் குறைந்தபட்ச வரம்புகளிலேயே ஏற்படக்கூடும். இந்த அனைத்து காரணங்களுக்காகவும், நீரிழிவுள்ள நோயாளிகளில் உயர் அளவுமானி குளூக்கோஸ் குறைந்தபட்ச வரம்புகள் பெரும்பாலும் "இரத்த சர்க்கரை குறை நோய்க்குரியவை" எனக் கருதப்படுகின்றன.

வரைவிலக்கண நோக்கம்

மேலுள்ள பத்திகளில் விவரிக்கப்பட்ட அனைத்து காரணங்களுக்காகவும், ஒரு இரத்த குளூக்கோசானது 45–75 mg/dL (2.5-4.2 mM) என்ற எல்லைக்கோட்டு வரம்பிலுள்ளதா என்பதைத் தீர்மானித்தலானது, மருத்துவத்தில் சிக்கலுக்குரிய இரத்தச் சர்க்கரைக் குறைவு எப்போதுமே எளிமையல்ல என்பதைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இது மக்களை வேறுபட்ட சூழல்களில் வேறுபட்ட நோக்கங்களுக்காக குளூக்கோசின் வேறுபட்ட "வெட்டு மட்டங்களைப்" பயன்படுத்துமாறு வழிகாட்டுகிறது. மேலே பட்டியலிடப்பட்ட அனைத்து புள்ளிவிவர மற்றும் கணிப்பீட்டு மாறுபாடுகள் காரணமாக, இரத்தச் சர்க்கரைக் குறைவை ஒரு தனிப்பட்ட நபருக்குரிய சிக்கலாகக் கண்டுபிடித்தலானது குறைந்த குளூக்கோஸ் மட்டத்தினதும் கேடான விளைவுகளினதும் சேர்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும் என எண்டோகிரைன் சொசைட்டி பரிந்துரைக்கிறது.[3]

நோய்க்கூறு உடலியல்

அநேகமான விலங்கு இழையங்கள் போல மூளை வளர்சிதை மாற்றம் என்பதும் பெரும்பாலான சூழ்நிலைகளில் எரிபொருளுக்காக முதன்மையாக குளூக்கோசில் தங்கியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அளவு குளூக்கோசை உடுக்கலன்களில் சேமிக்கப்பட்ட கிளைக்கோஜனிலிருந்து பெறலாம், ஆனால் இது ஒருசில நிமிடங்களுக்குள் நுகரப்படும். அநேகமான செய்முறை நோக்கங்களுக்கு, மூளையானது இரத்தத்திலிருந்து மைய நரம்புத் தொகுதிக்குள் உள்ள சிற்றிடைவெளிக்குரிய இழையத்துக்குள்ளும் நரம்புக்கலங்களுக்குள்ளும் தாமாகவே பரவிச்செல்கின்ற குளூக்கோசின் தொடர்ச்சியான விநியோகத்தில் தங்கியுள்ளது.

ஆதலால், இரத்ததினால் விநியோகிக்கப்படும் குளூக்கோசின் அளவு குறைந்தால், முதலில் பாதிக்கப்படும் உறுப்புகளில் மூளை ஒன்றாகும். அநேகமானவர்களில், 65 mg/dl (3.6 mM) க்குக் கீழ் குளூக்கோஸ் செல்லும்போது, மூளைச் செயல்திறனின் நுட்பமான குறைவைக் கவனிக்கலாம். பொதுவாக 40 mg/dl (2.2 mM) க்குக் கீழ், செயல் மற்றும் தீர்ப்பின் வலுக்குறைவு மிகத் தெளிவாகும். குளூக்கோஸ் மேலும் குறைந்துசென்றால் வலிப்புத்தாக்கங்கள் ஏற்படலாம். இரத்த குளூக்கோஸ் மட்டங்கள் 10 mg/dl (0.55 mM) க்குக் கீழ்ச் செல்லும்போது, பெரும்பாலான நரம்புக்கலங்கள் மின் நடுநிலையாக அமைதியாகவும், செயல்பாடுகளற்றதாகவும் மாறும். இதனால் ஆழ்மயக்கம் ஏற்படும். இந்த மூளை விளைவுகளை ஒன்றாகச் சேர்த்து மூளை திறனை மாற்றும் இரத்த சருக்கரை குறை நோய் எனப்படும்.

மூளைக்கு போதுமான அளவு குளூக்கோஸ் விநியோகிப்பதன் முக்கியத்துவமானது குறைந்துசெல்கின்ற குளூக்கோஸ் மட்டத்துக்கு நரம்புக்குரிய, வளரூக்கிக்கு உரிய மற்றும் வளர்சிதை மாற்ற பதிலளிப்புகள் பலவற்றில் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவை தற்காப்புக்குரியவை அல்லது நெகிழ்வுத் திறனுக்குரியவை. கிளைக்கோஜன்பகுப்பு மற்றும் குளுக்கோசுப்புத்தாக்கம் ஊடாக இரத்த சர்க்கரையைக் கூட்டுகின்றன அல்லது மாற்று எரிபொருள்களை வழங்குகின்றன. இரத்த சர்க்கரை மட்டம் மிகவும் குறைந்து சென்றால், அந்நபர் நீரிழிவு ஆழ்மயக்கம் நிலைக்குச் செல்வதைத் தடுக்க, ஒரு குறுகிய நேரத்துக்கு ஈரலானது கிளைக்கோஜன் சேமிப்பை குளூக்கோசாக மாற்றி, இரத்த ஓட்டத்துக்குள் விடும்.

சுருக்கமான அல்லது ஆபத்தில்லாத இரத்தச் சர்க்கரைக் குறைவானது மூளையில் நீடித்திருக்கும் விளைவுகளை உருவாக்காது. ஆனால் இது மேலதிக இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு மூளையின் மறுதாக்கங்களை தற்காலிகமாக மாற்றக்கூடியது. நாட்பட்ட, கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவானது பரந்துபட்ட விதத்தில் நீசித்திருக்கும் பாதிப்பை விளைவிக்கும். இதில் புலன் உணர்வு சார்ந்த செயல்பாடு, இயக்கக் கட்டுப்பாடு அல்லது சுயநினைவு வலுக்குறைவு உள்ளடங்கும். கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவின் எந்தவொரு சந்தர்ப்பத்திலிருந்தும் நிரந்தரமான மூளை பாதிப்பு நிகழும் வாய்ப்பைக் கணிப்பீடு செய்வது கடினமாகும். இது வயது, அண்மைக்கால இரத்தம் மற்றும் மூளைக் குளூக்கோஸ் அனுபவம், குறைந்த ஆக்சியன் போன்ற ஒருங்கிசையும் சிக்கல்கள் மற்றும் மாற்று எரிபொருள்கள் கிடைக்கும் தன்மை போன்ற எண்ணற்ற காரணிகளில் தங்கியுள்ளது. பெரும்பான்மையான நோயறிகுறிக்குரிய இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய நிகழ்வுகள் கண்டறியக்கூடிய நிரந்தர தீங்கு ஒன்றையும் விளைவிக்கமாட்டா.[18]

குறிகள் மற்றும் அறிகுறிகள்

இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய நோயறிகுறிகள் மற்றும் வெளிப்பாடுகளை குறைந்து செல்லும் குளூக்கோசால் தூண்டப்பட்ட கவுண்டர் ரெகுலேட்டரி வளரூக்கிகளால் (எப்பிநெப்பிரின் இயக்குநீர்/அதிரனலின் மற்றும் குளூக்கோகான்) உருவாக்கப்பட்டவை மற்றும் குறைக்கப்பட்ட மூளைச் சர்க்கரையால் உருவாக்கப்பட்ட மூளை திறனை மாற்றும் இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய விளைவுகள் எனப் பிரிக்கலாம்.

அட்ரீனல்வினையிய வெளிப்பாடு

குளூக்கோகான் வெளிப்பாடுகள்

மூளை திறனை மாற்றும் இரத்த சர்க்கரை குறை நோய் வெளிப்பாடுகள்

இரத்தச் சர்க்கரைக் குறைவின் ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் மேற்குறிப்பிட்ட அனைத்து வெளிப்பாடுகளும் நிகழ மாட்டா. நோயறிகுறிகள், நோயறிகுறிகள் ஏற்பட்டாலும் கூட, அவை தோன்றூவதற்கு ஒரு சீரான வரிசை எதுவும் இல்லை. தனித்துவமான வெளிப்பாடுகள் வயது, இரத்தச் சர்க்கரைக் குறைவின் தீவிரத்தன்மை மற்றும் அது குறைவதன் வேகம் ஆகியவற்றுடன் வேறுபடலாம். இளம் சிறுவர்களில், சில வேளைகளில் வாந்தியானது கீட்டோன் மிகைப்புடனான காலைநேர இரத்தச் சர்க்கரைக் குறைவுடன் இணைந்திருக்கலாம். இளைஞர்கள் மற்றும் வயது வந்தவர்களில், மிதமாகக் கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவானது பைத்தியம், மன நோய், மருந்து நஞ்சாக்கம் அல்லது வெறியைப் போல ஒத்திருக்கலாம். முதியவர்களில், இரத்தச் சர்க்கரைக் குறைவு குவிய தாக்கு-போன்ற விளைவுகளை அல்லது வரையறுக்கக் கடினமான உடல்சோர்வை விளைவிக்கலாம். தனித்த நபரின் நோயறிகுறிகள், நிகழ்வுக்கு நிகழ்வு ஒரே மாதிரியாக இருக்கக்கூடும், ஆனால் அப்படி இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. குளூக்கோஸ் மட்டங்கள் எந்த வேகத்தில் குறைகிறது மற்றும் முந்தைய நிகழ்வு ஆகியவற்றால் இதில் மாற்றங்கள் ஏற்படவும் கூடும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளில், இரத்தச் சர்க்கரைக் குறைவால் எரிச்சல், நடுக்கங்கள், திடீர்த்தசைப்பகுதிச் சுருக்க வெட்டியிழுப்புகள், நீலம்பாய்தல், சுவாச அவலம், ஆப்னீக் (apneic) நிகழ்வுகள், வியர்த்தல், தாழ்வெப்பநிலை, தூக்க நடையர், தளர்ச்சி, பாலூட்டலை மறுத்தல் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் அல்லது "மயக்கங்கள்" ஆகியவை ஏற்படலாம். இரத்தச் சர்க்கரைக் குறைவானது மூச்சுத்திணறல், தாழ் கால்சீயத் தன்மை, சீழ்ப்பிடிப்பு, அல்லது இதயக் கோளாறு போன்றவற்றை ஒத்திருக்கலாம்.

இளமையான மற்றும் முதிய நோயாளிகளில், மூளை திறனை மாற்றும் இரத்த சருக்கரை குறை நோய் வலுக்குறை தவிர குறிப்பிடத்தக்க நோயறிகுறிகள் குறைந்து செல்வதோடு, தாழ் குளூக்கோஸ் மட்டங்களுக்கு மூளையானது பழக்கப்பட்டிருக்கலாம். இன்சுலின்-சார்ந்த நீரிழிவு நோயாளிகளில் இந்த நிகழ்வானது இரத்தச் சர்க்கரைக் குறைவு அறியாமை என்ற சொல்கொண்டு குறிப்பிடப்படும். இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு முயற்சி செய்யப்படும்போது இது ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது. இந்த நிகழ்வின் இன்னொரு நோக்கு வகை I கிளைக்கோஜன் நோயில் ஏற்படும். சிகிச்சைக்குப் பின்னர் கடும் இரத்தச் சர்க்கரைக் குறைவு தற்போது நிகழ்வதைவிட நோயைக் கண்டறிவதற்கு முன்னர் நீண்டகால இரத்தச் சர்க்கரைக் குறைவானது சிறப்பாக தாங்கிக்கொள்ளப்படக்கூடும்.

கிட்டத்தட்ட எப்போதுமே, வலிப்புத்தாக்கங்கள் அல்லது உணர்ச்சியற்றநிலையை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவை மூளைக்கு பாதிப்பின்றை பின்னோக்கித் திருப்ப முடியும். தனித்த நிகழ்வுடன் இறப்புகள் அல்லது நிரந்தரமான நரம்புசார்ந்த பாதிப்பு ஏற்படுவதானது வழக்கமாக நாட்பட்ட, சிகிச்சை அளிக்கப்படாத உணர்ச்சியற்றநிலை, சுவாசித்தலில் குழப்பம், கடுமையான ஒருங்கிசையும் நோய் அல்லது வேறு சில வகையான நோய் தொற்றக்கூடிய நிலை ஆகியவற்றை ஈடுபடுத்தியுள்ளது. என்றாலும், கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவால் மூளை பாதிப்பு அல்லது இறப்பு இடைக்கிடை ஏற்படுகிறது.

காரணத்தைத் தீர்மானித்தல்

இரத்தச் சர்க்கரைக் குறைவுச் சூழ்நிலைகள் நோயை உறுதி செய்வதற்கான பெரும்பாலான துப்புகளை வழங்கும். நோயாளியின் வயது, அந்த நாளின் நேரம், கடைசி உணவு எடுக்கப்பட்டதில் இருந்து நேரம், முந்தைய நிகழ்வுகள், போஷணை நிலை, உடல் மற்றும் மன விருத்தி, மருந்துகள் அல்லது நஞ்சுகள் (சிறப்பாக இன்சுலின் அல்லது பிற நீரிழிவு மருந்துகள்), பிற உறுப்புத் தொகுதிகளின் நோய்கள், குடும்ப வரலாறு மற்றும் சிகிச்சைக்கான பதில் ஆகியவற்றை சூழ்நிலைகள் உள்ளடக்கும். திரும்பத் திரும்ப இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படும்போது, ஒவ்வொரு நோய்த் தோற்றத்தினதும் சூழ்நிலைகளை (அந்த நாளின் நேரம், கடைசியாக எடுத்த உணவின் தொடர்பு, கடைசி உணவின் தன்மை, மாச்சத்துக்கான பதில் மற்றும் பல) பல மாதங்களாகக் குறித்துக்கொள்ளும் ஒரு பதிவு அல்லது "நாளேடு" என்பது இரத்தச் சர்க்கரைக் குறைவின் தன்மை அல்லது காரணத்தைக் கண்டறிய உதவியாக இருக்கக்கூடும்.

சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நோக்கு என்னவென்றால் அந்த நோயாளி இன்னொரு நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதாகும். கிட்டத்தட்ட முதன்மை உறுப்புத் தொகுதிகள் அனைத்தினதுன் தீவிர நோயானது இரண்டாம்நிலைச் சிக்கலாக இரத்தச் சர்க்கரைக் குறைவை உண்டாக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ளவர்கள் அல்லது சாப்பிடக்கூடாது எனத் தடுக்கப்பட்டவர்கள், அவர்களின் முதன்மை நோய்ச் சிகிச்சைக்குத் தொடர்பான பல்வேறு சூழ்நிலைகளால் உருவான இரத்தச் சர்க்கரைக் குறைவுகளால் பாதிக்கப்படுவர். இந்த சூழ்நிலைகளிலுள்ள இரத்தச் சர்க்கரைக் குறைவு என்பது பெரும்பாலும் பல காரணிக்குரியது அல்லது மருத்துவச்செனிமமாகக் கூட இருக்கும். அடையாளங்கண்ட உடனும், இரத்தச் சர்க்கரைக் குறைவின் இந்த வகைகள் உடனடியாக எதிர்த்திசையில் திருப்பப்பட்டுத் தடுக்கப்படும். மேலும் அடிப்படையிலுள்ள நோயானது முதன்மைச் சிக்கலாக மாறும்.

போஷணை நிலையைத் தீர்மானித்தல் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவைவிட ஆபத்தான ஏதேனும் நோயாக இருக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதா என்பதை அடையாளம் காணுதல் ஆகியவை தவிர, நோயாளியின் உடலைச் சோதனை செய்வதென்பது இடைக்கிடை மட்டுமே உதவியாக இருக்கும். கைக்குழந்தைப் பருவத்தில் மேக்ரோசோமியா (Macrosomia) இருந்தால் அது பொதுவாக இன்சுலின் மிகைப்பைக் குறிக்கும். ஒரு சில நோய்க்குறிகள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் ஆகியவற்றை ஈரல் பெருக்கம் அல்லது மிகச்சிறிய ஆண்குறி போன்ற துப்புகளால் கண்டறியப்படக்கூடும்.

சாதரண இரத்த குளூக்கோஸ் மட்டத்தை மீள உருவாக்கிய பின்னரும் கூட, உணர்ச்சியற்றநிலை அல்லது வலிப்புத்தாக்கத்துடன் கூடிய கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவிலிருந்து மீளுவதற்கு நீண்ட காலம் எடுக்கக்கூடும். நோயாளியொருவர் உணர்வு இழக்காத நிலையில் இருக்கும்போது, 10–15 நிமிடங்களில் நோயறிகுறிகளை பின்நோக்கித் திருப்ப மாச்சத்து உதவவில்லை என்றால் அந்த நோயறிகுறிகளுக்கான காரணம் இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்ல என்று கருதுவதற்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாள்க்கு கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவு நிலையாக ஏற்படும்போதும் திருப்திகரமான இரத்த குளூக்கோஸ் மட்டங்களைப் பேணுவதற்குத் தேவையான குளூக்கோசின் அளவானது அடிப்படையான நோய்க்காரணிக்கு ஒரு முக்கிய துப்பாகும். குளூக்கோஸ் தேவையானது கைக்குழந்தைகளில் 10 மி.கி/கி.கி/நிமிடம் என்பதற்கு அதிகமாக அல்லது சிறுவர்களிலும், பெரியவர்களிலும் 6 மி.கி/கி.கி/நிமிடம் ஆகவும் இருக்கும்போது, அவை இன்சுலின் மிகைப்புக்கு பலமான சான்றாக இருக்கின்றன. இந்தச் சூழலில் இது குளூக்கோஸ் உட்செலுத்துதல் வீதம் (கு.உ.வீ) எனப்படுகிறது. இறுதியாக, குளூக்கோஸ் குறைவாக இருக்கும்போது வழங்கப்பட்ட குளூக்கோகானுக்குப் பொறுப்பான இரத்த குளூக்கோசும் இரத்தச் சர்க்கரைக் குறைவின் பல்வேறு வகைகளுக்கிடையே வேறுபாட்டை அறிய உதவும். இரத்த குளூக்கோசானது 30 mg/dl (1.70 mmol/l) ஐவிட கூடுதலான வீதத்தால் அதிகரித்தால் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டதற்கான காரணம் இன்சுலின் மிகை எனக் கூறலாம்.

சில வெளிப்படையான சந்தர்ப்பங்களில், "முக்கியமான மாதிரி"யானது நோயைக் கண்டுபிடிப்பை வழங்கலாம். தொடர்ந்து ஏற்படுகின்ற, விவரிக்கமுடியாத சர்க்கரைக் குறைவுள்ள பெரும்பான்மையான சிறுவர்கள் மற்றும் வயதானவர்களில், இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது இரத்த மாதிரியை எடுப்பதன்மூலம் அந்நோய் கண்டறியப்படலாம். இந்த முக்கிய மாதிரி யை இரத்தச் சர்க்கரைக் குறைவு இருக்கும் சமயத்தில், அது பின்னோக்கித் திருப்பப்பட முன்னர் எடுத்தால் அது தகவல்களை வழங்கும், இல்லையென்றால் மருத்துவமனையில் சேர்த்தல் மற்றும் வெறுப்பூட்டும் பட்டினி சோதனைகள் தேவைப்படலாம். பின்னிலையாகத் திருப்புவதற்கு குளூக்கோசை அளிக்க முன்னர், குறைந்தது ஒரு அடிப்படை மாதிரியைப் பெறுவதற்கு, விவரிக்க முடியாத இரத்தச் சர்க்கரைக் குறைவு சந்தர்ப்பங்களில் மிகப் பொதுவாகவுள்ள அவசரநிலைச் சிகிச்சை பிரிவுப் பற்றாக்குறையென்பது ஒரு தோல்வியாகும்.

முக்கியமான மாதிரியின் மதிப்பின் பகுதியானது, இரத்தச் சர்க்கரைக் குறைவு காரணமாகத் தான் நோயறிகுறிகள் ஏற்பட்டன என்பதற்கான ஒரு எளிமையான நிரூபணமாக இருக்கலாம். பெரும்பாலும், இரத்தச் சர்க்கரைக் குறைவு சமயத்தில் குறிப்பிட்ட வளரூக்கிகள் மற்றும் உயிரினக் கழிவுகளின் அளவீடானது சரியாகச் செயலாற்றுகின்ற உறுப்புகளையும் உடல் தொகுதிகளையும், வழமைக்கு மாறாகச் செயல்படுபவற்றையும் சுட்டிக்காட்டுகின்றது. எடுத்துக்காட்டாக, இரத்த குளூக்கோஸ் குறைவாக இருக்கும்போது, குளூக்கோசை அதிகரிக்கின்ற வளரூக்கிகள் அதிகரிக்க வேண்டும். அதேநேரம் இன்சுலின் சுரப்பானது முற்றுமுழுதாக நிறுத்தப்படவேண்டும்.

முக்கியமான மாதிரிகளில் அளவிடக்கூடிய வளரூக்கிகள் மற்றும் உயிரினக் கழிவுகளின் பட்டியல் சுருக்கம் வருமாறு. ஒவ்வொரு நோயாளியிலும் அனைத்து சோதனைகளும் செய்யப்படவில்லை. ஒரு "அடிப்படைப் பதிப்பானது" இன்சுலின், கோர்டிசோல் மற்றும் வயது வந்தவர்களில் C-பெப்தைட்டு மற்றும் மருந்துத் திரையுடனும், சிறுவர்களில் வளர்ச்சி வளரூக்கியுடனும் மின்பகுபொருள்கள் ஆகியவற்றை உள்ளடக்கலாம். மேலதிகமான குறித்த சோதனைகளின் மதிப்பானது, மேலே விவரிக்கப்பட்ட சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்த நோயாளிக்கான நோய்க் கண்டுபிடிப்பில் பெரும்பாலும் தங்கியிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக குளூக்கோஸ் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில், இந்த மட்டங்களில் பலவும் சில நிமிடங்களில் மாறிவிடும். எனவே இரத்தச் சர்க்கரைக் குறைவு பின்னோக்கித் திருப்பப்பட்ட பின்னர் அவற்றை அளப்பதிலும் ஒரு மதிப்பு இல்லை. மற்றவை, குறிப்பாக அந்தப் பட்டியலில் குறைவாக இருப்பவை, இரத்தச் சர்க்கரைக் குறைவு பின்னோக்கித் திரும்பிய பின்னரும் கூட வழமைக்கு மாறாகவே இருக்கும். பொதுவாக, முக்கியமான மாதிரிப்பொருளைத் தவறவிட்டாலும்கூட அவற்றை அளக்கலாம். கடினமான சமயங்களில் விவரிப்பது என்பது இந்தக் கட்டுரையின் நோக்கத்துக்கு அப்பாற்பட்டது என்றாலும், பெரும்பாலான சோதனைகளுக்கான முதன்மையான முக்கியத்துவம் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

  • குளூக்கோஸ்: உண்மையான இரத்தச் சர்க்கரைக் குறைவை ஆவணப்படுத்தத் தேவைப்படும்
  • இன்சுலின்: இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது எந்தவொரு கண்டறியக்கூடிய அளவும் அசாதாரணமானது, ஆனால் இயல்புகளை மதிப்பிடுவதைக் கட்டாயமாக மருத்துவர் தெரிந்திருக்க வேண்டும்.
  • கோர்டிசோல்: கபச்சுரப்பியும், சிறுநீரகச்சுரப்பிகளும் வழக்கம்போலச் செயல்பட்டால், இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது இது அதிகமாக இருக்க வேண்டும்
  • வளர்ச்சி வளரூக்கி: கபச்சுரப்பி வழக்கம்போலச் செயல்பட்டால், இரத்தச் சர்க்கரைக் குறைவின் பின்னர் உயர வேண்டும்
  • மின்பகுபொருள்கள் மற்றும் மொத்த கார்பன் ஈரொக்சைட்ட்டு: மின்பகுபொருள் முறை பிறழ்தல்கள் சிறுநீரக அல்லது சிறுநீரகச்சுரப்பி நோய்களைப் பரிந்துரைக்கலாம். ஆபத்தின்றிய அமிலத் தேக்கம் என்பது பட்டினி இரத்தச் சர்க்கரைக் குறைவுடன் சாதாரணமாகத் தோன்றும். வழக்கமான இன்சுலின் மிகைப்புடன் அமிலத் தேக்கம் இருக்காது
  • ஈரல் நொதிகள்: இதன் அதிகரிப்பானது ஈரல் நோய் இருப்பதைக் குறிக்கும்
  • கீட்டோன்கள்: should உண்ணாவிரதம் மற்றூம் இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது உயர்வாக இருக்க வேண்டும். குறைந்த மட்டங்கள் இருந்தால் இன்சுலின் மிகைப்பு அல்லது கொழுப்பு அமில ஒட்சியேற்றக் குறைபாடு இருக்கலாம்
  • பீட்டா-ஹைட்ராக்சிபியூட்டைரேட்: உண்ணாவிரதம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது உயர்வாக இருக்க வேண்டும். குறைந்த மட்டங்கள் இருந்தால் இன்சுலின் மிகைப்பு அல்லது கொழுப்பு அமில ஒட்சியேற்றக் குறைபாடு இருக்கலாம்
  • கட்டில்லா கொழுப்பு அமிலங்கள்: உண்ணாவிரதம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது உயர்வாக இருக்க வேண்டும். குறைந்த மட்டங்கள் இருந்தால் இன்சுலின் மிகைப்பு இருக்கலாம். குறைந்த கீட்டோன்களுடன் ஔயர் மட்டங்கள் இருந்தால் கொழுப்பு அமில ஒட்சியேற்றக் குறைபாடு இருக்கலாம்
  • லாக்டிக் அமிலம்: உயர் மட்டங்கள் இருந்தால் சீழ்ப்பிடிப்பு அல்லது கிளைக்கோஜன் சேமிப்பு நோய் போன்ற குளுக்கோசுப்புத்தாக்க உடன்பிறந்த பிழையைக் குறிக்கலாம்
  • அமோனியா: அதிகரிக்கப்பட்டால், டிஹைட்ரோஜினேஸ் பற்றாக்குறை காரணமான இன்சுலின் மிகைப்பு, ரேயி நோய்க்குறி அல்லது ஈரல் கோளாறுகளின் குறிப்பிட்ட வகைகளைக் குறிப்பிடும்
  • C-பெப்தைட்டு: குறைவாக அல்லது கண்டறிய முடியாத அளவாக இருக்க வேண்டும். அதிகரிக்கப்பட்டால் இன்சுலின் மிகைப்பைக் குறிக்கலாம், குறைந்த c-பெப்தைட்டு உயர் இன்சுலினுடன் இருந்தால் புறத்திலிருந்தான (உட்செலுத்தப்படும்) இன்சுலினைக் குறிக்கும்
  • புரோஇன்சுலின்: கண்டறியக்கூடிய மட்டங்கள் இன்சுலின் மிகைப்பைக் குறிக்கும். கண்டறியக்கூடிய இன்சுலின் மட்டங்களுக்கு பொருந்தாத விகிதாசாரமாக இருப்பின் இன்சுலின் புற்றைக் குறிக்கும்
  • ஈதனால்: ஆல்கஹால் நஞ்சாதலைக் குறிக்கும்
  • நச்சியல் திரை: இரத்தச் சர்க்கரைக் குறைவை உண்டாக்கும் பல மருந்துகளை, குறிப்பாக சல்போனைல்யூரியாக்களைக் கண்டறியும்
  • இன்சுலின் உடலெதிரிகள்: சாதகமானது என்றால் மீண்டும் மீண்டும் செய்யப்படும் இன்சுலின் உட்செலுத்தல் அல்லது உடலெதிரி-ஊக்கிய இரத்தச் சர்க்கரைக் குறைவைப் பரிந்துரைக்கும்
  • யூரின் சேதன அமிலங்கள்: பல வகை சேதன அமிலசிறுநீரில் பல்வேறுபட்ட இயல்பான வடிவமைப்புகளில் அதிகரிக்கப்படும்
  • கார்னிடைன், கட்டற்றது மற்றும் மொத்தம்: குறிப்பிட்ட கொழுப்பு அமில வளர்சிதை மாற்ற குறைபாடுகள் மற்றும் குறிப்பிட்ட வகை மருந்து நஞ்சாக்கம் மற்றும் கணைய நோய்களில் குறைவானது
  • தைராக்சின் மற்றும் டி.எஸ்.ஹெச்: அதிகரித்த TSH இன்றி குறைவான T4 தாழ் பிட்டூயிட்டரியம் அல்லது ஊட்டச்சத்துக் குறையைப் பரிந்துரைக்கும்
  • ஏசைல்கிளைசின்: உயர்வானது கொழுப்பு அமில ஒட்சியேற்றக் குறைபாட்டைப் பரிந்துரைக்கும்
  • எப்பிநெப்பிரின் இயக்குநீர்: இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது அதிகரிக்கப்பட வேண்டும்
  • குளூக்கோகான்: இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது அதிகரிக்கப்பட வேண்டும், வகை 1 நீரிழிவு சந்தர்ப்பத்தில் இது விதிவிலக்காகும். இங்கு இந்த கவுண்டர் ரெகுலேட்டரி வளரூக்கியை உருவாக்கும் கலங்களில் சீர்படுத்த முடியாத பாதிப்பு ஏற்படும்.
  • ஐ.ஜி.எஃப்-1: குறைந்த மட்டங்கள் தாழ் பிட்டூயிட்டரியம் அல்லது நீண்டகால ஊட்டச்சத்துக் குறையைப் பரிந்துரைக்கும்
  • ஐ.ஜி.எஃப்-2: குறைந்த மட்டங்கள் தாழ் பிட்டூயிட்டரியத்தைப் பரிந்துரைக்கும், உயர் மட்டங்கள் கணையத்திற்கு உரியதல்லாத கட்டி இரத்தச் சர்க்கரைக் குறைவைப் பரிந்துரைக்கும்
  • ஏ.சி.டி.ஹெச்: இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது அதிகரிக்கப்பட வேண்டும். கோர்டிசோலுடன் வழக்கத்துக்கு மாறான ஏ.சி.டி.ஹெச் உயர்வானது ஆடிசன் நோயைப் பரிந்துரைக்கும்
  • அலனின் அல்லது பிற பிளாஸ்மா அமினோ அமிலங்கள்: அசாதாரண வடிவங்கள் அமினோ அமிலம் வளர்சிதை மாற்றம் அல்லது குளுக்கோசுப்புத்தாக்கத்தின் சில உடன்பிறந்த பிழைகளைப் பரிந்துரைக்கலாம்
  • சோமாட்டோஸ்டட்டின் இது இன்சுலின் உற்பத்தியைத் தடுத்து இரத்தக் குளூக்கோஸ் மட்டத்தை அதிகரிப்பதால் இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது அதிகரிக்கப்பட வேண்டும்

மேலதிக நோய் உறுதிசெய்யும் படிகள்

சந்தேகிக்கப்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவு தொடர்ந்து, முக்கியமான மாதிரிப்பொருள் பெறப்படவில்லை எனும்போது, நோயைக் கண்டுபிடிப்பதற்கான மதிப்பீட்டுக்கு பல பாதைகள் எடுக்கலாம். இருந்தபோதிலும், சிறந்த போஷணையும், உடனடியான உள்ளெடுப்பும் அவசியமாகும்.

பொதுவான ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்போது நோயறிகுறிகள் தீவிரமாக இருக்காது. அந்த நபர் இரவு முழுவதும் சாதாரணமாகவே சாப்பிடாமல் இருக்கலாம். உணவுடனான பரிசோதனையானது (கொழுப்பு அல்லது புரதத்துடன் மேலதிக சிற்றுண்டிகள், குறைக்கப்பட்ட சர்க்கரை) இந்தச் சிக்கலைத் தீர்க்கப் போதுமாக இருக்கலாம். "சுட்டிக்காட்டியவை" உண்மையில் இரத்தச் சர்க்கரைக் குறைவு காரணமாகத்தான் என்பது உறுதியாக இல்லை எனில், நோய் ஏற்படும் நேரங்களில் சோதனை செய்து குளூக்கோஸ் மட்டம் குறைவாக உள்ளது என்பதை உறுதிக்கொள்வதற்காக சில மருத்துவர்கள் வீட்டு குளூக்கோஸ் அளவு மானியைப் பரிந்துரைப்பர். நோய்த் தோற்றம் சீராக அடிக்கடி தோன்றும்போது அல்லது நோயாளி தாம் சுட்டிக்காட்டிய நோயைத் தூண்ட முடியும் என்பதில் உறுதியாக இருக்கும்போது இந்த அணுகுமுறையானது மிகவும் பயனுள்ளது. தற்போது கிடைக்கின்ற அளவு மானிகளின் நுட்பமில்லாத தன்மை காரணமாக உயர் வீத பொய்யான நேர் அல்லது ஐயத்துக்குரிய மட்டங்கள் இந்த அணுகுமுறையின் முக்கிய குறைபாடு ஆகும்: எரிச்சலூட்டுகின்றதும், தெளிவற்றதுமான முடிவுகளைத் தவிர்ப்பதற்காக, அளவு மானியானது எதைச் செய்யும் அல்லது எதைச் செய்ய முடியாது என்பது பற்றி துல்லியமான புரிந்துணர்வானது மருத்துவர் மற்றும் நோயாளி இருவருக்குமே தேவை.

கடுமையான நோயறிகுறிகளுடன் இரத்தச் சர்க்கரைக் குறைவு தொடர்ந்து வருகின்ற சந்தர்ப்பங்களில், ஆபத்தான நிலமைகளைத் தவிர்ப்பதற்கான மிகச்சிறந்த முறை பெரும்பாலும் ஒரு நோய் கண்டறிதல் உண்ணாவிரதம் ஆகும். இது பொதுவாக மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. கால அளவானது நோயாளியின் வயது மற்றும் உண்ணாவிரதத்துக்கான மறுமொழி ஆகியவற்றைப் பொறுத்தது. ஆரோக்கியமான வயது வந்த ஒருவர் 50 mg/dl (2.8 mM) க்கும் அதிகமான குளூக்கோஸ் மட்டத்தை 72 மணி நேரத்துக்கும், ஒரு சிறுவன் 36 மணி நேரத்துக்கும், ஒரு கைக்குழந்தை 24 மணி நேரத்துக்கும் பராமரிக்கும். நபர் தனது இரத்த குளூக்கோஸ் மட்டத்தை முடியுமான காலத்துக்கு சாதாரணமாக பராமரிக்க முடிகிறதா என்றும், பொருத்தமான வளர்சிதை மாற்ற மாற்றங்களுடன் உண்ணாவிரதத்துக்கு மறுமொழி அளிக்க முடிகிறதா என்றும் தீர்மானிப்பதே இந்த உண்ணாவிரதத்தின் நோக்கமாகும். உண்ணாவிரத முடிவில், இன்சுலின் அளவானது கிட்டத்தட்ட கண்டறியமுடியாத அளவில் இருக்க வேண்டும். கீட்டோன் மிகைப்பு முழுமையாக உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். நோயாளியின் இரத்த குளூக்கோஸ் மட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன. குளூக்கோஸ் குறைகிறது எனில், முக்கியமான மாதிரிப்பொருள் பெறப்படுகிறது. இனிமையின்மை மற்றும் செலவீனம் தவிர, இரத்தச் சர்க்கரைக் குறைவின் ஆபத்தான வடிவங்களை, குறிப்பாக அளவுக்கு அதிகமான இன்சுலின் ஈடுபடுகின்ற வடிவங்களை உறுதிப்படுத்த அல்லது மறுக்க வினைத்திறனான ஒரேயொரு வழி கண்டறிதல் உண்ணாவிரதமாக இருக்கக்கூடும்.

குறிப்பாக 3, 4 அல்லது 5 மணிநேரமாக நீட்டிக்கப்படும்போது, சந்தேகிக்கப்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவை ஆராய்கின்ற பாரம்பரிய முறை வாய்வழி குளூக்கோஸ் சகிப்புத்தன்மைச் சோதனை ஆகும். 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருந்தபோதும், நாட்பட்ட சோதனையில் பல ஆரோக்கியமான மனிதர்கள் 70 அல்லது 60 க்கும் குறைந்த குளூக்கோஸ் மட்டங்களைக் கொண்டிருப்பர் என்றும், முக்கியமான இரத்தச் சர்க்கரைக் குறைவின் பல வகைகள் அதனுடன் கண்டறியமுடியாத நிலைக்குச் செல்லும் என்றும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் காட்டியுள்ளன. மோசமான உணருந்தன்மை மற்றும் தனித்தன்மை ஆகியவற்றின் இந்த இணைவானது, குளூக்கோஸ் வளர்சிதை மாற்ற குறைபாடுகளில் அனுபவமுள்ள மருத்துவர்கள் இந்த நோக்கத்துக்காக அதைப் பயன்படுத்துவதைக் கைவிடச் செய்தது.

காரணங்கள்

இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தெளிவுபடுத்த பல வழிகள் உள்ளன. பின்வருவது மிகப் பொதுவான காரணங்கள் மற்றும் காரணிகளின் பட்டியலாகும். இது வயதால் பாகுபடுத்தப்பட்டு, ஒப்பீட்டளவில் வயதில் சார்ந்திராத சில காரணங்களால் பின்பற்றப்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு பங்களிக்கக் கூடும். நோய்க்காரணியால் பாகுபடுத்தப்பட்ட பூரணமான பட்டியலுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவின் காரணங்கள் என்பதைப் பார்க்கவும்.

புதிதாகப் பிறந்த கைக்குழந்தைகளில் இரத்தச் சர்க்கரைக் குறைவு

ஆபத்தாக சுகவீனமுற்றுள்ள அல்லது அதிகுறைவான பிறப்பு எடையுடைய கைக்குழந்தைகளில் இரத்தச் சர்க்கரைக் குறைவு என்பது பொதுவான சிக்கலாகும். தாய்வழி இரத்த சர்க்கரை மிகைப்பு காரணமாக ஏற்படவில்லை எனில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது பல காரணிகளுக்குரியவை, நிலைமாறுகின்றவை மற்றும் எளிதாக ஆதரவளிக்கப்பட்டவை. சிறுபான்மைச் சந்தர்ப்பங்களில், இரத்தச் சர்க்கரைக் குறைவானது கணிசமான இன்சுலின் மிகைப்பு, தாழ் பிட்டூயிட்டரியம் அல்லது வளர்சிதை மாற்ற உடன்பிறந்த பிழை மற்றும் அதிகளவான நிர்வாகச் சவால்கள் இருப்பது ஆகிய காரணங்களால் ஏற்படுபவையாக மாறுகின்றது.

இளம் சிறுவர்களில் இரத்தச் சர்க்கரைக் குறைவு

இரப்பைக் குடலழற்சி அல்லது உண்ணாவிரதம் காரணமாக இரத்தச் சர்க்கரைக் குறைவின் தனி நிகழ்வு நடக்கலாம், ஆனால் மீண்டும் மீண்டும் நிகழ்வதானது வளர்சிதை மாற்றத்தின் உடன்பிறந்த பிழைகள், பிறப்பிலுள்ள தாழ் பிட்டூயிட்டரியம் அல்லது பிறப்பிலுள்ள இன்சுலின் மிகைப்பு ஆகியவற்றின் ஒன்றை பெரும்பாலும் அனைத்து சமயத்திலும் குறிப்பிடலாம். பொதுவான காரணங்களின் பட்டியல்:

வளர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் இரத்தச் சர்க்கரைக் குறைவு

பெருமளவில், இந்த வயது வரம்புடையவர்களில் கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும் பொதுவான காரணி வகை 1 நீரிழிவுக்காக உட்செலுத்தப்படும் இன்சுலின் ஆகும். கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவை உண்டாக்கும் புதிய நோய்களுக்கான ஓரளவு விரைவான துப்புகளை சந்தர்ப்பங்கள் வழங்க வேண்டும். பிறப்பிலுள்ள வளர்சிதை மாற்ற குறைபாடுகள், பிறப்பிலுள்ள இன்சுலின் மிகைப்பு வடிவங்கள் மற்றும் பிறப்பிலுள்ள தாழ் பிட்டூயிட்டரியம் அனைத்தும் முன்பே கண்டறியப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது அல்லது இந்த வயதில் புதிய இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தோற்றுவிப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பட்டினி இரத்தச் சர்க்கரைக் குறைவையும் நோய் மூலம் அறியா கீட்டோடிக் இரத்தச் சர்க்கரைக் குறைவையும் ஏற்படுத்தாத அளவுக்கு உடல் திணிவானது பெரியதாக உள்ளது. மீண்டும் மீண்டும் வரும் ஆபத்தில்லாத இரத்தச் சர்க்கரைக் குறைவானது எதிர்வினை செய்யக்கூடிய இரத்தச் சர்க்கரைக் குறைவு வகையைக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் நோய் மூலம் அறியா உணவுக்குப் பின் நோய்க்குறிக்கும் இது ஒரு உச்சக்கட்ட வயதாகும். இந்த வயதில் உள்ளவர்களில் மீண்டும் மீண்டும் ஏற்படும் இந்த நிகழ்வானது குற்றுநிலை அழுத்த வீழ்ச்சி அல்லது அதிவளியோட்டத்துக்குத் தொடர்புள்ளதாக இருக்கும். இது பெரும்பாலும் வெளிப்படையான இரத்தச் சர்க்கரைக் குறைவாக இருக்கலாம்.

முதியவர்களில் இரத்தச் சர்க்கரைக் குறைவு

சிக்கலான மருந்து இடைத்தாக்கங்கள் காரணமாக, குறிப்பாக நீரிழிவுக்கான வாய்வழி இரத்த சர்க்கரை குறை நோய்க்குரிய பொருள்கள் மற்றும் இன்சுலின் ஈடுபாடு காரணமாக இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படும் சந்தர்ப்பமானது வயது போகப்போக அதிகரிக்கும். மிகவும் அரிதாக உள்ளபோதிலும், இன்சுலின்-உருவாக்குகின்ற கட்டிகளின் சந்தர்ப்பமும்கூட வயதுடன் அதிகரிக்கிறது. இன்சுலின் அதிகப்படியைவிட வேறு பொறிமுறைகளால் இரத்தச் சர்க்கரைக் குறைவை உண்டாக்குகின்ற அநேகமான கட்டிகள் வயதுவந்தவர்களில் ஏற்படுகின்றன.

  • இன்சுலின்-தூண்டிய இரத்தச் சர்க்கரைக் குறைவு
    • நீரிழிவுக்காக உட்செலுத்தப்பட்ட இன்சுலின்
    • செயற்கையான இன்சுலின் செலுத்தல் (முன்சௌசன் நோய்க்குறி)
    • வாய்வழி நீரிழிவு மருந்துகள், பீட்டா தடைகள் அல்லது மருந்து இடைத்தாக்கங்களின் அளவுக்கதிகமான விளைவுகள்
    • இன்சுலின்-சுரக்கின்ற கணையக் கட்டி
    • ஆல்கஹால் தூண்டிய இரத்தச் சர்க்கரைக் குறைவானது பெரும்பாலும் கீட்டோஅசிடோசிசுடன் இணைந்தது (NAD+ ஐ நீக்குதலானது குளுக்கோசுப்புத்தாக்கத்தை முடக்குவதற்கு வழிவகுக்கும்)
    • உணவுப்பாதை உறுப்புகள்(மிகைப்படுத்திய இன்சுலின் விளைவுடன் இடைச்சிறுகுடலை வேகமாக வெற்றாக்குதல்)
    • எதிர்வினை செய்யக்கூடிய இரத்தச் சர்க்கரைக் குறைவு மற்றும் நோய் மூலம் அறியா உணவுக்குப் பின் நோய்க்குறி
  • கட்டி இரத்தச் சர்க்கரைக் குறைவு, டோவேக்-பாட்டர் நோய்க்குறி
  • பெறப்பெற்ற சிறுநீரகச்சுரப்பி பற்றாக்குறை
  • பெறப்பெற்ற தாழ் பிட்டூயிட்டரியம்
  • தடுப்பாற்று நோயியல் இரத்தச் சர்க்கரைக் குறைவு[21]

சிகிச்சையும் தடுப்பும்

இரத்தச் சர்க்கரைக் குறைவை நிர்வகிப்பது என்பதில் இரத்தச் சர்க்கரையை உடனடியாக சாதாரண நிலைக்கு உயர்த்துதல், காரணத்தைத் தீர்மானித்தல் மற்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து வராமல் தடுப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவை ஈடுபடும்.

தீவிரமான இரத்தச் சர்க்கரைக் குறைவை எதிர்நிலையாக்குதல்

10-20 கிராம்கள் மாச்சத்தை எடுப்பதன் மூலம் (அல்லது பெறுவதன் மூலம்) இரத்த குளூக்கோசைச் சில நிமிடங்களில் சாதாரண நிலைக்கு உயர்த்தலாம். பாதிக்கப்பட்ட நபர் நினைவுடன் இருந்து, விழுங்கக் கூடியவராக இருப்பின் இதை உணவு அல்லது பானத்துடன் எடுக்கலாம். இந்த அளவு மாச்சத்தானது சுமர் 3-4 அவுன்ஸ் (100-120 மி.லீ) ஆரஞ்சு, ஆப்பிள் அல்லது திராட்சைச் சாற்றில் உள்ளது. பழச்சாறுகள் உயர் வீதாசாரத்தில் ஃபுருக்ட்டோசைக் கொண்டிருந்தபோதும், இது தூய டெக்ஸ்ட்ரோசைவிட மெதுவாகவே வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகும். மாறாக சுமார் 4-5 அவுன்ஸ் (120-150 மி.லீ) சாதாரண (உணவல்லாத) சோடாவும் செயலாற்றக்கூடும், அதோடு சுமார் ஒரு துண்டு ரொட்டி, சுமார் 4 பிஸ்கட்டுகள் அல்லது பெரும்பாலான மாச்சத்தான உணவுகளின் சுமார் ஒரு பரிமாறுதலிலும் கிடைக்கலாம். மாச்சத்து விரைவாக குளூக்கோசாகச் சமிபாடடையும் (நபர் அகார்போஸ் உள்ளெடுத்தாலொழிய), ஆனால் கொழுப்பு அல்லது புரதத்தைச் சேர்த்தால் அது சமிபாட்டைத் தடுக்கும். முழுமையாகக் குணமாக 10 - 20 நிமிடங்களை எடுத்தாலும், நோயறிகுறிகள் மேம்பாடடைவது 5 நிமிடங்களுக்கும் தொடங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உணவளித்தலானது குணப்படுத்தலை வேகமாக்காது. அந்நபருக்கு நீரிழிவு உள்ளதெனில் பிற்பாடு எளிதாக இரத்த சர்க்கரை மிகைப்பை உண்டாகும்.

வாயால் கொடுக்க முடியாத (போராடும் தன்மை காரணமாக) அல்லது வாயால் கொடுக்கக் கூடாத (வலிப்புத்தாக்கங்கள் அல்லது உணர்ச்சியற்றநிலை காரணமாக) இரத்தச் சர்க்கரைக் குறைவின் இதுபோன்ற விளைவுகளால் ஒரு நபர் அவதிப்படுகிறார் என்றால், EMTகள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அல்லது மருத்துவமனையிலுள்ள நபர்கள் போன்றவர்கள் ஒரு IV ஐ நிறுவி வயதைப் பொறுத்து மாறுபடும் செறிவுகளிலான டெக்ஸ்ட்ரோசை (குழந்தைகளுக்கு 2cc/kg டெக்ஸ்ட்ரோஸ் 10%, சிறுவர்களுக்கு டெக்ஸ்ட்ரோஸ் 25%, மற்றும் வயது வந்தவர்களுக்கு டெக்ஸ்ட்ரோஸ் 50%) நாளத்துள்ளாக வழங்கலாம். இந்த கரைசல்களை வழங்குவதில் மிகக் கவனம் எடுக்க வேண்டும், ஏனெனில் IV ஆனது ஊடுருவப்பட்டால் அவை மிகுந்த சிதைவை ஏற்படுத்தக்கூடியன. ஒரு IV ஐ நிறுவ முடியவில்லை என்றால், நோயாளிக்கு 1 முதல் 2 வரையான மில்லிகிராம்கள் குளூக்கோகானை தசையூடான ஊசிமருந்தில் செலுத்தலாம். நீரிழிவு இரத்தச் சர்க்கரைக் குறைவு என்ற கட்டுரையில் கூடுதல் சிகிச்சை பற்றிய தகவல்களைப் பெறலாம்.

குளூக்கோஸ் அல்லது சுக்குரோசைவிட மாச்சத்துக்கு குறைவான வினைத்திறன் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையானது ஒரு நபர் அகார்போசை எடுக்கும்போது தோன்றலாம். மாச்சத்தும், பிற சர்க்கரைகளும் உடலால் அகத்துறிஞ்சக்கூடிய ஒருசக்கரைட்டுகளாக உடைபடுவதை அகார்போஸ் மற்றும் பிற ஆல்பா-குளூக்கோசிடேஸ் தடுப்பிகள் தடுப்பதால், இந்த மருந்துகளை உள்ளெடுக்கும் நோயாளிகள் இரத்தச் சர்க்கரைக் குறைவை நேர்மாறாகத் திருப்புவதற்காக குளூக்கோஸ் மாத்திரைகள், தேன் அல்லது பழரசம் போன்ற ஒருசக்கரைட்டுகளைக் கொண்டுள்ள உணவுகளைக் கட்டாயமாக உள்ளெடுக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்

இரத்தச் சர்க்கரைக் குறைவு மேலும் தொடராமல் தடுப்பதற்கான மிகவும் செயற்திறனான வழியானது அந்நோய் ஏற்படுவதற்கான காரணத்தில் தங்கியுள்ளது.

நீரிழிவு இரத்தச் சர்க்கரைக் குறைவு மேலும் தொடரும் அபாயத்தைப் பெரும்பாலும் இன்சுலினின் அளவு அல்லது பிற மருந்துகளின் அளவைக் குறைப்பதன்மூலம், அல்லது வழக்கத்துக்கு மாறான நேரங்கள், உயர் நிலை உடற்பயிற்சிகள் அல்லது அல்கஹால் உள்ளெடுத்தல் ஆகியவற்றின்போது இரத்த சர்க்கரை சமநிலையைக் கூடுதல் உன்னிப்பாகக் கவனிப்பதன்மூலம் பெரும்பாலும் குறைக்க முடியும் (ஆனால் அனைத்து சமயங்களிலும் அல்ல).

உடன்பிறந்த வளர்சிதை மாற்றப் பிழைகளில் பெரும்பாலானவற்றுக்கு சாப்பிடாமல் இருக்கும் நேரத்தின் இடைவெளிகளைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல் அல்லது மேலதிக மாச்சத்துத் தேவையாகும். இதை, வகை 1 கிளைக்கோஜன் சேமிப்பு நோய் போன்ற மிகவும் தீவிரமான குறைபாடுகளுக்கு, ஒவ்வொரு சில மணி நேரங்களிலும் அல்லது தொடர்ச்சியான இரைப்பைக்குரிய உட்செலுத்துதல் மூலம் சேளமாவு வடிவத்தில் அளிக்கலாம்.

சரியான வடிவம் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, இன்சுலின் மிகைப்பான இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு பல சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிறப்பிலுள்ள இன்சுலின் மிகைப்பின் சில வடிவங்கள் டயஸோக்ஸைட்(டயாசொக்சைட்) அல்லது ஆக்ட்ரியோடைட்டுக்கு (ஆக்டிரோடைட்) பதிலளிக்கின்றன. இன்சுலின் மிகைப்பு என்பது குவிய அல்லது வலியற்ற இன்சுலின் உருவாக்கும் கணையக் கட்டிகள் காரணமாக ஏற்படுகின்றபோது, கணையத்தின் மிகைப்புச் செயற்பாடுள்ள பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குவதானது குறைந்த ஆபத்துடன் நோயைத் தீர்க்கும். பிறப்பிலுள்ள இன்சுலின் மிகைப்பானது பரவலான மற்றும் மருந்துகளுக்கு பணியாததாக இருக்கும்போது, கடைசிக் கட்டத்தில் கிட்டத்தட்ட மொத்த கணையத்தையும் நீக்கிவிடுவதே சிகிச்சையாக இருக்கலாம், ஆனால் இந்த நிலையில் உறுதி குறைந்த செயல்திறன்மிக்கதாகவும், கூடுதல் சிக்கல்கல் நிறைந்ததாகவும் இருக்கும்.

தாழ் பிட்டூயிட்டரியம் அல்லது சிறுநீரகச்சுரப்பி போதாமை போன்ற வளரூக்கிக் குறைபாடுகளால் வரும் இரத்தச் சர்க்கரைக் குறைவை, சரியான வளரூக்கியை மாற்றிக்கொடுக்கும்போது பொதுவாக நிறுத்தாம்.

தேவையற்றுக்கிடக்கும் நோய்க்குறி மற்றும் அறுவைச்சிகிச்சைக்குப் பின்னான பிற நிலமைகள் காரணமாக ஏற்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலம் மிகச் சிறப்பாக குணமாக்கலாம். மாச்சத்துகளுடன் கொழுப்பு மற்றும் புரத்தத்தை உள்ளடக்கும்போது அது சமிபாட்டைக் குறைத்து, ஆரம்ப இன்சுலின் சுரப்பைக் குறைக்கக்கூடும். மாச்சத்துச் சமிபாட்டை மெதுவாக்குகின்ற குளுக்கோசிடேஸ் தடுப்பியைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிகிச்சைக்கு இதன் சில வடிவங்கள் பதிலளிக்கும்.

நிரூபித்துக் காட்டக்கூடியதாக தாழ் இரத்த குளூக்கோஸ் மட்டங்களுடனான எதிர்வினையாற்றக்கூடிய இரத்தச் சர்க்கரைக் குறைவு என்பது பெரும்பாலும் முன்னறிந்து கொள்ளக் கூடிய தொந்தரவாகும், இதை மாச்சத்தை கொழுப்புடனும் புரதத்துடனும் சேர்த்துச் சாப்பிடுவதை தவிப்பதன் மூலம், காலை அல்லது பின்னேர சிற்றுண்டிகளைச் சேர்ப்பதன் மூலம் மற்றும் அல்கஹால் உள்ளெடுப்பதைக் குறைப்பதன் மூலமும் தவிர்த்துக்கொள்ளலாம்.

நோயறிகுறிகள் இருக்கும் சமயத்தில், நிரூபித்துக் காட்டக்கூடியதாக தாழ் குளூக்கோஸ் மட்டங்களின்றிய நோய் மூலம் அறியாத உணவுக்குப் பின்னான நோய்க்குறியானது அதிக நிர்வாக சவாலாக இருக்கலாம். சாப்பிடும் முறைகளை மாற்றுதல் (சிறிய உணவுகள், அளவுக்கதிகமான சர்க்கரையைத் தவிர்த்தல், மாச்சத்துக்கள் மட்டுமன்றி கலவையான உணவுகள்), கஃபீன் போன்ற வினையூக்கிகள் உள்ளெடுப்பைக் குறைத்தல் மூலமாக அல்லது அழுத்தத்தைக் குறைப்பதற்கு வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக பலர் மேம்பாட்டைக் கண்டுள்ளனர். இந்தக் கட்டுரையின் பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்.

முழுமையான மருந்தாக இரத்தச் சர்க்கரைக் குறைவு

இரத்தச் சர்க்கரைக் குறைவு என்பது நவீன மாற்று மருந்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகவும் உள்ளது. இது மாறிய மனநிலையின் நோயறிகுறிகளின் மீண்டும் மீண்டும் நிகழும் நிலையையும், தற்சார்புடைய புலன் உணர்வு சார்ந்த செயல்திறனையும் குறிக்கிறது, சில வேளைகளில் அட்ரீனல்வினையிய நோயறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இவை தாழ் இரத்த குளூக்கோசுடன் இணைந்ததாக அல்லது தொடர்பற்றதாக இருக்கலாம். பிரதானமாக, மாறிய மனநிலை, நடத்தை மற்றும் உளச் செயல்திறன் ஆகியவையே நோயறிகுறிகளாகும். வழமையாக, இந்த நிலைக்கு எளிமையானது முதல் விரிவுபடுத்தியது வரையான உணவு மாற்றங்களால் சிகிச்சையளிக்கப்படும். இந்த நிலையை நிர்வகிப்பது குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்குவதென்பது மாற்று மருந்து குறித்துக் கவனமெடுத்துள்ளது.

மேலும் பார்க்க

குறிப்புதவிகள்

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் hypoglycemia
  2. Cryer, Philip E. (2001). "Hypoglycemia". in Jefferson L, Cherrington A, Goodman H, eds. for the American Physiological Society. Handbook of Physiology; Section 7, The Endocrine System.. II. The endocrine pancreas and regulation of metabolism.. New York: Oxford University Press. பக். 1057–1092. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0195113268. 
  3. 3.0 3.1 Cryer PE, Axelrod L, Grossman AB, Heller SR, Montori VM, Seaquist ER, Service FJ (March 2009). "Evaluation and management of adult hypoglycemic disorders: an Endocrine Society Clinical Practice Guideline". J. Clin. Endocrinol. Metab. 94 (3): 709–28. doi:10.1210/jc.2008-1410. பப்மெட்:19088155. 
  4. Cryer, Philip E. (1997). Hypoglycemia: Pathophysiology, Diagnosis, and Treatment. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-511325-X. இணையக் கணினி நூலக மையம்:36188385. 
  5. 5.0 5.1 Koh TH, Eyre JA, Aynsley-Green A (1988). "Neonatal hypoglycaemia--the controversy regarding definition". Arch. Dis. Child. 63 (11): 1386–8. doi:10.1136/adc.63.11.1386. பப்மெட்:3202648. 
  6. 6.0 6.1 Cornblath M, Schwartz R, Aynsley-Green A, Lloyd JK (1990). "Hypoglycemia in infancy: the need for a rational definition. A Ciba Foundation discussion meeting". Pediatrics 85 (5): 834–7. பப்மெட்:2330247. 
  7. 7.0 7.1 Cornblath M, Hawdon JM, Williams AF, Aynsley-Green A, Ward-Platt MP, Schwartz R, Kalhan SC (2000). "Controversies regarding definition of neonatal hypoglycemia: suggested operational thresholds". Pediatrics 105 (5): 1141–5. doi:10.1542/peds.105.5.1141. பப்மெட்:10790476. 
  8. 8.0 8.1 Tustison WA, Bowen AJ, Crampton JH (1966). "Clinical interpretation of plasma glucose values". Diabetes 15 (11): 775–7. பப்மெட்:5924610. 
  9. 9.0 9.1 9.2 [edited by] John Bernard Henry (1979). Clinical diagnosis and management by laboratory methods. Philadelphia: Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-4639-5. இணையக் கணினி நூலக மையம்:4884633. 
  10. Clarke WL, Cox D, Gonder-Frederick LA, Carter W, Pohl SL (1987). "Evaluating clinical accuracy of systems for self-monitoring of blood glucose". Diabetes Care 10 (5): 622–8. doi:10.2337/diacare.10.5.622. பப்மெட்:3677983. 
  11. Gama R, Anderson NR, Marks V (2000). "'Glucose meter hypoglycaemia': often a non-disease". Ann. Clin. Biochem. 37 ( Pt 5): 731–2. doi:10.1258/0004563001899825. பப்மெட்:11026531. 
  12. de Pasqua A, Mattock MB, Phillips R, Keen H (1984). "Errors in blood glucose determination". Lancet 2 (8412): 1165. பப்மெட்:6150231. 
  13. Horwitz DL (1989). "Factitious and artifactual hypoglycemia". Endocrinol. Metab. Clin. North Am. 18 (1): 203–10. பப்மெட்:2645127. 
  14. Samuel Meites, editor-in-chief; contributing editors, Gregory J. Buffone... [et al.] (1989). Pediatric clinical chemistry: reference (normal) values. Washington, D.C: AACC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-915274-47-7. இணையக் கணினி நூலக மையம்:18497532. 
  15. Cryer, Philip E. (2003). "Glucose homestasis and hypoglycemia". in Larsen, P. Reed, ed.. Williams Textbook of Endocrinology (10th ). Philadelphia: W.B. Saunders. பக். 1585–1618. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-9196-X. 
  16. 20 வைட் என்.ஹெச், ஸ்கர் டி, கிரேயர் பி.ஈ, பையர் டி.எம், லெவண்டோஸ்கி எல், சாண்டியாகோ ஜே.வி: ஐடெண்டிஃபிக்கேஷன் ஆஃப் ரைப் ௧ டையபெட்டிக் பேஷண்ட்ஸ் அட் இன்கிரேஸ்ட் ரிஸ்க் ஃபார் கைபோகிலைசிமியா டியுரிங் இன்ரென்சிவ் தெரபி.N Engl J Med 308:485–491, 1983
  17. 21 போலி ஜிபி. டிஇ பியோ பி. டிஇ கொஸ்மோ எஸ். ர்ரில்லோ ஜி. வென்ருரா எம்எம். மாஸ்சிபெனெடெரி எம். சன்ரெயுசனியோ எஃப். கேரிச் ஜெஇ.புரூனெட்டி பி: ரிலிஜேபிள் அண்ட் ரிபுரடக்சிபிள் ரெஸ்ட் ஃபாரடேகுவேட் குளுகோஸ் கவுன்ரரேகுலேஷன் இன் ரைப் 1 டையபெட்டிஸ்.டையபெட்டிஸ் 33:732–737, 1984
  18. edited by Allen I. Arieff, Robert C. Griggs (1992). Metabolic brain dysfunction in systemic disorders. Boston: Little, Brown. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-316-05067-9. இணையக் கணினி நூலக மையம்:24912204. 
  19. http://ajpendo.physiology.org/cgi/content/full/283/2/E207
  20. http://jcem.endojournals.org/cgi/content/full/89/9/4450
  21. "The Hypoglycemic states - Hypoglycemia". The Hypoglycemic states. Armenian Medical Network. 2007. {{cite web}}: Text "Umesh Masharani, MB, BS, MRCP(UK)" ignored (help)

புற இணைப்புகள்