பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: 2004-ம் ஆண்டு இறுதியில்
வரிசை 2:
 
==வரலாறு==
மூன்று2004-ம் ஆண்டுகளுக்குமுன்ஆண்டு இறுதியில் தமிழ் விக்கிப்பீடியாவில் [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] மட்டுமே தொடர்ச்சியாக பங்களித்து வந்தார். அந்த நேரம் ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு தமிழ் கற்கும் செருமன் பயனர் ஒருவர் சொல்லக்கேட்டு நானும், வேறு வழிகளில் ரவி, நற்கீரன், சிவகுமார் மற்றும் சிலரும் வந்து இணைந்தோம். அப்போது எங்களுக்கிருந்த சிக்கல்களில் தலையானவை தமிழில் உள்ளீடு செய்வதிலிருந்த இடர்களும் தமிழ் கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துவதும்தான். கட்டுரை ஆக்கம் தொடர்பான எங்கள் உரையாடல்கள் கலைச்சொற்கள் தொடர்பிலேயே இருந்தன. [[தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]] வெளியிட்ட கலைச்சொல் அகரமுதலிகள்<ref>http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=&OptSearch=Full&id=All</ref> [[ஒருங்குறி]]யில் இல்லாமலும் எளிதில் [[தேடுபொறி]]களைக் கொண்டு தேட முடியாத நிலையிலும் இருந்தன. சிக்காகோ பல்கலைக்கழகத்தினர் தொகுத்து வெளியிட்ட [[தெற்காசிய மொழிகளுக்கான அகரமுதலிகள்|தெற்காசிய மொழிகளுக்கான அகரமுதலிகளைப்]]<ref>http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil</ref> பற்றி எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
 
பின்னர் சில திங்கள்கள் கழிந்து ரவி தமிழ் விக்சனரியைத் துவக்குவதில்/உயிர்ப்பிப்பதில் முனைந்தார். அப்போது இந்தக் கலைச்சொற்களை அங்கு ஒருங்குறியில் பதிவேற்றினால் பயனுள்ளதாக இருக்கும் என தோன்றியது. இதற்காக [[பெர்ள் நிரலாக்கமொழி]]யில் சில செய்நிரல்கள் எழுதினேன். அவற்றைக் கொண்டு த.இ.ப. அகரமுதலி ஒன்றை பதிவிறக்கி நிரல்வழியாகவே ஒருங்குறிக்கு மாற்ற முயன்றேன். ரவி அவற்றை மெய்ப்பார்க்கையில் பல வழுக்கள் இருப்பதைக் கண்டறிந்தார். பின்னர் இந்தத் திட்டத்தில் பெரிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.