"புகாட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 ஆண்டுகளுக்கு முன்
File:Bugatti Typ 35C Grand Prix Racer 1926.jpg|thumb|250px|ஃப்ரான்ஸின் பந்தய வண்ணமான நீலம் பூசப்பட்ட வகை 35சி (1926).
இதன் நிறுவனரான எட்டோர் புகாட்டி [[இத்தாலி]] நாட்டில் மிலன் நகரில் பிறந்தார்; இவரது பெயர் கொண்ட விசைப்பொறி வண்டி நிறுவனம் அல்சேஸில் உள்ள மோல்ஷெய்ம் நகரத்தில் 1909ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனமானது தனது வாகனங்களின் சிறந்த பொறியியல் தரத்திற்கும், எட்டோர் குடும்பத்தாரின் கலையுணர்வுக்கு எடுத்துக்காட்டாக (அவர் தந்தை, கார்லோ புகாட்டி (1856-1940) என்பவர் ஒரு முக்கியமான புதுமையான கலைத் தளவாடங்கள் மற்றும் நகை வடிவமைப்பாளர் ஆவார்) அதன் வடிவங்கள் வெளிப்படுத்திய கலையுணர்ச்சிக்கும் சிறந்த பெயர் பெற்றிருந்தது.
 
முதன் முதலான மோனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பரிசைப் பெற்றதன் மூலம், துவக்க காலத்து கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்நிறுவனம் பெரும் வெற்றியை ஈட்டியது. ஓட்டுநர் ஜீன்-பியரி விமைல்(Jean Pierre Wimille) (1937ஆம் ஆண்டு ராபர்ட் பெனாயிஸ்ட்(Robert Benoist) என்பவருடனும் மற்றும் 1939ஆம் ஆண்டு பியரி வேரான்(Pierre Veyron) என்பவருடனும்) 24 ஹவர்ஸ் ஆஃப் லெ மேன்ஸ் என்னும் போட்டியில் இரு முறை வெற்றி அடைந்தமையால் நிறுவனத்தின் வெற்றி சிகரத்தை அடையலானது.
 
 
===வடிவமைப்பு===
புகாட்டியின் வாகனங்கள் தமது இயந்திர உருவகத்திற்கு ஈடாகக் கலைப் பொருட்களாகவும் திகழ்ந்தன. பொறிப்பகுதிகள் கைகளால் தேய்க்கப்பட்டன; இது மேற்பரப்புகள் தட்டையாக இருந்து அதனால் அடைப்பதற்கு அடைவளையங்களின் தேவை இல்லாமலிருப்பதை உறுதி செய்தது; வெளிப்புறம் தென்படுவதான பொறியின் பகுதிகள் பெரும்பாலும் கிலோச் (பொறியால் திருப்பப்பட்ட) பூச்சுகளைக் கொண்டு ஒவ்வொரு பற்றுக்கருவியிலும் பாதுகாப்புக் கம்பிகள் கடினமான வேலைப்பாடுகளுடன் நுழைக்கப்பட்டிருந்தன. அநேக உற்பத்தியாளர்கள் இருசுடன் சுருள்விற்களை முடுக்குவதைப் போல அல்லாமல், புகாட்டியின் இருசுகள் அடித்து உருவேற்றப்பட்டன; இதனால் இருசில் மிகக் கவனத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு துளை மூலம் சுருள் வில் நுழைந்து செல்லுமாறு அமைக்கப்பட்டது. இது குறைவான பாகங்களைப் பயன்படுத்தும் ஒரு நேர்த்தியான தீர்வாக அமைந்தது. நீடித்து உழைக்கக்கூடிய தன்மையைக் குவிமையப்படுத்துவதன் காரணமாக, தமது முதன்மை போட்டியாளரான பென்ட்லியின் வாகனங்களை "உலகின் அதி வேக பார விசைப்பொறி வண்டிகள்" என்று விவரித்தார்.
 
புகாட்டியைப் பொறுத்தவரை "எடையே எதிரி".
 
==மாதிரிகள் ==
261

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/531290" இருந்து மீள்விக்கப்பட்டது