லடிஸ் வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "வில்லிசைக் கலைஞர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''லடிஸ் வீரமணி''' (இறப்பு: [[மே 5]], [[1995]]) [[இலங்கை]]யில் மேடை நாடகத்துறையில் நடிகராக, நாடகாசிரியராக, இயக்குனராக அறியப்பட்டவர். இவர் இயக்கிய நாடகங்களில் 'சலோமியின் சபதம்', 'மதமாற்றம்' என்பன குறிப்பிடற்குரியனவாகும். அரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையின் ஆற்றல் மிகுந்த கலைஞராக தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார்.
 
==நாடக உலகில்==
==வில்லுப்பாட்டுக்கலைஞர்==
[[கொழும்பு]], ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிய ‘மனோரஞ்சித கான சபா’விலிருந்து வெளிவந்த கலைஞர்களில் முன்னோடி நடிகவேள் லடிஸ் வீரமணி ஆவார். [[1945]] இல் மல்லிகா என்ற நாடகத்தின் மூலம் தனது நாடகவுலக பிரவேசத்தை மேற்கொண்டார்.
'மஹாகவி'யின் 'கண்மணியாள் காதை'யை [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டா]]க பல மேடைகளில் செய்தவர்.
 
[[1954]] ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த கலைவாணர் [[என். எஸ். கிருஷ்ணன்]] - [[டி. ஏ. மதுரம்|மதுரம்]] குழுவினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் லடிஸ் வீரமணியின் நடிப்புக்காக "நடிகவேள்" என்ற பட்டத்தை வழங்கினார் என். எஸ். கே.
 
ஆரம்ப காலங்களில் இவரை நெறிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஏ. இளஞ்செழியன். மற்றவர் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான [[அ. ந. கந்தசாமி]]. அ. ந. கந்தசாமி எழுதிய ‘மத மாற்றம்’ என்ற நாடகம் தமிழ் நாடக மேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ‘மதமாற்றத்தை’ சிறப்பாக நெறியாள்கை செய்தார் லடீஸ் வீரமணி. அ. ந. கந்தசாமி [[மஹாகவி|மகாகவி]]யிடம் வீரமணியை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அவருக்காகவே கண்மணியாள்காதை என்ற [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டை]] மகாகவி எழுதினார்.
 
83 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திலிருந்தார் வீரமணி. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ‘கண்மணியாள்காதை’ என்ற வில்லிசை நிகழ்ச்சியை அங்கு நடத்தினார்.
 
==திரைப்படங்களில்==
* [[வெண்சங்கு (திரைப்படம்)|வெண்சங்கு]]
* [[வாடைக்காற்று (திரைப்படம்)|வாடைக்காற்று]]
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/06/06/?fn=f1006068 தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு], [[தினகரன்]], ஜூன் 6, 2010
 
[[பகுப்பு:ஈழத்துக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லடிஸ்_வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது