தமிழ் படம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,715 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| imdb_id =
}}
 
தமிழ்ப் படம், ஒற்றை ஆளாகத் தன்னந்தனியாக இருந்துகொண்டு பத்துப் பதினைந்து பேரை அடித்து வீழ்த்துபவன்தானே நமது கதாநாயகன்? அழகாகவும் கவர்ச்சியாகவும் வந்து, அவனைக் காதலிப்பது ஒன்றையே கடமையாகக் கொண்டவள்தானே நமது கதாநாயகி? கடமையோ கடமை என சதா அவன் அலைந்துகொண்டிருக்க, காதலோ காதல் என சதா இவள் அலைந்துகொண்டிருக்க அன்றைய கருப்பு-வெள்ளை எம்ஜிஆர் படங்கள் தொடங்கி இன்றைய விதவிதமான கலர்க் கதாநாயகர்கள் வரையில் நமது தமிழ்ப் படங்களில் என்ன பெரிய மாற்றம் வந்துவிட்டது? இந்தக் கேள்வி யாருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம்.
 
ஆனால், குறுகுறுப்பும் துடிப்பு மிக்க இன்றைய தலைமுறை இளம் சினிமாக்காரர்களுக்கே இப்படித் தோன்றினால் என்னவாகும்? இப்படியொரு கலக்கல் காமெடிப்படம் ஒன்று உருவாகும். ஆமாம், நமது தமிழ் சினிமாவைக் கிண்டலடித்து இப்படியும் ஒரு படம் எடுக்கமுடியுமா என்று பெரிய பெரிய சினிமா பிஸ்தாக்கள்கூட மூக்கின்மேல் விரலைவைத்துப் புருவம் உயர்த்தும் அளவுக்கு ஒரு படம் வந்திருக்கிறது, ‘தமிழ்ப்படம்’ என்றே அதற்குப் பெயரும் சூட்டப்பட்டு. துணிவான முயற்சிதான். கன கச்சிதமாக, எல்லோரும் சிரித்து ரசிக்கும் தரத்தில் ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு சினிமா. முதலில் இந்தத் ‘தமிழ்ப்படம்’ குழுவினரை மனதாரப் பாராட்டிவிட்டு அதுபற்றிப் பேசுவோம்.
 
நீண்ட காலமாக தமிழ் சினிமா கொடுத்து வந்த மசாலா ‘பில்டப்’களை படீர் படீரென்று போட்டு உடைக்கிற கதையமைப்பு. ரொம்ப ரொம்பப் புதுவிதமான கதை சொல்லும் முறை. அதே நேரம் நாம் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன சமாச்சாரங்களையெல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் சந்தி சிரிக்க வைக்கிற லாவகம். அப்பப்பா, அருமை.
 
கருத்தம்மாவிலிருந்து தளபதி, சின்னத்தம்பி, அபூர்வ சகோதரர்கள், என் ராசாவின் மனசிலே, மொழி என்று எந்தப் படத்தையும் வம்புக்கிழுக்கத் தயங்கவே இல்லை. ஆனால் வழக்கம் போல இல்லாமல் உல்டாவாக. கிராமத்தில் ஆண் குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அதைக் கள்ளிப்பால் தந்து கொன்று விடவேண்டும் என்பது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள். அவர்களோடு தொடர்பு வைத்தால் ஒரு குறிப்பிட்ட மேனரிசத்தைக் காட்டி, அந்த நடிகரின் படத்தை நூறு முறை பார்ப்பது தான் தண்டனையாம். இப்படித் துவங்குகிறது படம். அதே ‘கருத்தம்மா’ பெரியார்தாசன் (இதில் அவர் பெயர் மொக்கை) தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தையைக் கொன்றுவிட பரவை முனியம்மாவுக்குக் கட்டளையிட, பிறந்த குழந்தையின் வேண்டுகோள்(?)படி குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவிடுகிறார். குழந்தை சிறுவனாக இருக்கும்போது மார்க்கட்டில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கோட்க விரும்புகிறான். பாட்டி முனியாம்மாவோ அவனுக்கு பத்து வயதுதான் ஆகிறது என்று சொல்ல, சிறுவன் நான் எப்படிப் பெரியவனா ஆகிறது? என்று கேட்கிறான். பாட்டி சொல்கிறாள், “நீ போய் அந்த சைக்கிள் பெடலைச் சுற்று!”
 
==வெளியிணைப்புகள்==
 
*[http://www.indiaglitz.com/channels/tamil/article/49309.html தமிழ்ப் படம்]
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
1,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/534711" இருந்து மீள்விக்கப்பட்டது