விருந்தோம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
===பண்டைய உலகு===
பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு, விருந்தோம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதி செய்து கொள்வது ஒரு புரவலனின் கடப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான [[எக்ஸெனியா]] (இதுவே இறைவன் இதில் ஈடுபடுகையில் தியோக்ஸெனியா என்னும் சொல்லானது) இவ்வாறு விருந்தாளி-நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.
 
பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப் பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை [[பாசிஸ் மற்றும் ஃபிலோமின்]] கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்தியக் கடவுளரான [[ஜீயஸ்]] மற்றும் [[ஹெர்மெஸ்]] ஆகியோர் [[ஃபிர்ஜியா]] நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில், பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும், இத்தம்பதி சிறந்த முறையில் விருந்தோம்புகின்றனர். தங்களிடம் இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அவர்கள் அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுளர் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை அளிக்கின்றனர். மேலும், விருந்தோம்பும் பண்பற்ற இதர நகர மக்களை வெள்ளத்தில் அமிழ்ந்து போகவிட்டு, இத்தம்பதியை மட்டும் காப்பாற்றுகின்றனர்.
 
===செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்புதல்===
"https://ta.wikipedia.org/wiki/விருந்தோம்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது