"ரத்தன் டாட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎தொழில் வாழ்க்கை: சிறு திருத்தம்)
[[1991]] ஆம் ஆண்டில், அவர் [[ஜே.ஆர்.டி. டாடா]] விடமிருந்து குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். வயதானவர்களை வெளியேற்றி இளைய மேலாளர்களை நியமித்தார். அதன் பிறகு, டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர் பெரும் பங்காற்றியுள்ளார். இன்று, இந்திய பங்குச் சந்தையில் உள்ள வணிக நிறுவனங்களில் மிக அதிகமான சந்தை முதலீடு உள்ளதாக டாடா குழுமம் திகழ்கின்றது.
 
ரத்தனின் வழி காட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பொது நிறுவனமானது. டாடா மோட்டார்ஸ் [[நியூ யார்க் பங்குச் சந்தை]] யில் பட்டியலானது. [[1998]] ஆம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் அவரது சிந்தனையில் பிறந்த [[டாடா இண்டிகா|டாடா இண்டிகாவை]] அறிமுகப்படுத்தியது.
 
2007 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், டாடா சன்ஸ் நிறுவனம், எஃகு மற்றும் அலுமினியம் தயாரிக்கும் ஆங்கிலோ-டச்சு நிறுவனமான [[[கோரஸ் குழுமம்|கோரஸ் குழுமத்தைக்]] கைப்பற்றியது. இக்கைப்பற்றல் மூலம் ரத்தன் டாடா இந்திய வணிகக் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற ஆளுமையானார். இந்த இணைப்பு உலகிலேயே ஐந்தாவது பெரிய எஃகு உற்பத்தியாளரை தோற்றுவித்துள்ளது.
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/540618" இருந்து மீள்விக்கப்பட்டது