சஞ்சய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
 
==மாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவு==
1971 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவை, விலை குறைந்த, திறன்வாய்ந்த, உள்நாட்டில் தயாரித்த, நடுத்தர மக்கள் எளிதில் வாங்கக்கூடிய 'மக்களுக்கான தானுந்து' ஒன்றைத் தயாரிக்கக் கருதியது. சஞ்ஜயிடம் அனுபவமோ, திட்ட வரைவோ, எந்த ஒரு நிறுவனத்துடனும் பிணைப்போ இல்லாதபோதும், அதற்கான தயாரிப்பு உரிமத்தையும், ஒப்பந்த உரிமையையும் அவர் பெற்றார். இம்முடிவைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் பெரும்பாலும் இந்திராவைக் குறிவைத்தன. ஆனால், 1971 இல் நிகழ்ந்த [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்காளதேச விடுதலைப் போரும்]], [[பாகிஸ்தான்]] மீது பெற்ற வெற்றியும் இந்த சச்சரவை மூழ்கடித்தன. இந்திராவின் வெற்றியும், அதைத் தொடர்ந்து தேர்தலில் காங்கிரஸ் பெற்ற மகத்தான வெற்றியும் இந்திரா காந்தியை மேலும் அதிகார ஆற்றல் மிக்கவராக்கின. இன்று இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் [[மாருதி சுசூக்கி|மாருதி உத்யோக்]] என்ற நிறுவனத்தை, சஞ்ஜய் காந்தி நிறுவினார், ஆனால் அவரது வாழ்நாளில் அந்நிறுவனம் எந்த வாகனத்தையும் உற்பத்தி செய்யவில்லை. சோதனைக்கான மாதிரி வாகனம் ஒன்று, முன்னேற்றத்தைக் காட்டும் வகையில் காட்சிப் பொருளாக முன் வைத்தது மிகுந்த கண்டனத்துக்குள்ளானது. பொது மக்களின் கருத்து சஞ்ஜய் காந்திக்கு எதிராகத் திரும்பியது. பலர் ஊழல் பெருகி வருவதாக ஆட்சேபம் தெரிவித்தனர். மேற்கு ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் ஏஜி என்னும் நிறுவனம் முன்னதாக VW பீட்டில் என்னும், உலக அளவில் பிரபலமான, மக்கள் வாகனம் ஒன்றைத் தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வந்தது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இணைந்து செயல்படுவதன் மூலம் மக்கள் வாகனத்தின் (மாருதி) இந்திய மாதிரியைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆயும் பொருட்டு, சஞ்ஜய் காந்தி, அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். மேலும் [[ஜப்பான்]] நாட்டு [[சுசூக்கி]] மோட்டார் கொர்போரேசன் நிறுவனத்திடம் இந்தியாவில் மக்களுக்கான மலிவான வாகனங்களை தயாரிப்பதற்கான வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனது. மேற்கு ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தை இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளதை சுசுகி நிறுவனம் அறிந்தது. இந்தியாவின் முதல் மக்கள் வாகனத்தைத் (மாருதி 800) தயாரிக்கும் போட்டியில் இருந்து வோல்க்ஸ்வேகனை வெளியேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் சுசுகி நிறுவனம் செய்தது.[citation needed]. ஜப்பானிலும் கிழக்காசிய நாடுகளிலும் மிகப் பிரபலமான தனது '796' (ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மற்றுமொரு பெரிய வெற்றி பெற்றது) என்ற மாதிரியின் வடிவத்தை அது அரசுக்கு அளித்தது.
 
==நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது